மாண்புமிகு மனிதனே..

2
21
Facebook இல் பகிர்ந்துகொல்லவும்
Twitter இல் ட்வீட் செய்யவும்
கேரள – தமிழக அணைப் பிரச்னை,
ஊழலை ஒழிப்பதாக ஊளையிடும் கூட்டம்,
மருத்துவமனையில் தீ,
வெற்று வழக்கான அலைக்கற்றை பிரச்னை,
இன்னும் என்ன தான் நடந்தாலும்

ஏதோ பத்தாம் வகுப்பில் இருப்பவன் படிப்பதைப் பார்த்து எட்டாம் வகுப்பு பையன் சம்மந்தமே இல்லாததது போல விலகுவதை போல,
ஒரு உச்… கொட்டி விட்டு அடுத்த கணத்தை நோக்கி அவசரமாய் அடி எடுத்து வைக்கிறோம்.

இன்றைய வாழ்நிலையில் எல்லாமே சீக்கிரம் முடிந்து விட வேண்டும் என்ற மனநிலை நம்மில் கிட்டத்தட்ட எல்லோருக்குமே வந்து விட்டது. விளைவுகள் புரியாமல் மேற்கத்திய கலாச்சாரத்தை இறக்குமதி செய்து இப்போது நாட்டில் பலரும் தவித்து வருவதும் அதை மையமாக கொண்டு பலரும் பணம் பார்ப்பதையும் பிறகொரு பதிவில் பார்ப்போம்.

நாட்டில் உள்ள எந்த பிரச்னையையும் தன்னோடு தொடர்பு படுத்திப் பார்க்க எவருக்கும் மனம் வருவது இல்லை.

தண்ணீர் பிரச்னை என்றால் விவசாயிகள் கவலைப்பட வேண்டும்.
ஊழல் பிரச்னை என்றால் அரசாங்கம கவலைப்பட வேண்டும்,
பொதுப் பிரச்னை என்றால் அதிகாரிகளும் அது தொடர்பானோரும் கவலைப்பட வேண்டும்,

என்று தன் முதுகை தீண்டும் வரை தீயை வளர விட்டு பின்பு அய்யோ சுடுகிறதே என்றால் ஆறிவிடப் போவதும் இல்லை.

இரண்டு கேள்விகளுடன் இப்பதிவை முடிக்கிறேன்.

1.219 ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேன் யார்?
2. கொல்கத்தா தீ விபத்தில் பலரையும் காப்பாற்றிய மூவர் யார்?

பகிர்ந்து
Facebook
Twitter
முந்தைய செய்திதிறமைக்கு மரியாதை.. எதார்த்தத்தின் எல்லைக்கல்
அடுத்த செய்திகம்ப்யூட்டரைத் தாண்டி..
வலை எழுத்தில் கொண்ட பற்றால், முழு நேர வங்கிப் பணியை மூட்டை கட்டியவன்.