இப்படி மிரட்டுறாங்க… பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அமைச்சர் அறிவுரை

1
16
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் எந்தவிதமான சூதாட்டத்திலும் ஈடுபடக்கூடாது என அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனால் நன்றாக விளையாடி வரும் பாகிஸ்தானுக்கு மனதளவில் மேலும் அழுத்தம் உண்டானால் இந்தியாவிற்கு நல்லது தான் எனினும் அவர்கள் இதனை மனதில் கொண்டு மிக சிறப்பாக விளையாடி விட்டால்? அப்படி எதுவும் நடக்காது என நம்புவோமாக.

இது குறித்து உமர் குல்லிடம் கேட்ட போது மீடியாவில் வருவதை பார்க்க நங்கள் எவருமே விரும்புவதில்லை என்று தெரிவித்தார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடவிருப்பதை முன்னிட்டு அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் வீரர்களின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் மாலிக் தெரிவித்தார்.

மேட்ச் ஃபிக்ஸிங் இருக்கக் கூடாது. அவ்வாறு ஏதாவது நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

பாகிஸ்தான் வீரர்கள் சுத்தமானவர்களாக இருந்தாலும், அவர்கள் யாரைச் சந்திக்கிறார்கள், யாரிடம் தொலைபேசியில் பேசுகிறார்கள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் புலனாய்வுப் பிரிவினர் கண்காணிக்கிறார்கள். லண்டனில் நிகழ்ந்த சம்பவத்தைப் போல் மீண்டும் நடந்துவிடக் கூடாது என்பதால் இது அவசியம் என்றார் அவர்.

கராச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய மாலிக், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு சில அறிவுரைகளையும் வழங்கினார்.

பயிற்சிக் காலத்தின்போது நேரத்திலேயே தூங்கி, குறித்த காலத்தில் எழ வேண்டும். போட்டிக்காக பாகிஸ்தானுக்கு அவர்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என மாலிக் கூறினார்.

கிரிக்கெட் வீரர்கள் மீது அனைவருக்கும் நிறைய அன்பு உள்ளது. போட்டியில் அவர்கள் வெல்வார்கள் என நம்புகிறோம். மக்களை ஏமாற்ற மாட்டார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

பகிர்ந்து
முந்தைய செய்திஃபுகுஷிமாவில் கதிர்வீச்சு அதிகரிப்பு
அடுத்த செய்திவிஜய் அரசியல் களத்தில் இறங்குகிறார்?
வலை எழுத்தில் கொண்ட பற்றால், முழு நேர வங்கிப் பணியை மூட்டை கட்டியவன்.