செராமிக் ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

0
28

கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் “Central Glass & Ceramic Research Institute”-ல் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள தொழிற்நுட்பம் சார்ந்த பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 01/2016

மொத்த காலியிடங்கள்: 14

பணி: Senior Technical Officer – 02

Technical Officer – 02

Technical Assistant – 03

Technician – 07

தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பாடப்பிரிவில் BE, B.Tech., B.Sc. பட்டத்துடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை “Central Glass & Ceramic Research Institute” என்ற பெயரில் SBI, Jadavpur University Branch, Kolkatta (Code No.000093) என்ற முகவரியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.04.2016

ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 15.05.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய  www.cgcri.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.