எப்படி : இலவச டொமைன் .tk பிளாக்கருடன் பயன்படுத்துவது

10
148
இன்னும் நீங்கள் .blogspot.com போன்ற பெரிய இணைய முகவரியை வைத்து இருக்கிறீர்களா?
இது மாறுவதற்கான நேரம். dot.tk டொமைன் இலவசமாக கிடைக்கிறது அதனை உங்கள் பிளாக்கரில் பயன்படுத்துவதும் வெகு எளிது.

படி 1 :
இந்த தளத்திற்கு செல்லவும்

http://www.dot.tk/en/index.html?lang=en

படி 2 :
உங்கள் தள முகவரியை இடவும்.

படி 3 :
நீங்கள் விரும்பும் தள முகவரி, வார்த்தை சரிபார்த்தலை முடித்து பதிவு செய்யப்பட்ட இலவச டொமைன் என்பதில் சொடுக்கவும்.

படி 4 :
இலவச டொமைன் தெரிவு செய்யப்பட்டிருக்கும், அப்படியே தொடரவும். அடுத்து உங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுக்கவும். தங்களுக்கு அனுப்பப்படும் சரிபார்க்கும் மின்னஞ்சலை திறந்து, அதில் தரப்பட்டுள்ள முகவரிக்கு சென்று உங்கள் மின்னஞ்சலில் இருக்கும் CODE ஐ கொடுத்து விடவும்.

படி 5 :
dot.tk தளத்தில் உள்நுழைந்து டொமைனை திருத்தும் பக்கத்திற்கு செல்லவும். (Modify a domain)

படி 6 :
டொமைன் திருப்புதல் (Domain Forwarding) தெரிவு செய்யப்பட்ட இடத்தில் Use Dot TK Free DNS service என்பதை தெரிவு செய்து Configure  பட்டனை அழுத்தவும்.

படி 7 :

* Type – A என்று இருக்கும் இடத்தில் CNAME  ஐ தெரிந்தெடுக்க.

* Host name  : உங்கள் தள முகவரி (www.yourname.tk)

*  IP address : ghs.google.com என்று கொடுத்து next ஐ சொடுக்கவும்.

படி 8 :

 * பிளாக்கர் டாஷ்போர்டில் அமைப்புகள் (Settings) இல் சென்று Publishing னுள் செல்லவும்.

* Custom Domain ஐ தெரிவு செய்யவும்.

* பிறகு, Advanced Settings ற்கு செல்லவும்.

* அதில், உங்கள் www.yourname.tk ஐ நிரப்பிய பின்னர் சரிபார்க்கும் வார்த்தையை பூர்த்தி செய்து தொடரவும்.

*  இப்போது உங்கள் www.yourname.tk தயார்.

* ஆனால் இன்னொரு படி இருக்கிறது, சேமித்த பின் மீண்டும் தோன்றும் பக்கத்தில் yourname.tk ஐ www.yourname.tk க்கு திருப்பும் வசதியை டிக் செய்யவும்,இல்லையெனில் yourname.tk ஐ யாரேனும் திறக்க முயன்றால் பிழை பக்கம் காண்பிக்கும். 

சந்தேகம் இருப்பின் பின்னூட்டப்படுத்தவும். 
  

10 கருத்துக்கள்

 1. and how to change http://www.sample.blogspot.com to http://www.sample.com?

  பதிலளிக்க
 2. நிறைய வேலை செய்ய வேண்டி இருக்கும் போல.
  எளிதாக ஒரே கிளிக்கில் வரும் வழியைச் சொல்லுங்கள்

  பதிலளிக்க
 3. கஷ்டப்படமா எதுவும் கிடைக்காது..
  கஷ்டப்படாம கிடைக்கிற எதுவும் நிலைக்காது..

  அய்.. தத்துவம் ஃபிட் ஆகுதே..

  Its too simple
  Just sign up in dot.tk
  Apply setting in both dot.tk and blogger boards.

  அதை தான் கொஞ்சம் இழுத்து சொல்லி இருக்கேன்

  பதிலளிக்க
 4. sample.blogspot.com–> sample.com கேட்டவரே நீங்கள் கிண்டலடிக்க கேட்டிருந்தாலும் அல்லது நிஜமாகவே கேட்டிருந்தாலும் அதற்கு ஏன் பதில்..

  "ரொம்ப செலவாகும் பரவல்லியா?"

  பதிலளிக்க
 5. நன்றி மது..
  எமது வலைப்பூவை தொடர்ந்து பார்வையிடுங்கள்..

  பதிலளிக்க
 6. தங்களின் இந்த பதிவை வலைச்சர வலைதளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.கீழே உள்ள முகவரிக்கு வந்து பார்க்கவும்.
  http://blogintamil.blogspot.com/2011/10/6102011.html

  பதிலளிக்க
 7. வணக்கம்..நான் நீங்கள் கூரியவாரு செய்தேன்..ஆனால் பிளாக்கர் டாஷ்போர்டில் அமைப்புகள் (Settings) எப்படி செய்வது என்று தெரியவில்லை..இது பற்றி மேலும் விரிவாக சொல்லவும்

  பதிலளிக்க
 8. Sorry for the delay..
  I will be get back to u next sunday..
  thanks for vising my site

  பதிலளிக்க

உங்கள் கருத்தை தெரிவிக்க