கேரள கோயிலில் தீ விபத்து – காரணம் என்ன?

0
387

கேரளா மாநிலம் கொல்லம் பராவூர் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 102 பேர் வரை பலியாயினர். முன்னூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பராவூர் புன்டிங்கல் தேவி கோவிலில் வருடம் தோறும் நடைபெறும் கோவில் திருவிழா வழக்கம் போல் இந்தாண்டும் நடைபெற்றது. அதிகாலை 3.30 மணியளவில் பட்டாசு வெடித்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும் விபத்து நிகழ்ந்த பகுதிக்கு கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி விரைந்துள்ளார். தீவிபத்து குறித்து விசாரணைககு உத்தரவிடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார்.தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கேரள அமைச்சர் தகவல்

விபத்து குறித்து கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா கூறுகையில், ”தீ விபத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு நிதியுதவி அளிக்க தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் பாதிப்படைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்” என்றார்.

வழக்கு பதிவு

தீ விபத்து நடந்த கொல்லம் கோவில் நிர்வாகத்தினர் மீது கேரள காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோல், திருவிழாவில் பட்டாசு வெடிக்க அனுமதித்தோர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதேபோல், கோயிலுக்கு பட்டாசுகள் விநியோகம் செய்த ஒபப்பந்ததாரர் சுரேந்திரன் வீட்டில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். மேலும், தலைமறைவாக உள்ள ஒப்பந்ததாரர் சுரேந்திரனை தேடி வருகின்றனர்.

பிரதமர் மோடியும் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்துள்ளார்.

உங்கள் கருத்தை தெரிவிக்க