பாகுபலி-2

0
647

இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகளில் பிஸியாக இருக்கிறார் இயக்குனர் ராஜமௌலி. இந்நிலையில் ‘பாகுபலி’யின் க்ளைமாக்ஸ் காட்சியில் கதை நாயகன் பாகுபலியை ‘கட்டப்பா’ சத்யராஜ் கொல்வதாக காட்சி இருந்தது. பாகுபலி மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கும் கட்டப்பா ஏன் ‘பாகுபலியை கொன்றார்’ என்பது புதிராக இருந்து வருகிறது.

இரண்டாம் பாகத்தின் 50 சதவீத வேலைகள் ஏற்கெனவே முடிந்திருந்தாலும் படத்தின் கதையை மீண்டும் செதுக்கும் வேலைகளில் இறங்கிவிட்டாராம் ராஜமௌலி. இரண்டாம் பாகத்தின் கதையில் சில மாற்றங்களையும், சில திருத்தங்களையும் தற்போது அவர் செய்து வருவதாகச் சொல்கிறார்கள். முதல் பாகத்தில் அனுஷ்காவுக்கு அவ்வளவு முக்கியத்துவமில்லை. மன்னர் பாகுபலியின் பிளாஷ்பேக் காட்சிகளும் அதிகமில்லை. அவையிரண்டும் இரண்டாம் பாகத்தில் முக்கியத்துவம் பெறும் என்கிறார்கள்.

மன்னர் பாகுபலி, அவரைத் திருமணம் செய்து கொள்ளும் தேவசேனா,பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் ?, சிவகாமி குழந்தையைத் தூக்கிக் கொண்டு தப்பித்து வந்தது ஏன், போன்ற பல கேள்விகளுக்கு இரண்டாம் பாகத்தில் விடை இருக்கப் போகிறது.

தற்போது பாகுபலி 2 படத்தின் இரண்டாம் பாகத்திற்கு மகாபலி என புதிய தலைப்பு பரிசீலனை செய்யப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. இப்படத்தின் நாயகன் பிரபாஸ் பாகுபலி 2 படத்திற்காக தாடி வளர்த்துள்ளராம்.மேலும் பாகுபலி படத்தைக் காட்டிலும் பாகுபலி 2 படத்தில் ஆஜானுபாகு உடற்கட்டுடன் தோன்ற தீவிர உடற்பயிற்சிகளிலும் பிரபாஸ் ஈடுபட்டுள்ளாராம்.

‘பாகுபலி 2’ படத்தில் சூர்யாவுக்கு முக்கிய வேடம் ஒன்றை ஒதுக்கியுள்ளாராம் ராஜமௌலி. வேடம் சிறிது என்றாலும் பேசப்படும் கேரக்டராக இருக்குமாம். இவருடன் ஸ்ரேயாவும் ஒரு கேரக்டரில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.