கூகிளுக்கு அபராதம்

3
40
பிரான்சின் ரகசிய கண்காணிப்பு ( Privacy watchdog) CNIL  நிறுவனம் கூகிளுக்கு அவர்களின் ரகசிய தகவல்கள் சேகரிக்க பட்டதற்காக 100,000 euro அபராதம் விதித்து உள்ளது.

கூகிள் தன் தெரு  பார்வைக்காக (Street View) திரட்டிய தகவல்களில் அந்நிறுவனத்தின் தகவல்களும் சேர்ந்து திரட்டப்பட்டு விட்டது. இதற்கு கூகிள் மன்னிப்பு கேட்டு கொண்டு உள்ளது. மேலும் அந்த தகவல்களை உடனடியாக அழித்து விடவும் உறுதி அளித்து இருக்கிறது.

2007-2010 வரை கூகிள் CNIL ன் திறந்த wi-fi நெட்வொர்க்கில் இருந்து தகவல்களை தெரியாமல் திரட்டி இருக்கிறது. ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்த CNIL நிறுவனத்தை சார்ந்த யான் படோவா கூகிள் தங்களுக்கு எந்த சமயத்திலும் வேண்டிய ஒத்துழைப்பை கொடுக்கவில்லை என்றும் அவர்கள் கடைசி வரை தங்களின் Source Code ஐ தரவில்லை எனவும் சாடி இருக்கிறார்.

கூகிளின் தகவல் படி கடந்த மூன்றாண்டுகளில் 600GB தகவல்கள் திறந்த Wi-Fi நெட்வொர்களில் இருந்து சேர்க்கப்பட்டிருக்கிறது. இதில் மின்னஞ்சல், பயனர் விவரங்கள், கடவுச் சொற்கள் அடங்கும்.

இனி இது போன்ற தகவல்கள் திரட்ட பட மாட்டாது என கூகிள் தெரிவித்து உள்ளது.

பகிர்ந்து
முந்தைய செய்திஆஸ்திரேலியாவுக்கு அடுத்த அடி கொடுக்குமா இந்தியா?
அடுத்த செய்திஒபெராவின் புதிய கைப்பேசி உலவிகள்..
வலை எழுத்தில் கொண்ட பற்றால், முழு நேர வங்கிப் பணியை மூட்டை கட்டியவன்.

3 கருத்துக்கள்

  1. பகிர்வுக்கு நன்றி,

    பதிலளிக்க

உங்கள் கருத்தை தெரிவிக்க