Category: சச்சின்

99 நாட் அவுட்.! (3)

பந்துவீச்சுக்கு சாதகமான ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் நடந்த போட்டியில் தனது நான்காவது சதத்தை சச்சின் பதிவு செய்தார். இந்த போட்டியில் அவரைத் தவிர வேறு யாரும் மூன்று இலக்க ரன்கள் அடிக்கவில்லை என்பது சச்சின் தன் திறமையை எந்த ஆடுகளத்திலும் மிகச் சிறப்பாக பயன்படுத்துவார் என்பதற்கு நல்ல சான்று. சதம் #4 ரன்கள் : 111 எதிரணி : தென் ஆப்ரிக்கா இடம் : ஜோஹன்னஸ்பர்க்,தென் ஆப்ரிக்கா நாள் :  நவம்பர் 28,1992 ஆட்ட முடிவு : டிரா ஆட்ட நாயகன் : இல்லை போட்டியின் முதல் இன்னிங்க்ஸ்-ல் 292 ரன்கள் மட்டுமே எடுத்தது தென் ஆப்ரிக்கா. இந்த டெஸ்ட் போட்டியின் எந்த இன்னிங்க்ஸ்-லும் ரன் விகிதம் 3 ஐக் கூட தொடவில்லை. ஜான்டி ரோட்ஸ் 28 ரன்கள் எடுத்த பொது ரன் அவுட் ஆனார். ஆனால் பக்னர் மூன்றாவது நடுவரைக் கூடக் கேட்காமல் அவுட் இல்லை என்று சொல்லி அவருக்கு நல்ல ... Read more

99 நாட் அவுட்.! (2)

நேற்றைக்கு சச்சின் முதல் சதங்கண்டதை பார்த்தோம். இன்று அவர் 1992ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இரண்டு சதங்கள் அடித்தது பற்றிப் பார்ப்போம். நம்ம இந்திய துணைக் கண்டத்தில் உள்ள பிட்சுகள் எல்லாமே சுழலுக்கு சாதகமானவை. வேகப் பந்துவீச்சு அவ்வளவாக எடுபடாது.ஆனால் ஆஸ்திரேலிய மண்ணில் உள்ளவை வேகப் பந்துவீச்சுக்கு மிக நன்றாக ஈடுகொடுக்கக் கூடியவை. அதனாலேயே மிரட்டும் வேகப் பந்து வீச்சாளர்கள் பலரும் அங்கிருந்து உருவாகி இருக்கின்றனர். 1992 ல் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட ஆஸ்திரேலியா சென்றது நம் அணி. நான்கு போட்டிகளில் தோல்வி, ஒன்றில் மட்டுமே டிரா என சோகமாகவே இந்த தொடர் அமைந்தது. சதம் #2 ரன்கள் : 148 எதிரணி : ஆஸ்திரேலியா இடம் : சிட்னி,ஆஸ்திரேலியா நாள் :  ஜனவரி 6,1992 ஆட்ட முடிவு : டிரா இந்தியா அந்த தொடரில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் இருந்த ஒரே போட்டி இது ... Read more

99 நாட் அவுட்.! (1)

சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டுக்காக கடவுள் அனுப்பி வைத்த தூதுவர். இந்தியாவின் நூறு கோடி பேருக்கும் ஒரே நேரத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய செயல் என்றால் அது சச்சின் சதமடிப்பதாக இருப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. இருபது ஆண்டுகளை தாண்டியும், ஒரு இருபது வயது இளைஞனை போல விளையாடி வருகிறார் அவர். 1989 ல் சர்வதேச கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து நாட்டின் கிரிக்கெட் பசிக்கு இன்று வரை தீனி போட்டு வருகிறார் சச்சின். எல்லோரும் ஒரு சதம் அடிப்பதே பெரிய விசயம் என்றால் இவர் இப்போது சதத்தில் சதம் அடிக்கப் போகிறார். 99 சர்வதேச சதங்கள் அடித்து இருக்கும் அவர், இன்னும் கொஞ்ச நாட்களில் நூறாவது சதம் அடித்து விடுவார். சரி, இதுவரை அவரடித்த சதங்களின் தொகுப்பாக இந்த தொடர் பதிவை இடலாம் என்றிருக்கிறேன். இன்று : 1) 119* vs இங்கிலாந்து இந்த போட்டியில் மட்டும் மொத்தம் ஆறு சதங்கள் அடிக்கப்பட்டன. ... Read more

புனே போராட்டம் : மும்பை முன்னேற்றம்

ஐபிஎல் போட்டிகளில் மும்பை-புனே இடையே நடந்த போட்டி மிக எளிதாக மும்பை அணிக்கு சாதகமாகும் என்று பார்த்தால், புனே அணி ஆட்டத்தின் பின் பகுதியில் திறமை காட்டி போட்டியை கடைசி ஓவரின் கடைசி பந்து வரை நீளச் செய்தனர். நாணய சுழற்சியில் வெற்ற பெற்ற புனே அணி முதலில் பேட்டிங் செய்தது. முர்டாசா முதல் ஓவரை வீசினர். அவரின்  ரன் எடுக்க முடியாதபடியான பந்துகளால் சிரமப்பட்ட புனே அணி 3.2 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. நெச்சிம்,முனாப் அடுத்தடுத்து புனே வீரர்களை அவுட் ஆக்கி ஆட்டத்தை தங்கள் வசம் கொண்டு வந்தனர். சச்சின் பின்புறமாக நகர்ந்து கேட்ச் பிடித்து முதல் விக்கெட்டை தொடக்கி வைத்தார். கேப்டன் யுவராஜ் சிங் அவுட் ஆனதும் கிட்டத்தட்ட உத்தப்பாவே கதி என்ற நிலைக்கு புனே போனது. சைமண்ட்ஸ் ஒருவேளை அடுத்த ஓவரில் தனது கீழாக ஸ்டம்பை நோக்கி அடித்த (Under Arm) பந்தை துல்லியப்படுத்தி ... Read more

சச்சினின் சத வேட்டை தொடர்கிறது..! கூடவே தோல்வி ராசியும்…!

சச்சின் ஐபிஎல் போட்டிகளில் தனது முதலாவது சதத்தை கொச்சி அணிக்கு எதிராக பதிவு செய்திருக்கிறார். உலக கோப்பை முடிந்தவுடன் சச்சின் ஒய்வு பெற வேண்டும் என ஓதிய வாய்கள் வாவ்.. என்று வியக்கும் அளவுக்கு விளாசி தள்ளிய சச்சின் இன்னிங்க்ஸ் ன் கடைசி பந்தில் சதமடித்தார். ஆனால் பின்னர் விளையாடிய கொச்சி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் சிறந்த ஆட்டத்தால் அவ்வணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொச்சி அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்து வீச தீர்மானித்தது. முதலில் ஜேகப்ஸ் உடன் களம் இறங்கிய சச்சின்  அவர் சரியாக விளையாடாததால் கொஞ்சம் வேகமாக ரன் குவிக்கும் கட்டாயத்தில் இருந்தார். முதல் விக்கெட்டுக்கு 61 ரன் சேர்ந்த நிலையில் ஜேகப்ஸ் அவுட் ஆனார். அவர் 12 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் சச்சின் அந்நேரத்திர்கெல்லாம் நாற்பது ரன்களை கடந்திருந்தார். இதில் பெரேரா பந்தில் அடித்த ஸ்ட்ரைட் டிரைவ், ஆர் பி ... Read more

சச்சினுக்கு இன்னொரு மகுடம்..!

கடந்த ஓராண்டில் சச்சின் தன் 20 வருட கிரிக்கெட் வாழ்வின் உச்சத்தை அடைந்து விட்டார். ஒரு தின போட்டிகளில் கனவாக இருந்த 200 ரன்களை நிஜமாக்கி காட்டினார், டெஸ்ட் போட்டிகளில் 50வது சதம் அடித்தார், சர்வதேச அரங்கில் 30,000 ரன்களை கடந்தார், எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பிடிக்கும் தன் வாழ்நாள் ஆசையை பூர்த்தி செய்து கொண்டார். இப்போது 2010 ம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட்டர் விருதை பெற்றிருக்கிறார். விஸ்டன் விருதுகள் : கிரிக்கெட்டின் நோபல் என்று அழைக்கப்படும் இவ்விருதுகள் 142 ஆண்டு காலமாக வழங்கப்பட்டு வருகிறது, ஆனால் இம்முறை பாகிஸ்தான் அணியில் நடந்த மேட்ச் ஃபிக்சிங் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் ஐந்து விருதுகளுக்கு பதிலாக இம்முறை நான்கு தான் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 2010 ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரராக சச்சின் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் தான் அறிமுகம் ஆன காலத்தில் இருந்து தொடர்ந்து ... Read more

மும்பை இண்டியன்ஸ் அணி வெற்றி நடை.. சச்சின்,ராயுடு அரை சதம்

மற்ற எல்லா ஐபிஎல் அணிகளுக்கும் மும்பை அணிக்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. எந்த அணியின் உள்ளூர் ரசிகர்களும் மும்பை அணியிடம் தங்கள் அணி தோற்பதை வெறுப்பதினும் கொஞ்சம் அதிகமாக விரும்புவார்கள். சச்சின் விளையாடும் அணி ஆயிற்றே, சச்சின் விளையாடுவதை பார்ப்பதற்காகவே போட்டிக்கு வருபவர்கள் உண்டு. அந்த வகையில் பார்த்தால் பெங்களூர் ரசிகர்கள் இன்று திருப்தி பட்டிருப்பார்கள்.மும்பை பெங்களூர் அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை அணி 9 விக்கெட் மீதமிருக்கையில் வெற்றி பெற்றது. சச்சின்,ராயுடு  அரை சதமடித்தனர். நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சச்சின் முதலில் பந்து வீச தீர்மானித்து பெங்களூர் அணியை பேட் செய்ய அழைத்தார். முதல் ஓவரிலியே மலிங்கா விக்கெட வீழ்த்த அந்த அணி தனது முதல் பாதியில் மிக மந்தமாக விளையாடியது. பின் பாதியில் சுதாரித்து ஆடினாலும் அந்த அணியால் 140 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. முனாப் படேல் தனது முதல் இரண்டு ... Read more

மும்பை இந்தியன்ஸ் வெற்றி தொடக்கம்..!

என்ன தான் நாமெல்லாம் தமிழ்நாட்டில் இருந்தாலும் அது என்னவோ தெரியல சென்னை அணி விளையாடும் போது இருப்பது போன்ற அதே உணர்வு சச்சின் அணி விளையாடும் போது இருப்பது தவிர்க்க முடியாதது. ஏனெனில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக கிரிக்கெட் என்றால் சச்சினை பிரித்து பார்க்க முடியாது. டெல்லி அணிக்கு இடையே நடந்த இப்போட்டியில் மும்பை அணி எட்டு விக்கெட்டுகள் மீதம் இருக்கையில் வெற்றி பெற்றது. பல நல்ல வீரர்களை இழந்ததற்கு விலையை இப்போதே டெல்லி கொடுக்க தொடங்கி விட்டது என்றால் பொருத்தமாக இருக்கும். கிட்டத்தட்ட சேவாக் அடித்தால் வெற்றி இல்லையேல் அவ்வளவு தான் என்ற நிலைமையில் தான் டெல்லி அணி உள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சேவாக் முதலில் பேட்டிங் செய்ய விரும்பி களமிறங்கினார்.  லசித் மலிங்கா தாண்டவம் : முதல் ஓவர் வீசிய ஹர்பஜன் சேவாகிடம் ஒன்றும் பெரிதாக செய்ய முடியவில்லை. சேவாக் அந்த ஓவரில் இரண்டு பவுண்டரிகள் ... Read more