Category: விளையாட்டு
சொல்லாமல் அடித்த நிஜ கில்லி..
கண்மூடித்தனம்,செம அடி,வெளுத்து வாங்குறது,அதிரடி இப்படி எப்படி இவரை வர்ணித்தாலும் கடைசியில் தன் திறமையால் அனைத்துக்கும் தான் சொந்தக்காரன் என்பதை நிரூபிப்பார் கில்க்ரிஸ்ட். இந்த ஐபிஎல்லில் சதங்கள் குவிந்த வண்ணம் உள்ளன கெய்ல்,வால்தாட்டி,சச்சின் என இப்போது கில்லி தனது ஸ்டைலான அதிரடி மூலம். பொறுமையாக விளையாட தொடங்கி அசுர வேகத்தில் சிக்ஸர்களை அடித்து ஐம்பதை நோக்கி சென்ற கில்லி பின்னர் மார்ஷை அடிக்க விட்டு கடைசியில் மீண்டும் வெளுத்து வாங்கி இன்னமும் பஞ்சாப் அணியை அடுத்த சுற்றுக்கு போகும் வாய்ப்பை நழுவ விடாமல் கெட்டியாக பிடிக்க வைத்திருக்கிறார். ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிய காலங்களில் பார்த்த கில்லியை மீண்டும் காட்டிய ஐபிஎல்லிற்கு நன்றி சொல்லும் அதே வேளையில், இவ்வளவு தொடர் நீளமாக இருப்பதால் என்ன இவ்வளவு விரைவாக முடிந்து விட்டது என்பதிற்கு பதிலாக, எப்படா இறுதிப் போட்டி வரும் என்று எண்ண வேண்டி இருக்கிறது. தர்மசேலாவில் நடந்த போட்டியில் கிட்டத்தட்ட ஒரு புயலே அடித்தது ... Read more99 நாட் அவுட் (6)
சென்ற பதிவில் சச்சினின் ஆறாவது சதத்தை தவறுதலாக ஐந்தாவது என்று பதிந்து விட்டேன் மன்னிக்கவும்.. இந்த பதிவில் சச்சினின் அடுத்த சதம், அதாங்க ஏழாவது சதம் பற்றி பார்க்கப் போகிறோம். இதுவும் இலங்கைக்கு எதிராக அடிக்கப்பட்டது தான், ஆனால் போன சதம் இலங்கையில் வந்தது, இது இந்திய மண்ணில் பதிக்கப்பட்டது. சதம் #7 ரன்கள் : 142 எதிரணி : இலங்கை இடம் : லக்னோ நாள் : ஜனவரி 19,1994 ஆட்ட முடிவு : வெற்றி ஆட்ட நாயகன் : இல்லை / அனில் கும்ப்ளே இந்த சதத்தினை பதிவு செய்ததன் மூலம் தொடர்ச்சியாக தான் சதமடித்த மூன்று போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றதற்கு நிச்சயம் சச்சின் மகிழ்ச்சியில் திளைத்திருப்பார். நாணய சுழற்சியில் வெற்றி பெற்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. முதல் சில மணித்துளிகள் விக்கிரமசிங்க பந்தில் இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் திணறிக் கொண்டு இருந்தனர். ... Read moreமும்பை மீண்டும் சொதப்பல் – பஞ்சாப் வெற்றியை பறித்தது
மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் ஒருமுறை பேட்டிங் சொதப்பலால் தோல்வி அடைந்து விட்டது.சச்சினில் தொடங்கி அனைத்து வீரர்களும் பஞ்சாபிடம் விக்கெட்டைக் கொடுத்து பெவிலியனுக்கு வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தெண்டுல்கர் முதலில் பந்து வீச தீர்மானித்தார். ஆனால் அது அவர்களுக்கே போய் வினையாய் முடிந்து விட்டது. அந்த அணி முதல் 15 ஓவர்கள் வரை ஆட்டத்தை தன் கையை விட்டு போகாமல் பார்த்துக் கொண்டது. பால் வல்தாட்டி அவுட் ஆனதற்கு பின்பு ஜோடி சேர்ந்த கில்க்ரிஸ்ட் – மார்ஷ் இணை பஞ்சாப் அணியை பத்து ஓவர்களில் கிட்டத்தட்ட நூறு ரன்களுக்கு இட்டு சென்றனர். ஷான் மார்ஷ் அதிரடியாக விளையாடி ஐந்து பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்தார். இவர்கள் இணை பிரிந்த பின்பு தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி அணியை வழி நடத்தினார். அவர் 24 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். ஆனால் அதற்கு பின்பு ... Read moreராஜஸ்தானை வீழ்த்தி இரண்டாம் இடத்தில் சென்னை..!
முரளி விஜய்,தோனியின் அசத்தல் மட்டை வீச்சு மற்றும் அணி வீரர்களின் சிறந்த களத்தடுப்பு,பந்து வீச்சு சேர்ந்து ராஜஸ்தான் அணியை சென்னையிடம் தோல்வி அடையச் செய்தன. ஐபிஎல் 4 கிட்டத்தட்ட பொலிவிழந்து விட்டது. ஆனாலும் அவ்வப்போது சில சிறந்த ஆட்டங்களினால் இன்னமும் கொஞ்ச பேர் ஐபிஎல்லை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சென்னையுடன் போட்டி ஆரம்பிக்கும் முன்னரே, வார்னே ஜெய்பூர் ஆடுகளம் மாற்றப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்ததாக ஒரு வதந்தி (உண்மை?) பரவியது. கடைசியில் அவர் எதிர்பார்த்த படியே நடந்தும் விட்டது. வழக்கமாக ராஜஸ்தானின் ஆடுகளம் சுழல் வீச்சுக்கு சாதகமாகவும் அதிக ரன்கள் அடிக்க முடியாதபடியும் இருக்கும் ஆனால், இந்த போட்டியில் முதலில் நெட்டிங் செய்யப் பணிக்கப்பட்ட சென்னை அணியின் அனைத்து முன் வரிசை ஆட்டக்காரர்களும் சதிராடி காட்ட, சென்னை மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 196 ரன்கள் அடித்தது. மைகேல் ஹஸ்ஸி ஆரம்பம் முதலே ராஜஸ்தான் பந்து வீச்சாளர்களுக்கு பவுண்டரிக் கோடுகளை அடிக்கடி காண்பித்த ... Read more99 நாட் அவுட்.! (5)
ஆசிய அணி ஒன்றிற்கு எதிராக சச்சின் அடித்த முதல் சதம் இது தான். இலங்கையில் சென்று அந்த அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டி ஒன்றில் வெற்றி பெறுவது 90களின் பின் பாதியில் எவ்வளவு கடினமோ அதே மாதிரி முன் பாதியில் எளிதும் கூட என்றாலும் ரணதுங்கா,டி சில்வா போன்றோரின் வருகைக்கு பின்னர் ஓரளவு பலம் பெற்றிருந்த இலங்கை அணியை இந்திய அணியின் சிறப்பான கூட்டு முயற்சியால் இந்த போட்டியில் வெற்றி பெற முடிந்தது. இது இலங்கை மண்ணில் இந்தியா பெற்ற முதல் வெற்றி ஆகும். சதம் #6 ரன்கள் : 104* எதிரணி : இலங்கை இடம் : கொழும்பு நாள் : ஜூலை 31,1993 ஆட்ட முடிவு : வெற்றி ஆட்ட நாயகன் : இல்லை ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியினர் தங்கள் பந்து வீச்சாளர்களுக்கு அதிக சிரமம் ஏதும் இல்லாத வகையில் 366 ரன்கள் குவித்தனர்.இதில் ... Read more99 நாட் அவுட்.! (4)
சச்சின் இதற்கு முன் நான்கு சதங்கள் அடித்திருந்தாலும் இந்த சதம் அவருக்கு மிகவும் முக்கியமானது,பிடித்தமானது. ஏனெனில் இந்திய மண்ணில் சச்சின் அடித்த முதல் சதம், சச்சின் சதமடித்து இந்திய அணி வெற்றி பெறும் முதல் போட்டி என்று அதற்கு சில காரணங்கள் இருந்தன. இந்த பெருமை எல்லாம் நம்ம ஊர் சென்னையில் தான் நடந்தது. இதனால் தான் சென்னையை சச்சினுக்கு ரொம்ப பிடிக்க ஆரம்பித்தது, பின்னரும் பல வேளைகளில் இங்கு சச்சின் நன்றாக விளையாடி அணியும் வெற்றி பெற்று இருக்கிறது. சதம் #5 ரன்கள் : 165 எதிரணி : இங்கிலாந்து இடம் : சென்னை,இந்தியா நாள் : பெப்ரவரி 12,1993 ஆட்ட முடிவு : வெற்றி ஆட்ட நாயகன் : ஆம் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு காரணம் இந்திய வீரர்களின் திறமையான ஆட்டம் என்று மட்டுமே சொல்லி விட முடியாது. இங்கிலாந்து வீரர்கள் அதிகப்படியாக சாப்பிட்ட ... Read more99 நாட் அவுட்.! (3)
பந்துவீச்சுக்கு சாதகமான ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் நடந்த போட்டியில் தனது நான்காவது சதத்தை சச்சின் பதிவு செய்தார். இந்த போட்டியில் அவரைத் தவிர வேறு யாரும் மூன்று இலக்க ரன்கள் அடிக்கவில்லை என்பது சச்சின் தன் திறமையை எந்த ஆடுகளத்திலும் மிகச் சிறப்பாக பயன்படுத்துவார் என்பதற்கு நல்ல சான்று. சதம் #4 ரன்கள் : 111 எதிரணி : தென் ஆப்ரிக்கா இடம் : ஜோஹன்னஸ்பர்க்,தென் ஆப்ரிக்கா நாள் : நவம்பர் 28,1992 ஆட்ட முடிவு : டிரா ஆட்ட நாயகன் : இல்லை போட்டியின் முதல் இன்னிங்க்ஸ்-ல் 292 ரன்கள் மட்டுமே எடுத்தது தென் ஆப்ரிக்கா. இந்த டெஸ்ட் போட்டியின் எந்த இன்னிங்க்ஸ்-லும் ரன் விகிதம் 3 ஐக் கூட தொடவில்லை. ஜான்டி ரோட்ஸ் 28 ரன்கள் எடுத்த பொது ரன் அவுட் ஆனார். ஆனால் பக்னர் மூன்றாவது நடுவரைக் கூடக் கேட்காமல் அவுட் இல்லை என்று சொல்லி அவருக்கு நல்ல ... Read more99 நாட் அவுட்.! (2)
நேற்றைக்கு சச்சின் முதல் சதங்கண்டதை பார்த்தோம். இன்று அவர் 1992ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இரண்டு சதங்கள் அடித்தது பற்றிப் பார்ப்போம். நம்ம இந்திய துணைக் கண்டத்தில் உள்ள பிட்சுகள் எல்லாமே சுழலுக்கு சாதகமானவை. வேகப் பந்துவீச்சு அவ்வளவாக எடுபடாது.ஆனால் ஆஸ்திரேலிய மண்ணில் உள்ளவை வேகப் பந்துவீச்சுக்கு மிக நன்றாக ஈடுகொடுக்கக் கூடியவை. அதனாலேயே மிரட்டும் வேகப் பந்து வீச்சாளர்கள் பலரும் அங்கிருந்து உருவாகி இருக்கின்றனர். 1992 ல் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட ஆஸ்திரேலியா சென்றது நம் அணி. நான்கு போட்டிகளில் தோல்வி, ஒன்றில் மட்டுமே டிரா என சோகமாகவே இந்த தொடர் அமைந்தது. சதம் #2 ரன்கள் : 148 எதிரணி : ஆஸ்திரேலியா இடம் : சிட்னி,ஆஸ்திரேலியா நாள் : ஜனவரி 6,1992 ஆட்ட முடிவு : டிரா இந்தியா அந்த தொடரில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் இருந்த ஒரே போட்டி இது ... Read more99 நாட் அவுட்.! (1)
சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டுக்காக கடவுள் அனுப்பி வைத்த தூதுவர். இந்தியாவின் நூறு கோடி பேருக்கும் ஒரே நேரத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய செயல் என்றால் அது சச்சின் சதமடிப்பதாக இருப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. இருபது ஆண்டுகளை தாண்டியும், ஒரு இருபது வயது இளைஞனை போல விளையாடி வருகிறார் அவர். 1989 ல் சர்வதேச கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து நாட்டின் கிரிக்கெட் பசிக்கு இன்று வரை தீனி போட்டு வருகிறார் சச்சின். எல்லோரும் ஒரு சதம் அடிப்பதே பெரிய விசயம் என்றால் இவர் இப்போது சதத்தில் சதம் அடிக்கப் போகிறார். 99 சர்வதேச சதங்கள் அடித்து இருக்கும் அவர், இன்னும் கொஞ்ச நாட்களில் நூறாவது சதம் அடித்து விடுவார். சரி, இதுவரை அவரடித்த சதங்களின் தொகுப்பாக இந்த தொடர் பதிவை இடலாம் என்றிருக்கிறேன். இன்று : 1) 119* vs இங்கிலாந்து இந்த போட்டியில் மட்டும் மொத்தம் ஆறு சதங்கள் அடிக்கப்பட்டன. ... Read moreபுனே போராட்டம் : மும்பை முன்னேற்றம்
ஐபிஎல் போட்டிகளில் மும்பை-புனே இடையே நடந்த போட்டி மிக எளிதாக மும்பை அணிக்கு சாதகமாகும் என்று பார்த்தால், புனே அணி ஆட்டத்தின் பின் பகுதியில் திறமை காட்டி போட்டியை கடைசி ஓவரின் கடைசி பந்து வரை நீளச் செய்தனர். நாணய சுழற்சியில் வெற்ற பெற்ற புனே அணி முதலில் பேட்டிங் செய்தது. முர்டாசா முதல் ஓவரை வீசினர். அவரின் ரன் எடுக்க முடியாதபடியான பந்துகளால் சிரமப்பட்ட புனே அணி 3.2 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. நெச்சிம்,முனாப் அடுத்தடுத்து புனே வீரர்களை அவுட் ஆக்கி ஆட்டத்தை தங்கள் வசம் கொண்டு வந்தனர். சச்சின் பின்புறமாக நகர்ந்து கேட்ச் பிடித்து முதல் விக்கெட்டை தொடக்கி வைத்தார். கேப்டன் யுவராஜ் சிங் அவுட் ஆனதும் கிட்டத்தட்ட உத்தப்பாவே கதி என்ற நிலைக்கு புனே போனது. சைமண்ட்ஸ் ஒருவேளை அடுத்த ஓவரில் தனது கீழாக ஸ்டம்பை நோக்கி அடித்த (Under Arm) பந்தை துல்லியப்படுத்தி ... Read more
Next »