Category: உலக கோப்பை
இரு பிரதமர்கள் பார்வையில் இந்திய-பாகிஸ்தான் அரை இறுதி போட்டி
இந்திய பாகிஸ்தான் அரை இறுதி போட்டி நடக்கவிருப்பது என்னவோ 30 ஆம் தேதி தான் ஆனால் எந்த தொலைகாட்சியை திருப்பினாலும் ஏதோ போர் மூலப்போவதை போல ஏற்றி விட்டு கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே எங்களுடன் சச்சின் எங்களுடன் நூறாவது சதத்தை அடிக்க முடியாதென அப்ரிடி சொல்லி இருக்கிறார். பொதுவாகவே இது போன்றவற்றிற்கு சச்சினின் பதில் அவர் பேட்டிலிருந்து தான் கிடைக்கும். பொறுத்திருந்து பார்ப்போம். இந்தியா பாகிஸ்தான் மோதும் உலக கோப்பை அரையிறுதி போட்டி நடைபெற்ற உள்ள மொகாலியில் வரலாறு காணாத உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. . போட்டியைக் காண வருமாறு பிரதமர் மன்மோகன்சிங் விடுத்த அழைப்பை பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராசா கிலானி ஏற்றுக்கொண்டுள்ளதை யடுத்து விமானங்கள் பறந்தால் சுட்டு வீழ்த்தும் பீரங்கிகள் பணியில் ஈடுபடுத்தப் பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் காலிறுதி போட்டிகள் ... Read moreஇவ்வளவு தான் இங்கிலாந்தா? – இலங்கை இமாலய வெற்றி
இந்த உலக கோப்பை போட்டி தொடரில் இங்கிலாந்து அணி பங்கேற்ற பெரும்பாலான போட்டிகள் ஆட்டம் முடியும் வரை சுவாரசியமாக இருந்து வந்தது. இந்தியாவுடன் டை ஆனா போட்டி, அயர்லாந்து உடன் தோல்வி அடிந்த போட்டி, தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய போட்டி என்று விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத போட்டிகளாக நடந்தது. அண்ணல நேற்று அப்படியா தலைகீழாக மாறி விட்டது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியின் டிராட் போராடி அணியை 229 ரன்கள் வரை இட்டு சென்றார். ஆனால் மோசமான பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பால் இங்கிலாந்து அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இலங்கையின் தில்ஷான் மற்றும் தரங்கா இருவரும் சதம் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேறியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இலங்கை அணி 39.3 ஓவர்களில் விக்கெட் ... Read moreஇது கனவா இல்லை நினைவா? – நியூசிலாந்து அரை இறுதியில்
உலக கோப்பையில் எப்போதுமே அதிர்ஷ்டம் இல்லாத அணி தென் ஆப்ரிக்கா. உண்மையில் அதிர்ஷ்டம் இல்லை என்பது என்னவென்று நோக்கினால் அன்றைய தினத்தில் அவர்களின் சராசரிக்கும் குறைவான ஆட்டத்தை வெளிப்படுத்துவதையே குறிக்கும். அதே அளவுகோளில் பார்த்தால் இன்று நியூசிலாந்துக்கு அதிர்ஷ்டம் அடித்தது என்று சொன்னால் என்னை விட மகா முட்டாள் வலை வீசி தேடினாலும் கிடைக்க மாட்டான். குப்தில், மெக் குல்லம் – இரண்டு தொடக்க ஆட்டக்காரர்களும் மிக குறைந்த ரன்களுக்கு தென் ஆப்ரிக்காவிடம் வீழ்ந்த பின்னர், அணியை சரிவினின்று தங்களின் மிக நேர்த்தியான,பொறுமையான,விவேகமான துடுப்பாட்டத்துடன் ரைடரும் டெய்லரும் மெதுவாக மீட்டு எடுத்தனர். அந்த இணை 114 ரன்களை மூன்றாவது விக்கெட்டுக்கு சேர்த்தது. டெய்லர் 43 ரன்களும், ரெய்டர் 83 ரன்களும் அடித்து ஆட்டம் இழந்த பின்னர் மற்ற நியூசிலாந்து வீரர்கள் வெகு விரைவாகவே தங்கள் ஆட்டத்தை இழக்க, வில்லியம்சன் மட்டும் 38 ரன்கள் எடுத்து அணியை 221 என்ற நல்ல நிலைமைக்கு ... Read moreஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் முடிந்தது : இந்தியா அரை இறுதியில்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடையே இன்று நடந்த உலகக் கோப்பை இரண்டாவது காலிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்தது. உலகக் கோப்பை போட்டியின் இரண்டாவது காலிறுதி ஆட்டம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடையே இன்று அலஹபாத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகள் இழந்து 260 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் அபாரமாக ஆடி சதமடித்தார். பின்னர் வெற்றிபெற 261 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 47.4 ஓவர்களிலேயே 5 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இன்று இந்திய அணியின் ஆட்டம் அபாரமாக இருந்தது. 2 விக்கெட்கள் வீழ்த்தி நன்றாக பந்து வீசிய யுவராஜ் சிங் பேட்டிங்கிலும் ஜொலித்தார். 64 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து இறுதி ... Read moreவெஸ்ட் இண்டீசை துவம்சம் செய்தது பாகிஸ்தான்
காலிறுதி போட்டிகள் தொடங்கி விட்டன, இனி மேலாவது விறுவிறுப்பான போட்டிகள் அதிகம் இருக்கும் என எதிர்பார்த்தால் வெஸ்ட் இண்டீஸ் இப்படி அநியாயமாக பாகிஸ்தானிடம் சரண் அடைவார்கள் என்று எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். போட்டி தொடங்கியது முதலே பாகிஸ்தானின் கை ஓங்க ஆரம்பித்து விட்டது முஹம்மது ஹபீஸ் சுழலில் வெஸ்ட் இண்டீஸ் தட்டு தடுமாற விக்கெட்டுக்கள் சரிந்த வண்ணம் இருந்தன. உமர் குல் மற்றும் ஹபீஸ் சேர்ந்து 16/3 என அதள பாதாள நிலைக்கு வெஸ்ட் இண்டீசை தள்ளிய பின் சீனியர் பேட்ஸ்மேன்கள் சர்வான் மற்றும் சந்தர்பால் தாக்கு பிடித்து 50 ரன்னை தண்ட உதவினர். ஆனால் மீண்டும் அந்த அணி தள்ளாட தொடங்கியது, ஒன்பது பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை இழந்தது. அப்போது ஸ்கோர் 71/8 ஆக இருந்தது. கடைசியில் அப்ரிடி தன் விக்கெட வேட்டையை ஆரம்பிக்க வெஸ்ட் இண்டீஸ் 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறி கொடுத்தது. சந்தர்பால் 44 ரன்களுடன் ... Read moreஆஸ்திரேலியாவுக்கு அடுத்த அடி கொடுக்குமா இந்தியா?
உலக கோப்பை போட்டிகளில் தொடர்ந்து 34 போட்டிகளாக வெற்றி பெற்று வந்த ஆஸ்திரேலியாவிற்கு பாகிஸ்தான் அடி கொடுத்து உள்ளது. நம் பங்காளி கொடுத்ததை நாமும் கொடுக்க வேண்டும். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே சச்சினின் அந்த நெடு நாள் கோப்பை கனவு மெய்ப்படும். இம்முறை நிச்சயம் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் என நம்புவோம் வேறென்ன நம்மால் செய்ய முடியும். உலக கோப்பை போட்டிகள் தொடங்கிய புதிதில் நானும் ஏதாவது பதியலாம் என்று ஒரு உலக கிண்ண போட்டிகள் தொடர்பான பதிவை ஆரம்பித்தேன். பின் இது போன்ற எந்த பதிவு எழுதினாலும் அவர்கள் விளையாடும் முறை ஏதும் மாறபோவதும் இல்லை. அவர்களுக்கு அறிவு புகட்டும் அளவுக்கு நமக்கு கிரிக்கெட் அறிவும் இல்லை என்பதால் பிறகு பதிவு இடுவதை நிறுத்தி விட்டேன். ஆனால் முக்கிய கட்டமான காலிறுதி போட்டிகள் நாளையில் இருந்து தொடங்க போகிறது. இரண்டாவது காலிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர் கொள்ள ... Read moreஇந்திய அணி ஏமாற்றம் தொடர்கிறது..!
இந்திய அணியின் பந்து வீச்சு இன்னும் சரியான் மாதிரி தெரியவில்லை. ஜாகிர் கான் தவிர்த்து மற்ற அனைவரும் அப்படி ஒன்றும் சொல்லி கொள்கிற மாதிரி வந்து வீசவில்லை. யுவராஜ் சிங் பகுதி நேர பந்து வீச்சாளர் ஐந்து விக்கெட் எடுக்கிறார். இனி வரும் போட்டிகளிலாவது இந்தியாவின் பந்து வீச்சு முன்னேற வேண்டும். இந்திய – அயர்லாந்து அணிகளுக்கு இடையே, இன்று பெங்களூருவில் இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 207 ரன்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது, பந்து வீச்சில் யுவராஜ் சிங் ஐந்து விக்கெட்டுக்களையும் ஷகீர் கான் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணியை அயர்லாந்து பந்துவீச்சாளர்கள் தடுமாற செய்தனர், ஷேவாக் வந்த வேகத்திலேயே ஐந்து ரன்களுக்குள் பவிலியன் திரும்பினார். டெண்டுல்கர் 38 ஓட்டங்களுடனும் கோலி 34 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில், 100 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்களை ... Read moreஉலகக் கிண்ணம் வெல்லும் திண்ணம்..! (2 )
“விளையாட்டினை பொறுத்தவரை வலிமையே பெரும்பாலான சமயங்களில் வெற்றி பெறுகிறது” என்பதற்கு 1979 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டிகள் சிறந்த உதாரணம். இதுவும் புருடன்சியல் கிண்ணம் என்றே அழைக்கப்பட்டது. அசுர பலத்துடன் கிரிக்கெட் உலகையே தன் கைகளில் வைத்திருந்த மேற்கிந்திய தீவுகள் தான் தொடந்து கோப்பையை கைப்பற்றியது. இதில் விளையாட தேர்வான அணிகளில் இம்முறை தென்னாப்பிரிக்கா இடம் பெறவில்லை. அந்நாட்டில் இருந்த இனஒதுக்க கொள்கையால் சிறப்பான ஆடுதிறன் இருந்தும் அவர்கள் விளையாட முடியாமல் போனது. தென்னாப்பிரிக்க அணி இதிலிருந்து விதிப்பட மிக அதிக நாட்கள் தேவைப்பட்டது. அந்த அணி 1991 ல் தான் மீண்டும் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தது. 1979 உலக கோப்பை முதல் சுற்றில் பங்கு கொண்ட அணிகளில் கனடாவும் இடம் பிடித்தது. கனடா மட்டும் இல்லையேல் இந்திய அணிக்கு கடைசி இடத்துக்கான போட்டியே இருந்து இருக்காது. அந்த அளவுக்கு இந்திய அணியரின் ஆட்டம் இந்த தொடரில் அமைந்து ... Read moreஉலகக் கிண்ணம் வெல்லும் திண்ணம்..! (1)
கிரிக்கெட் உலகக் கோப்பை தொடங்கப்போகிறது.“எல்லா அணிகளுமே வெற்றியை தீண்ட விரும்பினாலும் வெற்றி ஏதாவது ஒரு அணியைத்தான் தீண்டும்.”என்னதான் 20-20 கிரிக்கெட் வந்தாலும் ஒருநாள் உலகக் கோப்பை தான் சிறந்த அணி எது என தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகிறது.கிரிக்கெட்டின் தோற்றம் பற்றி மிக தெளிவான கருத்துகள் ஏதுமில்லை. இருப்பினும் இங்கிலாந்தில் இது தோன்றியது என்றும் மற்ற காலனி நாடுகளுக்கும் அதன் மூலமாகவே பரவியது என்பதும் பெரும்பான்மையோரின் எண்ணம். முதலில் ஐந்து நாட்களாக நடைபெறும் டெஸ்ட் போட்டிகளாகவே கிரிக்கெட் நடைபெற்று வந்தது. 1971 ல் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் ஆஸ்ட்ரேலியா இடையிலான போட்டி மழையால் முதல் நான்கு நாள் விளையாட முடியாமல் போக கடைசி ஒருநாள் மட்டும் குறிப்பிட்ட ஓவர்களை கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. அந்த போட்டிக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக தொடந்து ஒருநாள் போட்டிகள் நடக்க ஆரம்பித்தன.கால்பந்தைப் போல மிக அதிக அளவில் பங்கேற்கும் நாடுகள் இல்லை என்பதால் வெறும் நாடுகளுக்கு இடையிலான ... Read more
Next »