வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டார். 72 பக்கங்களை உள்ளடக்கிய இது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையிலும் தயாரிக்கப் பட்டு உள்ளது.

சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 6 மணியளவில் தொடங்கிய நிகழ்ச்சியில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உரையாற்றி வருகிறார் திமுக தலைவர் கருணாநிதி.

தேர்தல் அறிக்கை விவரம்:

1. நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை ஆய்வு மையம் உருவாக்கப்படும்
2. டாஸ்மாக் நிறுவனம் கலைகப்பட்டு அதில் பணியாற்றுவோருக்கு மாற்றுப்பணி வழங்கப்படும்.
3. மது அடிமைகளுக்கு சிறப்பு சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும். 4. விவசாயிகளுக்கு கடன்கள் முழுக்க தள்ளுபடி
5. மகளிருக்கு 9 மாதகால காலம் பேறுகால விடுமுறை அளிக்கப்படும்
6. மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு திட்டம் கொண்டுவரப்படும்
7. அனைத்து விவசாயிகளுக்கும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்
8. வெள்ள சேதங்களை தடுக்க 5 ஆயிரம் கோடியில் திட்டம்
9. தமிழகம் முழுவதும் அறிஞர் அண்ணா உணவகங்கள் அமைக்கப்படும்
10. அனைத்து நாட்களிலும் ரேசன் பொருட்கள் வழங்க நடவடிக்கை
11. மத்திய அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழியாக தமிழ் இடம்பெற நடவடிக்கை
12. ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்படும்
13. ஆவின் பால் லிட்டருக்கு ரூ.7 வரை குறைக்கப்படும்
14. 3 லட்சம் அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்
15. விசைத்தறிக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்
16. கரும்புக்கு கொள்முதல் விலையாக டன் ஒன்றுக்கு 3,500 வழங்கப்படும்
17. சுயதொழில் தொடங்க ஒரு லட்சம் நிதி வழங்கப்படும்
18. மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு சட்டம் கொண்டுவரப்படும்
19. முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை
20. மீனவர்களுக்கு 5 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்
21. தமிழகம் முழுவதும் முதியோருக்கு கட்டணமில்லா பயணச்சலுகை
22. சென்னை முதல் ஓசூர் வரை நெடுஞ்சாலை தொழிற்சாலைகள் திட்டம்
23. மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும்
24. மீனவர் சமுதாயத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை
25. 10 ஆயிரம் கோடி செலவில் தமிழகத்தில் உள்ள ஏரிகள் தூர் வாரப்படும்
26.தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவோடு பால் வழங்கப்படும்
27.மாதத்தின் அனைத்து நாட்களிலும் ரேசன் பொருட்கள் வழங்கப்படும்
28.மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ.5000 தரப்படும்
29.விண்ணப்பித்த 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு வடிவில் குடும்ப அட்டை வழங்கப்படும்
30.மாணவர்களின் கல்விக் கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை
31.மீனவர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்ப்டும்
32.படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித் தொகை
33.ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 7 வரை குறைக்கப்படும்
34.மருத்துவக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படும்
35.மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி
36முதியோர் உதவித்தொகை ரூ. 1300 ஆக உயர்த்தப்படும்
37. தமிழகத்தில் மீண்டும் சட்டமேலவை அமைக்கப்படும்
38. பத்திரிக்கையாளர்கள் மீதான அவதூறு வழக்குகள் திரும்பப் பெறப்படும்
39. அனைத்து மாணவர்களுக்கும் 2ஜி 4ஜி சேவை வழங்கப்படும்

0 Shares:
Like 0
Tweet 0
Pin it 0
Leave a Reply
You May Also Like
Read More

முடி உதிர்வதற்கான சிகிச்சை

ஒரு நாளைக்கு சாதரணமாக 80-100 முடி உதிர்வது வழக்கமே.ஆனால் அதற்கும் மேலாக முடி உதிர்ந்தால் அது கவலைக்குரியது,மற்றும் கவனிக்க வேண்டிய விஷயம். முடி உதிரக்…
Read More

காமராசர் – கதை அல்ல நிஜம் – 3

பகுதி 3 காமராஜருக்கும் கண்ணதாசனுக்கும் இருந்த உறவு அற்புதமானது. இது குறித்து கண்ணதாசன், “”காமராஜரை நான் தாயாகப் பார்த்தேன். தந்தையாகப் பார்த்தேன். தெய்வமாகப் பார்த்தேன். அதன்பிறகுதான்…
Read More

எது உண்மையான தமிழ் புத்தாண்டு?

எது உண்மையான தமிழ் புத்தாண்டு என்பது ஒரு விவாதத்திற்கு உரியதாகவும், அரசியலாகவும் மாறி உள்ளது மிகவும் வருந்தப்பட வேண்டிய ஒரு நிலை.   தனி மனிதனாக…
Read More

வசூலில் பாகுபலியை வீழ்த்தியது விஜய்-யின் தெறி

விஜய், சமந்தா, நைனிகா நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘தெறி’ வசூலில் தொடர்ந்து சாதனைகள் படைத்து வருகிறது. முதல் வாரத்தில் ‘பாகுபலி’ படத்தின் சென்னை…
Read More

சரும பராமரிப்பு

 தோல் சுருக்கம் மறைந்து என்றென்றும் இளமையுடன் திகழ்வதற்கு ,   * முதலில், 3 முட்டைகளை உடைத்து நன்றாக கலக்கி கொள்ளவும். ஒரு தேக்கரண்டி தேன்,…
Read More

ஜெயலலிதா, கருணாநிதி – யார் பெரிய பணக்காரர்?

ஜெயலலிதாவுக்கு ரூ.118.58 கோடி சொத்தும், கருணாநிதிக்கு அசையா சொத்துக்கள் இல்லையெனவும், ஆனால் மனைவி, துனைவி ஆகியோர் பெயரில் ரூ. 62.99 கோடி சொத்து உள்ளதாக,…