மாணவர்கள் கொண்டாடுவதா,திண்டாடுவதா?

5
95
சென்ற தி.மு.க ஆட்சியில் சமச்சீர் கல்வி முறை குறித்து பெரிதும் ஆலோசிக்கப்பட்டு,கடைசியில் அவசர அவசரமாக முடிவுகள் எடுக்கப்பட்டு ஒன்றாம் மற்றும் ஆறாம் வகுப்புகளில் மட்டும் அமலாக்கப்பட்டது. பல கல்வியாளர்களும் அதன் குறைப்பட்ட பாடத்திட்டத்தை எதிர்த்து இருந்தனர். தனியார் பள்ளிகளும் பாடத்திட்டம் செம்மையாக இல்லை என்று புகார் கூறினர்.

நான் என் தங்கையின் ஆறாம் வகுப்பு புத்தகங்களை சில நேரங்களில் பார்த்திருக்கிறேன், வடிவமைப்பு முந்தைய புத்தகங்களினும் பன்மடங்கு மேல் தான். புத்தகம் படிக்க இல்லை என்றாலும் அடிக்கடி பார்க்கவாவது ஆசை வரும் அப்படி இருந்தது, ஆனால் கருத்துகளும் பாடங்களும் அறிவுக்கு உகந்தவையாக நிச்சயம் இல்லை.

நான் படித்த காலத்தில் இருந்த அந்த கோர்வையான பாடங்கள் இதில் இல்லை. உதாரணமாக, தமிழ் பாடம் முன்பெல்லாம் செய்யுள் தனியே,உரைநடை தனியே,துனைப்பாடம் தனியே என பிரித்து கொடுக்கப்பட்டு இருக்கும். ஆனால் இப்போது அவை ஒன்றிணைக்கப்பட்டு பாடக் குழுக்களாக இருந்தன. அது முதல் முறை படிக்க நன்றாக இருந்தாலும், பின்னர் மீள்பார்வை இடும் போது நிச்சயம் மிகவும் தொந்தரவாக இருக்கும் என்பது புத்தகத்தை பார்க்கும் எவரும் உணரலாம்.

இதற்கிடையில், இந்த ஆண்டு மற்ற அனைத்து வகுப்புக்கும் சமச்சீர் கல்வி முறை கொண்டு வரப்பட இருந்தது. என்ன தான் இது முந்தைய ஆட்சி கொண்டு வந்ததாக இருந்தாலும், பாடத்திட்டம் சரியாக இல்லை என்றாலும் அதனை ஆராய குழுக்கள் அமைத்து அடுத்த ஆண்டு முதல் சரி செய்ய புதிய அரசு முயற்சி எடுத்து இருக்கலாம். அதனை விடுத்து இவர்களும் அவர்களை போன்றே அவசர அவசரமாக முந்தைய பாடத்திட்டத்தை ரத்து செய்து புதிய சமச்சீர் கல்வி இந்த ஆண்டு கிடையாது என்றும் பழைய முறையே கடைபிடிக்கப்படும் என்றும் அறிவித்து இருக்கிறார்கள்.

புது அரசு குழு ஒன்றை அமைத்து அடுத்த ஆண்டு முதல் சமச்சீரக்க் கல்வித் திட்டம் நன்றாக வடிவமைக்கப்பட்டு அமலாக்கப் படும் என அறிவித்து உள்ளது. இதில் சோகம் என்னவென்றால் ஐநூறு கோடி ரூபாய் வரை செலவிட்டு அச்சடிக்கப்பட்ட நூல்கள் அனைத்தும் வீணாய் போகப் போகிறது.

புதிய நூல்கள் அச்சிட சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அச்சகர்கள் அதிக தொகை கேட்கப் போவது உறுதி.

சரி என்னவாவது நடக்கட்டும், இதில் மாணவர்களுக்கு நடந்துள்ள ஒரே நல்ல விஷயம், 15 நாட்கள் அதிகமாக விடுமுறை கிடைத்துள்ளது தான்..

நடந்தது நடந்து விட்டது அடுத்த ஆண்டு முதலாவது சரியான பாடத்திட்டத்தை தமிழக அரசு முடிவு செய்ய வேண்டும். அது பிளவடைந்த ப்பட மையப்பக இல்லாமல் நவீனமும்,பழமையும் கலந்ததாக இருக்க வேண்டும் என்பது விருப்பம்.

இருந்தாலும் என் செய்வேன் நான்?
  

5 கருத்துக்கள்

  1. சரியான நேரத்தில் சரியான பதிவு , நான் கூட இதை பற்றி எழுதலாம் என்று நினைத்திருந்தேன் , முந்தி கொண்டு விட்டீர்கள், பாராட்டுக்கள்

    பதிலளிக்க
  2. தொடர்ந்து எனக்கு ஊக்கம் அளிப்பதற்கு நன்றி ARR …

    பதிலளிக்க
  3. நான் படித்த காலத்தில்\

    அய்யோ ரொம்ப பழைய காலமெல்லாம் இல்லீங்க..
    இப்பத்தான் இதற்கு ஒரு பாடத்திட்டத்திற்கு முந்தி தான்..

    பதிலளிக்க
  4. இந்த விடுமுறையில் படித்த மாணவர்களின் நிலை என்ன?

    பதிலளிக்க
  5. இந்த ஆண்டு தன் புதிய பாடத்திட்டம் வருவதாக இருந்தஹு, அதனால் மாணவர்கள் படித்திருக்க வாய்ப்புகள் குறைவே..

    வருகைக்கு நன்றி கருன்..

    பதிலளிக்க

உங்கள் கருத்தை தெரிவிக்க