Category: பகிர்வு

தமிழன்_என்ன_கண்டுபிடிச்சான்

தமிழன்_என்ன_கண்டுபிடிச்சான் என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும் நேரத்தில் தமிழனின் சாதனை பட்டியல்கள்…. பகிருங்கள் நண்பர்களே நமது வரலாறு நமக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்……………. பதாகைக்கு வரலாறு தேடவேண்டிய நிலைமை பிறர்க்கு,வரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை தமிழர்களுக்கு……! கல்லணை :- உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்கு இரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை , இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான் ? மாமல்லபுரம் :- கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள். மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை ... Read more

எது உண்மையான தமிழ் புத்தாண்டு?

எது உண்மையான தமிழ் புத்தாண்டு என்பது ஒரு விவாதத்திற்கு உரியதாகவும், அரசியலாகவும் மாறி உள்ளது மிகவும் வருந்தப்பட வேண்டிய ஒரு நிலை.   தனி மனிதனாக ஒவ்வொருவரும் சில சமுகத்தின் பழக்கவழக்கத்தினை ஏன் என்று கேட்காமல் பின்பற்றுகிறோம்.  சில தனி மனிதர்கள் அப்படிப்பட்ட நீண்ட நாளைய நடைமுறையை மாற்றி அமைக்க முனையும்போது அதை மிகவும் நிதானமாகவும், பொறுமையாகவும் கையாளவேண்டும்.  காரணம், தனி மனிதர்கள் மேல் உள்ள மக்களின் அபிப்பிராயங்கள் மாறும்போது, அரசியல் கட்சிகளை விரும்பாத தமிழர்கள் அதை சொல்பவரை பொறுத்து, சொல்லும் கட்சியை, அதன் கொள்கைகளைப் பொறுத்து தமிழ் கலாச்சாரம் சார்ந்த ஒரு இதுபோன்ற ஒரு முடிவை ஆதரிப்பதோ, ஆதரிக்காமல் போவதோ, தமிழ் சமுகத்திற்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தும்.   சரி, சரியல்ல என்பதைத் தாண்டி, ஒரு கலாச்சாரம் சார்ந்த தமிழர்கள் வெகுவாக கொண்டாடுகிற ஒரு பண்டிகையை மாற்றியமைக்கும்போழுது அதற்கு சில வருடங்கள் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களை தயார் செய்து அதன்பின் பெரும்பாலான ... Read more

பின் லேடன் மரணம் : அமெரிக்கா கொண்டாட்டம்

அமெரிக்காவிற்கு இருந்த ஒரே அச்சுறுத்தல் ஆன பின்லேடன் அந்நாட்டு ராணுவத்தால் பாகிஸ்தானில் வைத்து கொல்லப்பட்டார். இனி என்ன வழக்கம்போல அவர் நல்லவரா? கெட்டவரா? விவாதம் தயாராகி ஒரு வாரத்திற்கு மீடியாவிற்கு தீனி கிடைக்கும். அல்குவைதா பயங்கரவாத கும்பல் தலைவன் ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் அமெரிக்க படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அமெரிக்க அரசு தொலைக்காட்சியில் தோன்றி பேசிய ஒபாமா : ஒசாமா பின் லேடன் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நடந்த இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பிறகு தீவிரமாக தேடப்பட்டு வந்தததாகவும், அமெரிக்காவின் நீண்ட கால திட்டம் தற்போது நிறை‌வேறியுள்ளதாகவும் மகிழ்ச்சி பொங்க கூறினார். இந்த நாள் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். நீதி நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்றார். சுற்றிவளைப்பு :   ஒசாமா பாகிஸ்தானில் பதுங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த வாரம் அமெரிக்க படைகள் ஒசாமா இருப்பிடத்தை நெருங்கியது. ... Read more

ஈழ தமிழருக்காக இளைஞர் தற்கொலை..!

தற்கொலை செய்து கொள்வது எந்த நிலையிலும் பிரச்னைக்கு ஒரு முடிவு ஆகாது. ஏற்கனவே சில பேர் இலங்கை தமிழருக்காக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அப்போதெல்லாம் என்ன நடந்ததோ அதே தான் இப்போதும் நடக்கப் போகிறது. இருந்தாலும் தன் இனத்தவன் படும் இன்னலுக்கு தன்னை தீக்கு இறை ஆக்கிய கிருஷ்ணமூர்த்தியின் ஆத்மா அமைதி அடைய வேண்டுமாயின் அவர் எண்ணியது நடக்க வேண்டும். இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து மனவேதனை அடைந்திருந்ததாகக் கூறப்படும் தமிழக இளைஞர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள சீகம்பட்டி கிராமத்தை சொந்த ஊராகக் கொண்ட 25 வயது பொறியியலாளர் கிருஷ்ணமூர்த்தி தன் மீது பெற்றோல் ஊற்றி தீவைத்துக்கொண்டார். தீக்காயங்களுடன் மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இலங்கைத் தமிழர்கள் அனுபவித்த துன்பங்களால் விரக்தி அடைந்தே தான் தற்கொலை செய்துகொள்வதாக அவர் தனது கைப்பட எழுதிய கடிதம் உறவினர்களிடம் கிடைத்துள்ளது. மரணத் தருவாயில் கிருஷ்ணமூர்த்தி ... Read more

யுவராஜ் ஆட்டம் சேவாக்கிடம் பலிக்கவில்லை : டெல்லி வெற்றி

ஐ.பி.எல்., தொடரில் சேவக் தலைமையிலான டில்லி டேர்டெவில்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. நேற்று நடந்த லீக் போட்டியில் புனே வாரியர்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பேட்டிங், பவுலிங்கில் அசத்திய புனே கேப்டன் யுவராஜ் சிங்கின் ஆட்டம் வீணானது. நான்காவது ஐ.பி.எல்., “டுவென்டி-20′ கிரிக்கெட் தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. நேற்று, மும்பையில் உள்ள டி.ஒய். படேல் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் புனே வாரியர்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. “டாஸ்’ வென்ற டில்லி அணி கேப்டன் சேவக், “பீல்டிங்’ தேர்வு செய்தார். ஹோப்ஸ் வருகை: டில்லி அணியில் மூன்று மாற்றம் செய்யப்பட்டது. வான் டர் மெர்வி, மார்னே மார்கல், உன்முக்த் சந்த் நீக்கப்பட்டு ஜேம்ஸ் ஹோப்ஸ், மாத்யூ வாடே, உமேஷ் யாதவ் வாய்ப்பு பெற்றனர். புனே அணியில் முரளி கார்த்திக் நீக்கப்பட்டு அபிஷேக் ஜுன்ஜுன்வாலா தேர்வு செய்யப்பட்டார். ரைடர் அதிரடி: முதலில் பேட்டிங் ... Read more

பாலாஜி கலக்கல் : கொல்கத்தா வெற்றி

ஐ.பி.எல்., லீக் போட்டியில் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பராக வீழ்த்தியது. இதன் மூலம் தொடரில் “ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது.”வேகத்தில்’ மிரட்டிய பாலாஜி, கோல்கட்டா அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார். பேட்டிங்கில் சொதப்பிய ராஜஸ்தான் அணி 81 ரன்களுக்கு சுருண்டு, ஏமாற்றம் அளித்தது. இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., “டுவென்டி-20′ தொடர் நடக்கிறது. நேற்று கோல்கட்டாவில் நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. “டாஸ்’ வென்ற கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர், “பீல்டிங்’ தேர்வு செய்தார். பாலாஜி மிரட்டல்: முதல் ஓவரே மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. பிரட் லீ அனல் பறக்க பந்துவீச… அதனை சக ஆஸ்திரேலிய வீரரான வாட்சன் எதிர்கொண்டதை காண முடிந்தது. போட்டியின் 3வது ஓவரை வீசிய பாலாஜி திருப்புமுனை ஏற்படுத்தினார். இவரது வேகத்தில் வாட்சன்(11) போல்டாக, கோல்கட்டா ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அடுத்துவந்த ராஜஸ்தான் ... Read more

சுஜாதாவுடன் ரஜினி..!

பாட்ஷா படம் வெளிவரவிருந்த சமயம்… எல்லா பத்திரிகைகளும் போட்டி போட்டுக் கொண்டு ரஜினியின் பேட்டிகளை வெளியிட விரும்பினார்கள். அவரே தேர்ந்தெடுத்து, குமுதம் ஆசிரியராக இருந்த அமரர் சுஜாதாவுக்கு மட்டும் பேட்டியளித்திருந்தார். 1995-ல் வெளிவந்தது. கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் ரஜினி அன்று தந்த பதில்கள் அத்தனை ஷார்ப்… இரண்டு வாரங்கள் வெளியான பெரிய பேட்டி அது. அதன் சில முக்கிய பகுதிகளை மட்டும் ஃப்ளாஷ்பேக் பகுதியின் முதல் கட்டுரையாகத் தருகிறோம். சுஜாதா: எங்கோ பஸ் கண்டக்டராக இருந்தவரை, தமிழ்நாட்டின் ஃபோக் ஹீரோவாக உயர்த்தியது விதியா, தெய்வச் செயலா? ரஜினி: தெய்வச் செயல்தாங்க. அதோட என் முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தது. கடவுளே எல்லாம் பாத்துப்பார்னு விட்டிருந்தா, நான் இன்னும் கண்டக்டராவே இருந்திருப்பேன். அந்த சூழ்நிலையில ஒரு பத்திரமான உத்தியோகத்தை விட்டுட்டு தைரியமா சென்னைக்கு வந்து ஒரு வாசல்ல காத்திருந்தது என் முயற்சிதான்… (சுஜாதா: ‘அதுபோல இன்னொரு முயற்சி செய்தால் என்ன ஆகும் என்று வியக்கத் தோன்றுகிறது!’) ... Read more

அப்படி போடு, பிரதமருக்கு அனுமதி மறுப்பு : தேர்தல் ஆணையத்தின் அதிரடிகள்

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலையொட்டி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் எமர்ஜென்ஸி நிலைமையை உருவாக்கி இருப்பதாக கூறப்படுவதை மறுத்துள்ளது தேர்தல் ஆணையம். முறைகேடுகள் நடைபெறும் போது கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது என்று விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் எமர்ஜென்ஸி நிலைமையை தோற்றுவித்து இருப்பதாக, தி.மு.க. மற்றும் பா.ம.க. ஆகிய கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்த நிலையில் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி, இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தார். அவர் கூறுபகையில், “தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் பணி சவாலாக விளங்கி வருகிறது. தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்துவதே எங்களுடைய முதன்மை பணியாகும். தேர்தலை அமைதியாகவும், வெளிப்படையாகவும், அனைவரும் பங்கேற்கும்படி நடத்த வேண்டிய பொறுப்பும் எங்களுக்கு உண்டு. தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களிலும் தேர்தல் செலவினங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பெரிய அளவில் ஈடுபட்டு வருகிறோம். வரலாறு காணாத அளவில், 5 மாநிலங்களிலும் ரூ.53 கோடிக்கு அதிகமான பணம் ... Read more

லோக்பால் சட்டக்குழு தலைவர் பிரணாப் முகர்ஜி..!

லோக்பால் மசோதா திருத்த கூட்டுக் குழுவின் (JDC) தலைவராக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். உயர்மட்டத்தில் இருப்போரின் ஊழலை விசாரிக்க மத்திய அரசு கொண்டுவரும் லோக்பால் மசோதா திருத்த கூட்டுக் குழுவில் சரிபாதி மக்கள் பிரதிநிதிகளும், மீதமுள்ளவர்கள் அரசுத் தரப்பிலிருந்தும் இடம்பெற வேண்டும் என்று கோரி சமூக சேவகர் அன்னா ஹஸாரே உண்ணாவிரதமிருந்தார். மேலும் இந்தக் குழுவுக்கு மத்திய அமைச்சர் யாரும் தலைவராக இருக்கக் கூடாது என்றும் நிபந்தனை விதித்திருந்தார். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5 தினங்களாக அவர் மேற்கொண்ட உண்ணாவிரதத்தின் பலனாக, மத்திய அரசு பணிந்தது. லோக்பால் கூட்டுக் குழுவின் சரிபாதி மக்கள் பிரதிநிதிகளாக இருப்பார்கள் என்றும், மீதி 50 சதவீத உறுப்பினர்கள் அமைச்சர்களாக இருப்பார்கள் என்றும் அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் தலைவராக மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜிதான் இருப்பார் என்றும், இணைத் தலைவராக சமூகப் பிரதிநிதி ஒருவர் இருக்கலாம் என்றும் மத்திய அரசு ... Read more

புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு…!

புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புலிகள் எண்ணிக்கை நிச்சயம் வருங்காலத்தில் இன்னும் அதிகமாகும். இந்தியாவில் சமீபத்தில் எடுக்கப்பட்ட புலிகளின் கணக்கெடுப்பின் படி நாட்டில் உள்ள காடுகளில் இருக்கும் புலிகளின் எண்ணிக்கை 1706 ஆக உயர்ந்துள்ளது என்று இந்திய சுற்றுச் சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 1411 என்ற அளவில் இந்த எண்ணிக்கை இருந்தது. ஆனால் புலிகள் உலவும் காட்டுப் பரப்பு மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளதாக சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். புலிகள் வாழும் முக்கிய காட்டுப் பகுதிகளில் மனிதத் தலையீடுகள் அதிகமாவதும், வளர்ச்சித் திட்டங்களுக்காக காடுகள் அழிக்கப்படுவதும், பல்வேறு காரணங்களுக்காக காடுகள் ஆக்கிரமிக்கப்படுவதுமே இதற்கு முக்கியக் காரணங்கள் என்று ராஜஸ்தான் மாநிலம் சரிஸ்கா புலிகள் சரணாலயத்தில் கள ஆய்வாளராக இருக்கும் சுகதீப் பட்டாச்சார்யா தமிழோசையிடம் தெரிவித்தார். அதே போல அரசால் வெளியிடப்பட்டுள்ள புலிகளின் எண்ணிக்கை ஒரு உத்தேச எண்ணிக்கை ... Read more