உங்களுக்கு அசிடிட்டி உள்ளதா? – தெரிந்து கொள்ள அறிகுறிகள்

0
437

உங்களுக்கு அசிடிட்டி உள்ளது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!

ஒருவருக்கு அசிடிட்டி வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அசிடிட்டி பிரச்சனைக்கு, கண்மூடித்தனமாக மருந்து மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக, அதன் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே தெரிந்து கொண்டால், அதனை எளிமையான முறையில் சரிசெய்ய முடியும்.
மும்பையைச் சேர்ந்த பொது மருத்துவரான டாக்டர். ஆர்த்தி உலால் அசிடிட்டி பிரச்சனைக்கான அறிகுறிகளைக் பட்டியலிட்டுள்ளார். அந்த அறிகுறிகள் என்னவென்று தெரிந்து கொண்டு, உங்கள் அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபடுங்கள்.

நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்து, உங்களுக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டால், அதனை சாதாரணமாக விட்டுவிடுவோம்.
ஆனால் உண்மையில் அது அசிடிட்டி பிரச்சனைக்கான அறிகுறிகளுள் ஒன்று.

அசிடிட்டி பிரச்சனை இருப்பின், அடிக்கடி கடுமைமான நெஞ்சு வலியை சந்திக்க வேண்டியிருக்கும். அதிலும் வலது பக்க மார்பக வலியுடன், கடுமையான அடிவயிற்று வலியை சந்தித்தால், அது அசிடிட்டிக்கான அறிகுறியாகும்.

இரைப்பையில் அமிலமானது ஒவ்வொரு 2-3 மணிநேரத்திற்கும் சுரக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அப்படி சுரக்கும் போது நம் வயிற்றில் உணவு இல்லாவிட்டால், அமிலமானது இரைப்பைச் சுவற்றை அரிக்க ஆரம்பிக்கும். பின் கடுமையான வலியை சந்திக்க வேண்டியிருக்கும்.

இரைப்பையில் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் போது, சில நேரங்களில் குமட்டலை உணரக்கூடும். அதுமட்டுமின்றி நெஞ்சு எரிச்சலையும் சந்திக்கக்கூடும்.

வயிற்றில் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் போது, புளிப்புச்சுவையுடனான ஏப்பத்தை விட நேரிடும். இப்படி ஒரு உணர்வை நீங்கள் சந்தித்தால், அதுவும் அசிடிட்டிக்கான அறிகுறிகளுள் ஒன்று.

மூச்சு விடுவதில் சிரமம் இல்லாமல், வறட்டு இருமல் மட்டும் வருமாயின், அதுவும் அசிடிட்டிக்கான அறிகுறிகளுள் ஒன்றாக டாக்டர் ஆர்த்தி கூறுகிறார். ஆகவே உங்களுக்கு வறட்டு இருமல் அதிகம் வருமாயின், அசிடிட்டி பிரச்சனை உள்ளது என்று அர்த்தம்.

உங்கள் கருத்தை தெரிவிக்க