ஆண்கள் கட்டாயம் மாதுளம் பழம் சாப்பிட வேண்டுமா?

0
360

மாதுளம் பழம் உண்ணக்கூடிய பழம் என்று எகிப்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.மாதுளம் பழத்தில் 50 சதவீதம் ஆன்டி-ஆக்சிடன்ட் மற்றும் வைட்டமின்-சி நிரம்பியுள்ளது.இது ஒரு நாளைக்கு தேவையான 40 சதவீத வைட்டமின்களை கொண்டுள்ளது.

ஒரு கப் மாதுளம் பழக்கொட்டையில், நார்ச்சத்து 7 கிராம், புரோட்டின் 3 கிராம், விட்டமின் சி 30 சதவீதம், விட்டமின் கே 36 சதவீதம், போலேட் 16 சதவீதம் மற்றும் பொட்டாசியம் 12 சதவீதம் உள்ளது.

மேலும், 24 கிராம் சர்க்கரை மற்றும் 144 கலோரி உள்ளது.

மாதுளையின் மருத்துவ குணங்கள்

*ஆண்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவது அதிகம் என்பதால், இதில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட் இதய நோய்கள் மற்றும் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.

* ஆண்கள் உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனைகளால் அதிகம் கஷ்டப்படுகிறார்கள்.

*அதிக தாகத்தைப் போக்கும்.மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும்.

*மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும்.

*மாதுளையில் இருந்து எடுக்கப்படும் சாறு மூட்டு பகுதிகளில் இருக்கும் சதை பகுதியில் ஏற்படக்கூடிய ஆஸ்டியோஆர்த்ரைடீஸ் என்னும் நோயை கட்டுப்படுத்துகிறது மற்றும் மூட்டு வலிமையடையவும் செய்கிறது.

* சிறுநீரக கோளாருகளை ஏற்படுத்தக்கூடிய டாக்சினிலிருந்தும் மாதுளை சாறு தடுக்கிறது.

*புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியம் மேம்பட்டு, ஆண்களை 50 வயதிற்கு மேல் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோயில் இருந்து பாதுகாப்புடன் இருக்கலாம். மேலும் மாதுளை நுரையீரல் புற்றுநோயின் வளர்ச்சியையும் தடுக்கும்.