Category: ஐபிஎல்
புனே சென்னை ஆகுமா?
புனே: பிரிமியர் தொடரில் தோனி-பிளமிங் கூட்டணி மீண்டும் அசத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆறாவது பிரிமியர் தொடரில் நடந்த சூதாட்டம் காரணமாக சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தலா 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டன. இதற்குப் பதில் வரும் 9ம் தேதி துவங்கும் 9வது பிரிமியர் தொடரில் புனே, குஜராத் என, இரு அணிகள் புதிதாக களம் காணுகின்றன. இதில் புனே அணிக்கு கேப்டனாக தோனி, பயிற்சியாளராக பிளமிங் இருப்பதால், பார்ப்பதற்கு சென்னை அணி போல உள்ளது. சென்னை அணிக்கு 2010, 2011ல் பிரிமியர் கோப்பை, 2010, 2014ல் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை தோனி-பிளமிங் கூட்டணி பெற்று தந்தது. இவர்கள் இருப்பதால் புனே அணி மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு கேப்டன்: தவிர, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலிய ‘டுவென்டி-20’ அணிகளின் கேப்டன்கள் டுபிளசி, ஸ்டீவ் ஸ்மித், ரகானே, நட்சத்திர வீரர் பீட்டர்சன் என, பெரும் பட்டாளமே இந்த அணியில் உள்ளது. மூன்று ‘சுழல்’: ... Read moreசச்சினுக்கும் மச்சம்…!
என்ன இது மிக எளிதான போட்டியாகி விட்டதே என்று போட்டியின் முதல் ஆறு ஓவர்கள் முடிவில் எல்லோருமே எண்ணி இருப்பார். ஆனால் டச்சு பேட்ஸ்மேன் ரியான் டென் டாஸ்சாடே மிக சிறப்பாக விளையாடியதுடன் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து போட்டியை வெறுமனே மும்பையிடம் ஒப்படைக்காமல் கொல்கத்தாவை காப்பாற்றினார். முனாப் படேலின் துல்லியமான ஸ்டம்ப் டு ஸ்டம்ப் பந்துகள் மீண்டும் ஒருமுறை அவரை வெற்றி வீரராக மாற்றியது. முதலிலேயே இரண்டு விக்கெட்டுகள் எடுத்து கொல்கத்தாவை திணறடித்தார். முதல் விக்கெட்டின் கேட்சை பிடித்தது சச்சின், நிச்சயம் அவர் இன்னும் பத்தாண்டுகள் விளையாடலாம். என்ன ஒரு கேட்ச் அது, The Ever Youth Sachin took the brilliant catch.. பவர்ப்ளே முடியும் போதெல்லாம் நான்கு விக்கெட்டுகளை இழந்த அந்த அணி டாஸ்சாடே மற்றும் பதானின் பொறுமையான ஆட்டத்தால் பெறும் சரிவில் இருந்து மீண்டது. எதிர்ப்பார்த்தது போலவே யூசுப் பதான் கொஞ்சம் அவசரப்பட்டு அடிக்க பொல்லார்டு ... Read moreஇறுதிப் போட்டியில் சென்னை – பெங்களூர் உடன் சூப்பர் வெற்றி
போட்டியை பார்த்துக் கொண்டிருந்த எல்லோருமே சென்னை தோற்று விடும் என்றிருக்க பதினோரு பேர் மட்டும், சென்னை வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருந்தனர்,அவர்கள் மஞ்ச சட்டை போட்ட சூப்பர் கிங்க்ஸ் அணி வீரர்கள். கிட்டத்தட்ட தோற்று விடும் என்ற நிலையில் இருந்து கடைசி ஐந்து ஓவர்களை 59 ரன்கள் எடுத்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது. பெங்களூர் முதலில் பேட்டிங் : நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தோனி முதலில் பந்து வீச தீர்மானித்தார். நிச்சயம் அது கெய்ல்-ஓ-போபியா வால் தான். முதலில் போல்லின்கர் மற்றும் மார்க்கல் பந்து வீசினர். கெய்ல் அடிக்க ஆரம்பிக்கும் முன்னே அகர்வால் நன்றாக விளையாடி ரன்கள் சேர்க்க ஆரம்பித்தார். ஆனால், அஸ்வின் பந்து வீச வந்ததுமே சென்னைக்கு ஒரு விக்கெட் உறுதி என தெரிந்தது, கெய்ல் அஸ்வின் பந்தை சிக்சருக்கு விரட்ட, அடுத்த பந்திலேயே கெய்லை பெவிலியனுக்கு விரட்டினார் அஸ்வின். சென்னை அணி வீரர்கள் ... Read moreசொல்லாமல் அடித்த நிஜ கில்லி..
கண்மூடித்தனம்,செம அடி,வெளுத்து வாங்குறது,அதிரடி இப்படி எப்படி இவரை வர்ணித்தாலும் கடைசியில் தன் திறமையால் அனைத்துக்கும் தான் சொந்தக்காரன் என்பதை நிரூபிப்பார் கில்க்ரிஸ்ட். இந்த ஐபிஎல்லில் சதங்கள் குவிந்த வண்ணம் உள்ளன கெய்ல்,வால்தாட்டி,சச்சின் என இப்போது கில்லி தனது ஸ்டைலான அதிரடி மூலம். பொறுமையாக விளையாட தொடங்கி அசுர வேகத்தில் சிக்ஸர்களை அடித்து ஐம்பதை நோக்கி சென்ற கில்லி பின்னர் மார்ஷை அடிக்க விட்டு கடைசியில் மீண்டும் வெளுத்து வாங்கி இன்னமும் பஞ்சாப் அணியை அடுத்த சுற்றுக்கு போகும் வாய்ப்பை நழுவ விடாமல் கெட்டியாக பிடிக்க வைத்திருக்கிறார். ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிய காலங்களில் பார்த்த கில்லியை மீண்டும் காட்டிய ஐபிஎல்லிற்கு நன்றி சொல்லும் அதே வேளையில், இவ்வளவு தொடர் நீளமாக இருப்பதால் என்ன இவ்வளவு விரைவாக முடிந்து விட்டது என்பதிற்கு பதிலாக, எப்படா இறுதிப் போட்டி வரும் என்று எண்ண வேண்டி இருக்கிறது. தர்மசேலாவில் நடந்த போட்டியில் கிட்டத்தட்ட ஒரு புயலே அடித்தது ... Read moreமும்பை மீண்டும் சொதப்பல் – பஞ்சாப் வெற்றியை பறித்தது
மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் ஒருமுறை பேட்டிங் சொதப்பலால் தோல்வி அடைந்து விட்டது.சச்சினில் தொடங்கி அனைத்து வீரர்களும் பஞ்சாபிடம் விக்கெட்டைக் கொடுத்து பெவிலியனுக்கு வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தெண்டுல்கர் முதலில் பந்து வீச தீர்மானித்தார். ஆனால் அது அவர்களுக்கே போய் வினையாய் முடிந்து விட்டது. அந்த அணி முதல் 15 ஓவர்கள் வரை ஆட்டத்தை தன் கையை விட்டு போகாமல் பார்த்துக் கொண்டது. பால் வல்தாட்டி அவுட் ஆனதற்கு பின்பு ஜோடி சேர்ந்த கில்க்ரிஸ்ட் – மார்ஷ் இணை பஞ்சாப் அணியை பத்து ஓவர்களில் கிட்டத்தட்ட நூறு ரன்களுக்கு இட்டு சென்றனர். ஷான் மார்ஷ் அதிரடியாக விளையாடி ஐந்து பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்தார். இவர்கள் இணை பிரிந்த பின்பு தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி அணியை வழி நடத்தினார். அவர் 24 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். ஆனால் அதற்கு பின்பு ... Read moreராஜஸ்தானை வீழ்த்தி இரண்டாம் இடத்தில் சென்னை..!
முரளி விஜய்,தோனியின் அசத்தல் மட்டை வீச்சு மற்றும் அணி வீரர்களின் சிறந்த களத்தடுப்பு,பந்து வீச்சு சேர்ந்து ராஜஸ்தான் அணியை சென்னையிடம் தோல்வி அடையச் செய்தன. ஐபிஎல் 4 கிட்டத்தட்ட பொலிவிழந்து விட்டது. ஆனாலும் அவ்வப்போது சில சிறந்த ஆட்டங்களினால் இன்னமும் கொஞ்ச பேர் ஐபிஎல்லை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சென்னையுடன் போட்டி ஆரம்பிக்கும் முன்னரே, வார்னே ஜெய்பூர் ஆடுகளம் மாற்றப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்ததாக ஒரு வதந்தி (உண்மை?) பரவியது. கடைசியில் அவர் எதிர்பார்த்த படியே நடந்தும் விட்டது. வழக்கமாக ராஜஸ்தானின் ஆடுகளம் சுழல் வீச்சுக்கு சாதகமாகவும் அதிக ரன்கள் அடிக்க முடியாதபடியும் இருக்கும் ஆனால், இந்த போட்டியில் முதலில் நெட்டிங் செய்யப் பணிக்கப்பட்ட சென்னை அணியின் அனைத்து முன் வரிசை ஆட்டக்காரர்களும் சதிராடி காட்ட, சென்னை மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 196 ரன்கள் அடித்தது. மைகேல் ஹஸ்ஸி ஆரம்பம் முதலே ராஜஸ்தான் பந்து வீச்சாளர்களுக்கு பவுண்டரிக் கோடுகளை அடிக்கடி காண்பித்த ... Read moreபுனே போராட்டம் : மும்பை முன்னேற்றம்
ஐபிஎல் போட்டிகளில் மும்பை-புனே இடையே நடந்த போட்டி மிக எளிதாக மும்பை அணிக்கு சாதகமாகும் என்று பார்த்தால், புனே அணி ஆட்டத்தின் பின் பகுதியில் திறமை காட்டி போட்டியை கடைசி ஓவரின் கடைசி பந்து வரை நீளச் செய்தனர். நாணய சுழற்சியில் வெற்ற பெற்ற புனே அணி முதலில் பேட்டிங் செய்தது. முர்டாசா முதல் ஓவரை வீசினர். அவரின் ரன் எடுக்க முடியாதபடியான பந்துகளால் சிரமப்பட்ட புனே அணி 3.2 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. நெச்சிம்,முனாப் அடுத்தடுத்து புனே வீரர்களை அவுட் ஆக்கி ஆட்டத்தை தங்கள் வசம் கொண்டு வந்தனர். சச்சின் பின்புறமாக நகர்ந்து கேட்ச் பிடித்து முதல் விக்கெட்டை தொடக்கி வைத்தார். கேப்டன் யுவராஜ் சிங் அவுட் ஆனதும் கிட்டத்தட்ட உத்தப்பாவே கதி என்ற நிலைக்கு புனே போனது. சைமண்ட்ஸ் ஒருவேளை அடுத்த ஓவரில் தனது கீழாக ஸ்டம்பை நோக்கி அடித்த (Under Arm) பந்தை துல்லியப்படுத்தி ... Read moreடெக்கான் ஒளியில் டெல்லி மழுங்கியது..!
சங்கக்காரா மற்றும் சொஹல் இடையேயான வலுவான கூட்டாளி ஆட்டம் (Partnership?) காரணமாக டெக்கான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் முதல் ஓவரிலியே சொஹல் பவுண்டரி அடிக்க, அதே ஓவரில் தவான் மேலும் இரண்டு பவுண்டரி அடித்து மிகச் சிறப்பானதொரு தொடக்கத்தைக் கொடுத்தனர். ஆனால் டெல்லி அடுத்த ஓவரிலியே பதான் பந்தில் தவானை வெளியேற்றியது. இந்த விக்கெட் அப்போதைக்கு டெல்லிக்கு மகிழ்ச்சி அளித்தாலும் பின்னர் ஜோடி சேர்ந்த சங்ககரா சொஹல் இணை 92 ரன்கள் அடித்து டெக்கான் அணியை நல்ல நிலைக்கு கொண்டு விட்டனர். சொஹல் டெக்ஸ்ட்புக் ஷாட்களை விளையாடிய அதே நேரத்தில் சில வித்தியாசமான வீச்சுகளிலும் ரன் குவித்தார். சங்ககரா தனக்கு உரிய நேர்த்தியான ஆட்டம் மூலம் தொடர்ந்து ரன் குவித்தார். அதுவும் ஸ்பின்னர் பந்து வீசும் போதெல்லாம் அவர் ஏதோ தனக்காகவே அவர் பந்து வீச வருவதாக நினைத்து பவுண்டரிகள் அடித்தது, அவர் இலங்கைக்காரர் என்பதையும் ... Read moreமுதலில் மும்பை,இப்போது சென்னை – பின்னி எடுக்கும் கொச்சி
சென்னை இரண்டாவது முறையாக ஐபிஎல் 2011 இல் தோல்வி அடைந்தது. கொச்சி அணி சென்ற போட்டியில் மும்பை அணிக்கு அதிர்ச்சி தோல்வி அளித்தது. அப்போதே ஒரு இலங்கைக்காரர் தலைமை தாங்கும் அணியிடம் சச்சின் அணி தோற்றது ஒரு மாதிரி இருந்தது. இப்போது சென்னை அணி தோற்கும் போது அதனினும் வருத்தமாகவே உள்ளது. ஆனாலும் திறமை இருக்கிறது வெற்றி பெறுகிறார்கள் என்று மனதை தேற்றிக்கொள்ள வேண்டியது தான். முதலில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று கொச்சி களத்தடுப்பை தெரிந்தெடுத்தது. சென்னை வீரர் ஹஸ்ஸி 8 ரன்களில் வெளியேற, முரளி விஜய்,சுரேஷ் ரெய்னாவின் சிறப்பான மட்டை வீச்சில் நன்றாகவே விளையாடி வந்தது சென்னை. ஆனால் விஜய் ஆட்டமிழக்க, பத்ரிநாத் வந்து சில நேரம் ஆட்டத்தை தொடங்குமுன் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் மூன்று ஓவர்கள் குறைக்கப்பட்டு 17 ஓவர்களாக மாறியது. ஆட்டமும் மாறியது. வழக்கம் போல கஷ்டப்பட்டு(?) விளையாடிய பத்ரிநாத் 19 ரன்களில் அவுட் ... Read moreயுவராஜ் ஆட்டம் சேவாக்கிடம் பலிக்கவில்லை : டெல்லி வெற்றி
ஐ.பி.எல்., தொடரில் சேவக் தலைமையிலான டில்லி டேர்டெவில்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. நேற்று நடந்த லீக் போட்டியில் புனே வாரியர்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பேட்டிங், பவுலிங்கில் அசத்திய புனே கேப்டன் யுவராஜ் சிங்கின் ஆட்டம் வீணானது. நான்காவது ஐ.பி.எல்., “டுவென்டி-20′ கிரிக்கெட் தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. நேற்று, மும்பையில் உள்ள டி.ஒய். படேல் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் புனே வாரியர்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. “டாஸ்’ வென்ற டில்லி அணி கேப்டன் சேவக், “பீல்டிங்’ தேர்வு செய்தார். ஹோப்ஸ் வருகை: டில்லி அணியில் மூன்று மாற்றம் செய்யப்பட்டது. வான் டர் மெர்வி, மார்னே மார்கல், உன்முக்த் சந்த் நீக்கப்பட்டு ஜேம்ஸ் ஹோப்ஸ், மாத்யூ வாடே, உமேஷ் யாதவ் வாய்ப்பு பெற்றனர். புனே அணியில் முரளி கார்த்திக் நீக்கப்பட்டு அபிஷேக் ஜுன்ஜுன்வாலா தேர்வு செய்யப்பட்டார். ரைடர் அதிரடி: முதலில் பேட்டிங் ... Read more
Next »