காங்கிரஸ் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல்: 33 பேர் அறிவிப்பு

0
89

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்டது.

வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வந்தது. பட்டியலுடன் டெல்லி சென்ற மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அங்கு கட்சியின் மேலிடத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், முதல் கட்டமாக வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் 33 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

அவர்கள் விவரம் வருமாறு:

1.திருத்தணி – ஏ.ஜி.சிதம்பரம்

2.அம்பத்தூர் – ஹசன் மவுலானா

3.ராயபுரம் – மனோகர்

4.சோளிங்கர் – ஏ.எம்.முனிரத்னம்

5.ஓசூர் – கோபிநாத்

6.கலசப்பாக்கம் – செங்கம் ஜி.குமார்

7.ஆத்தூர் – அர்த்தநாரி

8.சங்ககிரி – டி.கே.ராஜேந்திரன்

9.நாமக்கல் – ஆர்.செழியன்

10.தாராபுரம் – வி.எஸ்.காளிமுத்து

11.கோபி – எஸ்.பி.சரவணன்

12.உதகமண்டலம் – ஆர்.கணேஷ்

13.சூலூர் – வி.எம்.சி. மனோகரன்

14.கோவை தெற்கு – மதுரா எஸ்.ஜெயகுமார்

15.வேடச்சந்தூர் – சிவசக்தி

16.கரூர் – சுப்பிரமணியம்

17.விளவங்கோடு – விஜயதரணி

18.குளச்சல் – ஜே.ஜி.பிரின்ஸ்

19.நாங்குநேரி – ஹெச்.வசந்தகுமார்

20.தென்காசி – பழனி

21.முதுகுளத்தூர் – எஸ்.பாண்டி

22.திருமங்கலம் – ஆர்.ஜெயராமன்

23.மதுரை வடக்கு – வி.கார்த்திகேயன்

24.காரைக்குடி – கே.ஆர்.ராமசாமி

25.அறந்தாங்கி – எஸ்.டி.ராமச்சந்திரன்

26.பட்டுக்கோட்டை – கே.மகேந்திரன்

27.பாபநாசம்- டி.ஆர்.லோகநாதன்

28.நன்னிலம் – எஸ்.எம்.பி.துரைவேலன்

29.வேதாரண்யம் – பி.வி.ராஜேந்திரன்

30.காட்டுமன்னார்கோவில் – கே.ஐ.மணிரத்னம்

31.ஜெயங்கொண்டம் – ஜி.ராஜேந்திரன்

32.முசிறி – விஜயாபாபு

33. திருச்சி கிழக்கு – ஜெரோம் ஆரோக்கியராஜ்

பகிர்ந்து
முந்தைய செய்திபெரும்பான்மையான வாக்குகள் நோட்டாவுக்கு பதிவானால் மறுதேர்தல் நடைபெறுமா?
அடுத்த செய்திவாக்காளர்களின் காலில் விழுந்து வாக்கு சேகரிக்கும் திமுக வேட்பாளர்
வலை எழுத்தில் கொண்ட பற்றால், முழு நேர வங்கிப் பணியை மூட்டை கட்டியவன்.

உங்கள் கருத்தை தெரிவிக்க