ஈழ தமிழருக்காக இளைஞர் தற்கொலை..!

1
92
தற்கொலை செய்து கொள்வது எந்த நிலையிலும் பிரச்னைக்கு ஒரு முடிவு ஆகாது. ஏற்கனவே சில பேர் இலங்கை தமிழருக்காக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அப்போதெல்லாம் என்ன நடந்ததோ அதே தான் இப்போதும் நடக்கப் போகிறது. இருந்தாலும் தன் இனத்தவன் படும் இன்னலுக்கு தன்னை தீக்கு இறை ஆக்கிய கிருஷ்ணமூர்த்தியின் ஆத்மா அமைதி அடைய வேண்டுமாயின் அவர் எண்ணியது நடக்க வேண்டும்.

இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து மனவேதனை அடைந்திருந்ததாகக் கூறப்படும் தமிழக இளைஞர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள சீகம்பட்டி கிராமத்தை சொந்த ஊராகக் கொண்ட 25 வயது பொறியியலாளர் கிருஷ்ணமூர்த்தி தன் மீது பெற்றோல் ஊற்றி தீவைத்துக்கொண்டார்.

தீக்காயங்களுடன் மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இலங்கைத் தமிழர்கள் அனுபவித்த துன்பங்களால் விரக்தி அடைந்தே தான் தற்கொலை செய்துகொள்வதாக அவர் தனது கைப்பட எழுதிய கடிதம் உறவினர்களிடம் கிடைத்துள்ளது.

மரணத் தருவாயில் கிருஷ்ணமூர்த்தி அளித்த வாக்குமூலத்தை போலிசார் பதிவுசெய்தனர் என்றாலும் அவரால் சரிவர பேச முடியாததால் அந்த வாக்குமூலத்தை பொலிசார் ஏற்கவில்லை.

மாறாக கிருஷ்ணமூர்த்தியுடைய பெற்றோர்களின் வாக்குமூலத்தை போலிசார் பதிந்துகொண்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்து
முந்தைய செய்திடெக்கான் ஒளியில் டெல்லி மழுங்கியது..!
அடுத்த செய்திவேற்று கிரகவாசியா? வெற்று புரளியா?
வலை எழுத்தில் கொண்ட பற்றால், முழு நேர வங்கிப் பணியை மூட்டை கட்டியவன்.

1 கருத்து

  1. என்ன கொடுமை பாஸ்! வருந்துகிறேன்!

    பதிலளிக்க

உங்கள் கருத்தை தெரிவிக்க