அடத் தலை வலியே..!

2
33
விண்வெளி வீரர்கள் தலைவலியில் இருந்து தப்புவது அவ்வளவு சுலபம் இல்லை. ஏனெனில் பாராசிட்டமால் போன்ற நோய் எதிர்ப்பு மாத்திரைகள் பலவும் விண்வெளியில் செயலற்று போவதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.

விஞ்ஞானிகள் நோய் எதிர்ப்பு மருந்துகள் விண்வெளியில் மிக விரைவிலேயே தங்கள் வீரியத்தை இழக்கின்றன என்று நிரூபித்துள்ளனர்.

நாசாவின் ஜான்சன் ஆய்வு மையம் தனது ஆராய்ச்சியின் முடிவில் விண்வெளியின் குறைந்த ஈர்ப்பு திறன், அதிக கதிர்வீச்சு தான் இதற்கு காரணங்கள் என பட்டியல் போட்டுள்ளது.

நாம் வாங்கும் சாதாரண மருந்துகள் அனைத்தும் ஒரு சில மாதங்களாவது திறன் இருக்கும் வகையிலேயே தயாரிக்கப்படுகின்றன. இருந்த போதிலும் நாம் அம்மருந்துகளை தகுந்த சூழ்நிலைகளில் வைத்து பாதுகாத்தால் மட்டுமே அவை குறிப்பட்ட காலம் வரை செயல் புரியும்.

நேரடி சூரிய வெளிச்சம், மிக குளிர்ந்த இடம், சூடான இடம் என பல காரணிகளும் அதன் செயல் திறன் மாறுபாட்டை நிர்ணயம் செய்கின்றன.

நீண்ட நாட்களுக்கு பயணம் செய்யும் விண்வெளி வீரர்கள் திடீரென ஏற்படும் தலைவலி போன்ற துன்பங்களுக்கு தாங்கள் எடுத்து கொள்ளும் மருந்துகள் பல நேரங்களில் எந்த வித மாறுதலும் ஏற்படுத்துவது இல்லை என்று புலம்பியதன் விளைவாக, இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட நாசா அதன் அடிப்படையில் தான் இவ்வாறு சொல்லியது.

அதன் ஆய்வுக்காக ஜான்சன் விண்வெளி மையத்தில் நான்கு பெட்டிகளில் அடைக்கப்பட்ட 35 வகையான மருந்துகள்  வைக்கப்பட்டு, ஒரு பெட்டி 13 நாட்களிலும், சில அதற்கு பிறகும் கடைசி பெட்டி 28 மாதங்கள் கழித்தும் சோதனை செய்யப்பட்டது.

அதன் முடிவாக மருந்துகளில் குறிப்பிட்ட காலத்திற்கு வெகு சீக்கிரமே அவை காலாவதி ஆகி விடுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கு மாற்று என்ன என்பது குறித்து விரைந்து முடிவெடுக்கப்படும் என நாசா தெரிவித்துள்ளது.

பி.கு : காலாவதி ஆன மருந்தை வீணாக்கி விடாதீர்கள், இங்கே கொடுங்கள் இந்திய நாட்டில் அதை விற்று பணம் ஆக்குவது மிக எளிது.

2 கருத்துக்கள்

  1. Good posting.Thanks.

    பதிலளிக்க

உங்கள் கருத்தை தெரிவிக்க