தாய்ப்பால் மற்றும் குழந்தையின் நலன்

0
106

தாய்ப்பாலானது குழந்தையின் உடல் நலத்தை அதிகரிப்பதுடன், வேறு நோய்கள் ஏற்படாமல் பாதுகாப்பதுடன், உடல் நலம் உணவுக்கான மேலதிக செலவுகளையும் குறைக்கிறது.குழந்தைகளுக்கு வழங்கப்படக் கூடிய உணவுகளிலேயே மிகவும் உடல்நலம் பேணக்கூடிய உணவு தாய்ப்பாலேயாகும்.

உலக சுகாதார அமைப்பும்,அமெரிக்க குழந்தை நல மருத்துவ அகாடமியும் (American Academy of Pediatrics AAP) குழந்தை பிறந்து 6 மாதங்களுக்கு தனித் தாய்ப்பாலூட்டல் சிறந்தது என்பதை வலியுறுத்துவதுடன், அதன் பின்னர் கடைசி ஒரு ஆண்டுக்கு, முடிந்தால் 2 ஆண்டுகள் வரை (அல்லது அதிகமாகவோ) மேலதிகமாக செயற்கை உணவூட்டலுடன் சேர்த்து தாய்ப்பாலூட்டலையும் செய்வதற்கு அறிவுறுத்துகின்றன[.

பிறந்த குழந்தை தாயின் உடலிலிருந்து வெளியேறி, பாதுகாப்பற்ற வெளிச்சூழலை எதிர்கொள்ளும் வேளையில், சூழலில் இருந்து குழந்தையைப் பாதுகாக்க, தாய்ப்பாலில் இருந்து பெறப்படும் பிறபொருளெதிரி உதவும். இந்த பிறபொருளெதிரிகள் பல நுண்ணுயிர்களைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டிருப்பதனால், பல தொற்றுநோய்களிலிருந்து குழந்தைக்கு பாதுகாப்பளிக்கும். தாய்ப்பாலானது அமீபா நுண்ணுயிர் தாக்கத்திலிருந்து பாதுகாப்பளிக்கக் கூடிய பித்த உப்பு தூண்டும் கொழுப்புப்பிரிநொதி (Bile salt stimulated lipase), குடலைப் பாதிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்க வல்ல லக்டோபரின் (Lactoferrin – இது இரும்பு தாதுப்பொருளுடன் பிணைந்து தொழிற்படும்), நுண்ணுயிர்களிடமிருந்து பாதுகாப்பளிக்கும் இமியூனோகுளோபுயூலின் ஏ (Immunoglobulin A) என்னும் நோயெதிர்ப்புப் புரதம் போன்ற தொற்றுநோய் எதிர்ப்புக் காரணிகளை குழந்தைக்கு வழங்குகிறது.

அறிவாற்றல்

தாய்ப்பாலூட்டப்பட்ட குழந்தைகளில் அறிவாற்றல் அதிகமாக இருப்பின் அது அனேகமாக தாயின் அறிவாற்றல் தொடர்பானதாக இருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.

உலக சுகாதார அமைப்பின் 2007 ஆண்டு மதிப்பீட்டு அறிக்கை, தாய்ப்பாலூட்டலுக்கும், அறிவாற்றலுக்கும் தொடர்பிருப்பதாகக் கூறினாலும், அந்த தொடர்பு தாய்ப்பாலின் இயல்புடன் தொடர்புபட்டதா அல்லது தாய்ப்பாலூட்டலால் தாய்க்கும் சேய்க்கும் ஏற்படும் பிணைப்பானது அறிவாற்றலைக் கூட்ட உதவுகிறதா என்பதை சரியாக அறிய முடியவில்லை எனவும் கூறுகின்றது.

வேறொரு ஆய்வறிக்கையானது தாய்ப்பாலூட்டலுக்கும் அறிவாற்றலுக்கும் தொடர்பிருந்தாலும், அந்தத் தொடர்பு தனியாக தாய்ப்பாலில் உள்ள போசாக்கு சம்பந்தமானதாக இல்லாமல், அதனுடன் இணைந்து வரும் மரபணு தொடர்பானதாக இருப்பதாகவும், அது மேலும் ஆராயப்பட வேண்டிய விடை எனவும் கூறுகிறது.

நோயின் விளைவு குறைவு

       தாய்ப்பாலூட்டலானது மூச்சுத்தடை நோய் வருவதை குறைப்பதாகவும், ஒவ்வாமையிலிருந்து பாதுகாப்பு அளிப்பதாகவும், சுவாச குடல் தொற்றுநோய்களிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பதாகவும் கூறுகின்றது.

ஒரு மதிப்பீடு சீலியாயிக் நோய் (celiac disease) வரும் சந்தர்ப்பத்தை தாய்ப்பாலூட்டலுடன் குளூட்டனை உணவில் சேர்த்து வழங்குவது குறைப்பதாகக் கூறுகின்றது. ஆயினும் இது நோய் அறிகுறிகள் தோன்றுவது பின்போடப்படுகிறதா அல்லது நோய்கான பாதுகாப்பை வாழ்வுக் காலம் முழுமைக்கும் கொடுக்கிறதா என்பதைக் கூறவில்லை.விஸ்கொன்சின் பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட ஒரு ஆரம்ப ஆய்வு, பெண்களில் தாய்ப்பாலூட்டப்பட்டு வளர்ந்தவர்களில், தாய்பபலூட்டப்படாதவர்களை விட மார்பக புற்றுநோய் வருவதற்கான சந்தர்ப்பம் குறைவு எனக் காட்டுகிறது.

தாய்ப்பாலூட்டப்பட்டவர்களில், வாழ்வின் பிற்காலத்தில் இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வரும் சந்தர்ப்பம் குறைவாக இருக்கலாம் எனவும் அறியப்படுகிறது.

தாய்ப்பாலில் கவனிக்க வேண்டியவை

தாய்ப்பாலை நீரில் விடும்போது அது லேசான மஞ்சள் நிறமாக காணப்பட்டால் தாய்க்கு பித்தம் தொடர்பான நோய் இருப்பதாக அர்த்தம்.

தாய்ப்பாலை நீரில் விட்டு சோ‌தி‌க்கு‌ம் போது அது நுரைத்தபடி மிதந்தால் தாய்க்கு வாதம் தொடர்பான தோஷம் இருப்பதாக அர்த்தம்.

தாய்ப்பாலை நீரில் விட்டுப் பார்க்கும்போது பால் அமிழ்ந்து அடியில் தங்கினால் தாய்க்கு கபம் தொடர்பான நோய்கள் இருப்பதாக அர்த்தம்.

குறிப்பு

பச்சிளம் குழந்தைகளுக்கு ஜலதோஷம் வந்தால் நீளமான மஞ்சளை எடுத்து முனையை கருப்பாக சுட்டு, சிறிது சுண்ணாம்புடன் சேர்த்து விழுது தயாரிக்கவும், இதனை லேசாக சுட வைத்து பொறுக்கும் சூட்டில் மூக்கு, நெற்றியில் தடவவும்.

சிறு குழந்தைகளுக்கு முட்டை கொடுக்கும்போது மஞ்சள் கரு மட்டும் கொடுங்கள், வெள்ளைக்கருவால் அலர்ஜி வரலாம்.

எல்லாக் காய்களிலும் சிறிது எடுத்து குக்கரில் வேகவைத்து அந்த நீரை எடுத்து ரசம் செய்து அதில் சாதம் பிசைந்து குழந்தைக்கு கொடுத்தால் மலச்சிக்கல் ஏற்படாது.

உங்கள் கருத்தை தெரிவிக்க