அப்படி ஒரு Twist தான் அரங்கேறி இருக்கிறது இப்போதைய அரசியல் களத்தில்.
அளவுக்கு மிஞ்சினால் அமுதும் நஞ்சு
என்ன தான் பழைய மொழி ஆயினும் எக்காலத்தும் பொருந்தும் மொழி அது.
“சென்ற தேர்தலில் தந்த 48 தருகிறோம்” என்றார்கள்.
“போதாது” என்றார்கள்.
“சரி , வைத்து கொள்ளுங்கள்” என்று 57 தருவதாக சொன்னார்கள்.
“பேசி விட்டு சொல்கிறேன்” என்ற குலாம் நபி ஆசாத்,
“60 தருவீர்களா?”
“எடுத்து கொள்ளுங்கள்” என்ற பதிலை எதிர்பார்த்தே இருந்து இருப்பார்கள் போலும்.
“63 கொடுங்கள்,அதுவும் நாங்கள் சொல்லும் 63” என்று அலைபேசினார்கள்.
“63 அல்ல 234 ம் நீங்களே நில்லுங்கள், எங்களோடு அல்ல, தனியாக” என்று காங்கிரசின் இணைப்பை துண்டித்து விட்டார் கலைஞர்.
இப்போது காங்கிரஸ் நட்டாற்றில் கழற்றி விட பட்டவனைப் போலத் தான் தவிக்கிறது.
தி.மு.க தொடர்பும் இல்லை.
அ.தி.மு.க தாராளமாக வரவேற்புப் கொடுக்கும். ஆனால் அங்கே ஏற்கனவே தே.மு.தி.க விற்கு 41 தொகுதிகள் கொடுத்தாயிற்று. அதனால் குறைந்தது 30 தொகுதிகலவது ம.தி.மு.க விற்கு கொடுக்க வேண்டி வரும். கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 15, இதர கட்சிகளுக்கு 20 என பார்த்தால் மீதம் 128 தொகுதிகள் தான் இருக்கின்றன. அது அவர்களுக்கே போதாது.
ஒருவேளை காங்கிரசை அணியில் சேர்க்க வேண்டுமாயின் தொகுதி பங்கீடு மீண்டும் சீரமைக்க பட வேண்டும்.
மேலும் கம்யூனிஸ்ட்கள் காங்கிரஸ் இல்லாததால் தி.மு.க கூட்டணிக்கு தாவவும் வாய்ப்புகள் அதிகம். அப்படி ஒருவேளை நிகழ்ந்தால் காங்கிரஸ் அதிமுக பக்கம் வரலாம்.
எதுவும் நடக்கலாம் இங்கே.
எல்லாவற்றிற்கும் அரசியல்வாதிகள் தான் ஒரு பதில் வைத்திருக்கிறார்களே,
” அரசியலில் நிரந்தர எதிரிகளும் இல்லை, நண்பர்களும் இல்லை. “
மே 13 அன்று நிகழப் போகும் கிளைமாக்ஸ் காட்சியை இப்போதிலிருந்தே செதுக்கி வருகிறார்கள்.
ஆனால் எப்போதுமே எல்லா எதிர்பார்ப்புகளையும் மீறி மக்கள் இடும் தீர்ப்பு நிச்சயம் வேறாக தான் இருக்கும்.
பொறுத்திருந்து பார்ப்போம்.