இந்திய துணை ராணுவ அமைப்பான மத்திய தொழிற்சாலைகள் பாதுகாப்பு படைப்பிரிவில் (சி.ஐ.எஸ்.எப்) நிரப்பப்பட உள்ள 137 கான்ஸ்டபிள் (டிரேட்ஸ்மேன்) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: கான்ஸ்டபிள் (டிரேட்ஸ்மேன்)
காலியிடங்கள்: 137
வயதுவரம்பு: 01.08.2016 தேதியின்படி 18 – 23க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
உடற் தகுதி: உயரம்: குறைந்தபட்சம் 170 செ.மீட்டரும் அதற்கேற்ற எடையும் பெற்றிருக்க வேண்டும். மார்பளவு: 80 செ.மீட்டரும், விரிவடைந்த நிலையில் 5 செ.மீட்டரும் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.05.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cisf.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.