ஹர்ஷா போக்லே – கல்தா கொடுத்த பிசிசிஐ

0
130

ஹர்ஷா போக்லே இந்த பெயரை கிரிக்கெட் தெரிஞ்ச 90% பேருக்கு தெரியும். மிக நீண்ட காலமாக கிரிக்கெட் வர்ணனையில் இருக்கும் இவரை வெளிப்படை காரணம் ஏதும் இன்றி பிசிசிஐ ஐபிஎல் 9 இல் இருந்து தூக்கி உள்ளது.

ஹர்ஷா போகலே IIM இல் படித்து கிரிக்கெட் மீது கொண்ட ஆர்வத்தால் தனது ஆங்கில திறமை மூலம் கிரிக்கெட் வர்ணனையாளர் ஆனவர். ரவி சாஸ்திரி மற்றும் ஹர்ஷா போகலே இவர்கள் இருவர் தான் முதன்மையான இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர்களாக இருந்தனர்.

இந்திய – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஆன T20 போட்டியின் பொது விதர்பா கிரிக்கெட் அசோசியேசன் மூத்த அதிகாரி ஒருவர்க்கும் இவர்க்கும் இடையே சூடான விவாதம் நடந்ததாம். அது கூட காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.

இது மட்டுமின்றி இந்திய – வங்கதேசம் இந்தியே நடந்த போட்டிக்கு பின் நடிகர் அமிதாப் பச்சன் “இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர்கள் இந்திய வீரகளை பற்றியும் பேசினால் நல்லது” என்கிற ரீதியில் ஒரு ட்வீட் போட அவரை பின்தொடர்வோர் அவர் யாரை மையபடுத்தி சொல்கிறார் என துருவிய பொது, அவர் கவாஸ்கரோ மன்ஜ்ரேகரோ இல்லை என சூசகமாக சொன்னார். அப்படி பார்த்தால் குறிப்பிடும் படி மீதம் உள்ள உறுவர் இவர் தானே?

எது எப்படியோ ஹர்ஷா இந்த வாய்ப்பை பயன்படுத்தி தனது அயராது உழைத்த வாய்க்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்கட்டும்.