இனிப்பு கசக்கும் வேளை….

0
20

கொள்கை மாற்றங்கள்

மத்திய மாநில அளவில் கொள்கை ரீதியாக சில மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன.
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என மன்மோகன் அறிவித்திருக்கிறார்.
கூடங்குளம் அணு உலை வேலைகளை தொடர ஜெயலலிதா முடிவு.
இரண்டிற்கும் பெரிதாக தொடர்பில்லை என்று கருதுபவர்கள் யாரேனும் இருந்தால் இதற்கு மேலும் இந்த பக்கத்தில் தொடர வேண்டாம்.

மழுப்பலான ஆதரவு

இத்தனை
நாளாக இந்தியா எப்போதுமே இலங்கை விஷயத்தில் மழுப்பலாகவே இருந்தது. வரும்
ஆனால் வராது என்பது போல, தமிழர்கள் நலன் காக்கப்பட வேண்டும் என்றும்
அவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க வேண்டும் என்றும் சொல்லும்.
எப்படி
என்றால் ஒரே குடும்பத்தில் உள்ள கணவன், தன் மனைவியை கொன்ற பின்னர்
பிள்ளைகள் நலம் கருதி எதுவும் செய்யப்படாமல் விடப்படுவது போல.

புறக்  காரணிகள்

திடீரென்று  இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க எடுத்துள்ள முடிவு ஏன் என சற்று ஆழ்ந்து நோக்கினால் தெளிவு அடையலாம்.

1. மின்தேவைகளை சமாளிக்க கூடங்குளம் அணு உலை திறக்கப்பட வேண்டியது
அவசியமாகிறது. இரண்டு விஷயங்களில் ஏதேனும் ஒன்றை விட்டுக் கொடுத்தால் தான்
தமிழர்களை சமாளிக்க இயலும்.
2. இதற்கும் மேல் இந்த முறை தீர்மானத்தை
கொண்டு வந்திருப்பது அமெரிக்கா , எப்போதுமே அமெரிக்காவுக்கு எதிராக
செயல்பட்டு சிக்கலில் மாட்டிக் கொள்ளும் திராணி நம் அரசியல்வாதிகளுக்கு
இருந்ததில்லை.

இப்படி உள்நோக்கங்களை மனதில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த முடிவை நாலாபக்கமும் எல்லோரும் வரவேற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.

இப்போது பிரச்னை அதில்லை, கூடங்குளம் அணு உலை.

இடைத்தேர்தல் 
முடியும் வரை கிடப்பில் போட்டதை தேர்தல் முடிந்த கையோடு முடித்து
வைத்திருக்கிறார் முதல்வர். அதுவும் இந்தியா இலங்கைக்கு எதிராக
வாக்களிக்கும் என பிரதமர் அறிவித்த நேரத்தில்.

இப்படி தொடங்குவதால் உடனே என்னை அணு உலைக்கு எதிரானவன் என முடிவு கட்டி விடவேண்டாம்.
குடுமிப்
பிடி நம் கையில் இருக்கும் போதே அதிகபட்ச பாதுகாப்பு வசதிகளையும் , மேலும்
அந்த பகுதிக்கு வேண்டியவற்றையும் கேட்டுப் பெற்று இருக்கலாம்.

இப்போது மிக சாதாரணமாகவே முடிந்து விட்டதால் பெரிதாக ஏதும் தமிழகத்திற்கு கிடைக்க வாய்ப்பில்லாது போய் விடும் போலிருக்கிறது.

இலங்கைக்கு  எதிரான தீர்மானம் நிறைவேறி விசாரணை நடக்க வேண்டும்,
அணு உலை திறக்கப்படும் முன்னர் அதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என மனதில் நினைப்பினும்,


என் செய்வேன் நான்?