நாளிதழ் ஒன்றும், செய்தித் தொலைக்காட்சியும் இணைந்து நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பு நிலவரம் வெளியாகி பல தலைவர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
எல்லா தேர்தல் கருத்துக் கணிப்புகளுமே வெற்றி தோல்வியை தீர்மானிக்காது என்றாலும், உண்மையாகிவிடுமோ என்ற எண்ணமே தலைவர்களின் கலக்கத்துக்குக் காரணம்.
அதாவது, மாம்பழக் கட்சியின் முதல்வர் வேட்பாளர் போட்டியிடும் பென்னாகரம் தொகுதியில், அவருக்கு 3வது இடம் கிடைக்கலாம் என்று கருத்துக் கணிப்புக் கூறுகிறது. பம்பரம் கட்சித் தலைவர், முரசுக் கட்சியின் தலைவர் போட்டியிடும் உளுந்தூர்பேட்டை தொகுதியில், அவரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.
அப்போது பேசுகையில், பென்னாகரத்தில் போட்டியிடும் மாம்பழக் கட்சியின் முதல்வர் வேட்பாளருக்கு 3ம் இடம் கிடைக்கும் என்பதெல்லாம் நம்பும்படியாகவே இல்லை.
எங்கள் எதிரியாக இருந்தாலும், இது தவறானது என்றே சொல்வேன் என்று காட்டமாகக் கூறியுள்ளார்.