என்ன பைக்குக்கு டிரைவரா? – பெங்களூரில் புதிய சேவை

0
84
கச்சேரி ஆரம்பம் படத்தில் வடிவேலு பைக்குக்கு டிரைவராக ஜீவா வேலைக்கு சேர்வது போல ஒரு காத்சி இருக்கும்.
அதை இப்ப நெசமாவே ஆக்கிட்டாங்க.
‘கால் – டாக்சி’ வெற்றியை அடுத்து, பன்னாட்டு நிறுவனங்களான உபேர் மற்றும் ஓலா , பெங்களூரில், சோதனை முறையில், ‘பைக் – டாக்சி’ சேவையை ஆரம்பித்துள்ளன.
பெரும்பாலான நகரங்களில், போக்குவரத்து, பெரும் சவாலாகி வரும் நிலையில், வசதியான பயணத்திற்கு, ‘கால் – டாக்சிகள்’ உதவுகின்றன. பன்னாட்டு நிறுவனங்களான, உபேர், ஓலா போன்றவை, கட்டணங்களை பெருமளவு குறைத்து, மற்ற நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி வருகின்றன.
குறைவான செலவு : இந்நிலையில், போக்குவரத்து நெரிசலில் சிக்காமலும், குறைவான செலவில் செல்ல ஏதுவாகவும், பல நாடுகளில், ‘பைக் – டாக்சி’ சேவை உள்ளது. இந்தியாவிலும், முதன்முறையாக ஹரியானா மாநிலம் குர்கானில், ‘பைக் – டாக்சி’ சேவை அறிமுகமானது. இப்போது, கர்நாடக மாநிலம் பெங்களூரிலும் இந்த சேவை துவங்கப்பட்டுள்ளது. உபேர், ஓலா நிறுவனங்கள், இந்த சேவையை துவங்கியுள்ளன.
மூன்று ரூபாய் : உபேர் நிறுவனம், குறைந்தபட்சம், 15 ரூபாயாகவும், கிலோ மீட்டருக்கு 3 ரூபாயும் கட்டணமாக நிர்ணயித்துள்ளது. ஓலா நிறுவனம் குறைந்தபட்சம், 30 ரூபாயும், கிலோ மீட்டருக்கு 2 ரூபாயும் கட்டணம் நிர்ணயித்துள்ளன. 
முதற்கட்டமாக, சோதனை அடிப்படையில் இது செயல்படுத்தப்பட்டுள்ளது. மக்களிடம் கிடைக்கும், வரவேற்பை பொறுத்து, பெங்களூரு நகர் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என, இரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன.
 எப்படி செயல்படுகிறது?
● ‘பைக் – டாக்சி’ சேவை, ‘கால் – டாக்சியை’ போன்றே இயங்குகிறது.
● சேவை பெறுபவர், ‘ஆப்’ மூலம் பதிவு செய்யலாம். இதற்னெ தனியாக, ‘ஆப்’கள் வந்துள்ளன.
● துாரம், கட்டணம் விவரங்கள், ஜி.பி.எஸ்., டிரைவர் பற்றி தகவல்கள், அனைத்து வசதிகள், இதிலும் உள்ளன.
● பைக்கை, டிரைவர், ஓட்டிவர, பின் ‘சீட்டில்’ அமர்ந்து நாம் பயணம் செய்யலாம்.
இந்த திட்டத்தின் மிகபெரிய பலவீனம்..
வேறென்ன பாதுகாப்பு தான், நிறுவனங்களின் டிரைவர்கள் இருக்கும் வரை சரி.. பின்பு யார் வேண்டுமானாலும் பதிந்து ஓட்டுனர் ஆகையில், நிறைய பாதுகாப்பு சிக்கல்கல் நிச்சயம் வரும்.
நம்ம ஊறுக்கு வரட்டும் பாத்துக்கலாம்..

உங்கள் கருத்தை தெரிவிக்க