ஆரஞ்சு பழத்தில் இவ்வளவு நன்மையா?

0
240

ஆரஞ்சு மரங்கள் பெரும்பாலும் வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டலங்களில் வளர்கிறது.பதபடுத்தாமல் அப்படியே உண்ணக்கூடிய ஒரு வகையான புத்துணர்ச்சி ஊட்டக்கூடிய பழம் ஆரஞ்சு.இனிப்பு மற்றும் புளிப்பு வகை ஆரஞ்சுகளில் இருந்து 70 சதவீத சிட்ரஸ் தயாரிக்கபடுகிறது.

ஆரஞ்சு எனும் பெயர் சமஸ்கிருதத்திலிருந்து வரையறுக்கப்பட்டது.ஆனால் சிலர் திராவிட மொழியிலிருந்து வந்தது எனவும் கூறுகின்றனர்.

மற்ற சிட்ரஸ் பழங்களைக்காட்டிலும் ஆரஞ்சு பழத்தில் அதிகளவு வைட்டமின்-C உள்ளது,ஆரஞ்சு பழத்தில் 64 சதவீத தினசரி வைட்டமின்கள் கிடைக்கிறது.

அசிடிட்டி,

சிட்ரஸ் பழங்களில் ஆரஞ்சு அசிடிக் தன்மையுடையது.இதன் PH மதிப்பு 2.9 லிருந்து 4.0 வரை,

வரலாறு

ஆரஞ்சு முதலில் சீனாவின் வடபகுதியிலும்,இந்தியாவின் தென்கிழக்கு பகுதியிலும்,ஆசியாவின் வடகிழக்கு பகுதியிலும் பயிரிடப்பட்டது. 2500 வருடங்களுக்கு முன்னரே இது சீனாவில் கண்டெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரங்சு பழத்தில் உள்ள அசிடிட்டி தன்மையால் இது விரைவில் கெடாது.இதில் உள்ள வைட்டமின் C ஸ்கர்வி நோயிலிருந்து தடுக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

ஆரஞ்சில் உள்ள வைட்டமின் C உடலுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை பார்ப்போம்.

* வைட்டமின் C என்பது உடலில் உள்ள நீரில் கரையக்கூடிய ஒரு ஆன்டி ஆக்சிடன்ட்,இது உடலில் உள்ள செல்லின் உள்புறம் மற்றும் வெளிப்புறத்தில் சுற்றுப்புற சூழலால் ஏற்படக்கூடிய நோய்களிலிருந்தும் மற்றும் DNA கேன்சரிலிருந்தும் முற்றிலுமாக பாதுகாக்கிறது.

*குறிப்பாக அடிப்போஸ் திசு அதிகமாக உள்ள இடங்களில் (எ.கா)செரிமான அமைப்பில் DNA-யின் அளவு அதிகமாவதை தடுத்து கேன்சரிலிருந்து பாதுகாக்கிறது.

*பெருங்குடல் புற்றுநோயிலிருந்தும் இந்த வைட்டமின் C தடுக்கிறது.

*மேலும் இந்த வைட்டமின் C ஆஸ்த்மா,கீல்வாதம் மற்றும் முடக்குவாதம் போன்ற நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துகிறது.

*ஒரு ஆய்வில் 40-50% வரை வாய் மற்றும் வயிற்று பகுதியில் ஏற்படும் புண்களை ஆரஞ்சு சாறில் உள்ள சிட்ரஸ் வராமல் தடுக்கிறது என்பது தெரியவந்துள்ளது.

*இரத்தத்தில் ஆக்சிஜனேற்றத்திற்கு பிறகு தேவையற்ற கொழுப்பு இதயத்திற்கு இரத்தத்தை எடுத்துச்செல்லும் ரத்தகுழாயில் உட்புறத்தில் ஒட்டிக்கொண்டு,மாரடைப்பு அல்லது பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது.இந்த வைட்டமின் C கொழுப்பு சேர்வதை தடுத்து ஒரு வேதியியல் மாற்றத்தை நிகழ்த்தி மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது.

*வைட்டமின் C நோய் எதிர்ப்பு சக்தியை தருவதுடன்,சளி மற்றும் காதில் ஏற்படும் நோய் தொற்றிலிருந்தும் பாதுகாக்கிறது.

*7 விதமான ஆய்வு மூன்று விதமான நீரில் மேற்கொள்ளப்பட்டது.
# சர்க்கரை கரைசல்
# ஊட்டச்சத்து பானம்
# ஆரஞ்சு சாறு

ஒருவர் சர்க்கரை கரைசல் குடிப்பதற்கு முன் இரத்தம் ஆய்விற்காக எடுக்கப்பட்டது, 24 மணிநேரத்திற்கு பிறகு
சர்க்கரை கரைசலில் வைட்டமின் C இல்லை என கண்டறியப்பட்டது.

ஊட்டச்சத்து பானத்தில் 150 மில்லிகிராம் வைட்டமின் C உள்ளது.

மூன்றாவதாக ஆரஞ்சு சாறில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,ஆரஞ்சு சாறு குடித்த 3 மணி நேரத்திற்கு பின் DNA சிதைவு 18 சதவீதமும் ,24 மணி நேரத்திற்கு பிறகு 16 சதவீதமாகக் குறைந்தது.

குறிப்பு;சர்க்கரை கரைசல் மற்றும் ஊட்டச்சத்து பானத்தில் DNA சிதைவு தடுக்க வழியில்லை என கண்டறியப்பட்டது.

பகிர்ந்து
முந்தைய செய்திரஜினிகாந்த் அளித்த பதில்: தமிழக சட்டசபை தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கேள்விக்கு
அடுத்த செய்திவிஜயகாந்த் அறிக்கை ,தி.மு.க. மற்றும் அ.தி.மு.க ஓரம் கட்டப்படுவார்கள்.

உங்கள் கருத்தை தெரிவிக்க