10 இடங்களில் சதம் – கொளுத்தும் வெயில்..

0
229

தமிழகத்தில் முன் எப்போதும் அளவுக்கு வெயில் இம்முறை சுட்டெரித்து வருகிறது. ஒரே நாளில் தமிழகத்தின் பாத்து இடங்களில் நூறு டிகிரிக்கும் அதிகமாக வெயிலின் அளவு பதிவு செய்யப்பட்டு உள்ளது. முன்பெல்லாம் கடுமையான வெயிர் காலங்களில் வேலூரில் மட்டும் தான் தமிழ்நாட்டில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தும். இப்போது எல்லா இடங்களிலும் வெயிலின் கொடுமை அதிகரித்துள்ளது.

வெயில் நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
தெற்கு, தென்கிழக்கு பகுதியில் இருந்து காற்று வீசுவதால் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. எனினும், கோடை காலத்துக்கான வெப்பம் நீடிக்கிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு இதே வெப்ப நிலை நீடிக்கும். வெப்பத்தின் அளவு சராசரியாக 98 முதல் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருக்கும். சில இடங்களில் வெப்ப சலனத்தினால் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றனர்.
வெள்ளிக்கிழமை பதிவான வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்):
கரூர் பரமத்திவேலூர், தருமபுரி,
திருப்பத்தூர், வேலூர், சேலம் 105
திருச்சி 104
மதுரை 103
பாளையங்கோட்டை 102
கோவை, சென்னை 101

உங்கள் கருத்தை தெரிவிக்க