உலகம்

விகடனை போட்டு தள்ளும் நெட்டிசன்கள்

ஐந்தாண்டுகளாக அதிமுக சார்பு நிலையில் இருந்து விட்டு இப்போது சமீப காலமாக விகடன் லேசாக திமுக சார்ந்து கட்டுரைகளை வெளியிடுகிறது, ஒரு பக்கம் நடிகரின் ரசிகர்கள் பிறந்த நாள் என்ற பெயரில் ரகளை என சொல்லும் விகடன் இன்னொரு பக்கம் அதே நடிகரின் பிறந்தநாள் பற்றி வண்ணப்படங்களுடன் கட்டுரை போடுகிறது. வேறு எதுவும் டாபிக் கிடைக்கததால் விகடனை கொறிக்க தொடங்கி அது இப்போது உலக அளவில் ட்விட்டர் ட்ரெண்டு ஆகி விட்டது.   #விகடன்ஒருசில்றப்பய Tweets

சேலத்தில் நாக்கை துருத்தி …. பாதுகாவலரை அடித்த விஜயகாந்த்

சேலம்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் சேலத்தில் இன்று பத்திரிகையாளர்களை நாக்கை துருத்தி மிரட்டியதுடன், பாதுகாவலர் ஒருவரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோ அப்போது, தனியார் தொலைக்காட்சி நிருபர்கள், அவரிடம் மைக்கை நீட்டினர். இதனால், ஆத்திரம் அடைந்த விஜயகாந்த், பத்திரிகையாளர்களை நாக்கை துருத்தி கையை ஓங்கினார். அதோடு மட்டுமின்றி, தன்னை அழைத்து சென்ற பாதுகாவலரையும் விஜயகாந்த் நாக்கை துருத்தி தாக்கியதால், சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உதடுகளின் அசைவை வைத்து பேசுவதை இனங்காணும் ஒரு புதிய தொழில்நுட்பம் .

உதடுகளின் அசைவை வைத்து பேசுவதை இனங்காணும் தொழில்நுட்பம் ஒன்றை பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சி.சி.டிவியில் பதிவாகியுள்ளவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை புரிந்து கொள்வதற்கு இந்த தொழில்நுட்பம் பயன்படும். குற்றம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக சண்டையிடுவதற்கு இது உதவும் என இதனை உருவாக்கியுள்ள பிரிட்டனில் உள்ள ஈஸ்ட் ஆங்க்லியா பல்கலைக்கழகத்தின் கணிணி விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனாலும் இது பிரபலங்களின் கதைகளை தேடி வெளியிடும் ஊடகவியலாளர்களாலும் கூட பயன்படுத்தப்படலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். மனித உதடுகளின் அசைவை கொண்டு அவர்கள் பேசுவதை கண்டுபிடிப்பவர்கள் ஆங்கிலத்தில் P மற்றும் B ஆகிய எழுத்துக்கள் குறிக்கும் சத்தங்களை வேறுபடுத்துவதில் கடுமையான இடர்களை எதிர்கொண்டுவந்தனர். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பம் அந்த சவால்களை இலகுவாக கையாளவல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் நில அதிர்வால் மக்கள் பீதி ;ஈக்வடார் நிலநடுக்கம்.

ஈக்வடார் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350ஆக உயர்ந்துள்ளது. ஈக்வடாரின் க்விட்டோ நகரில் இருந்து 173 கிலோமீட்டர் தொலைவில் வடமேற்கே உள்ள இடத்தை மையமாகக் கொண்டு 10 கிலோமீட்டர் ஆழத்தில் சனிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியிருந்தது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ஈக்வடாரில் சனிக்கிழமை இரவு 11.58 மணிக்கு இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. முதல் நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆகவும், இரண்டாவது நடுக்கம் 7.8 ஆகவும் பதிவாகியிருந்தது. நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தில் இருந்து 300 கிலோமீட்டருக்குள் உள்ள பகுதியில் பயங்கர சுனாமி ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இந்நிலையில் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 350 ஆக அதிகரித்துள்ளது. 2 ஆயிரத்து ஐநூறுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். நிலநடுக்கம் காரணமாக இத்தாலியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஈக்வடார் அதிபர் ... Read more

பாகிஸ்தானில் நிலநடுக்கம், இந்தியாவிலும் அதிர்ச்சி

ரிக்டர் அளவில் 6.8 அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான்-தஜிகிஸ்தான் எல்லையை தாக்கியது. இதுவரை இரண்டு பேர் பலியானார்கள், 4 பேர் காயமடைந்தனர். ஐரோப்பிய மத்திய தரைக்கடல் முழுதும் தாக்கம் நிலவியது. பாக்கிஸ்தான் இல், இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் நான்கு பேர் காயமுற்றனர். இந்தியாவிலும் இது லேசாக உணரப்பட்டது. தில்லி மெட்ரோ ரயில் சேவை ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிர்ச்சிக்குப் பின் ஒரு சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. ஹிந்துகுஷில் பகுதியில், பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில், பூகம்பங்கள் அடிக்கடி உணரப்படுகிறது. அக்டோபர் 26, 2015 அன்று வந்த நிலநடுக்கம் 300 பேரை பலி கொண்டது. பத்தாண்டுகளுக்கு முன்னர், வடக்கு பாக்கிஸ்தானின் மற்றொரு பகுதியில் 7.6-ரிக்டர் அளவில் நிலநடுக்கம் 75,000 பேரை கொன்றது.

ஐஸ்லாந்து பிரதமரை காலி பண்ணிய பனாமா ஆவணங்கள்

பல மில்லியன் டாலர் பணத்தை வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதாகக் கூறும் ஆவணங்கள் வெளியானதையடுத்து ஐஸ்லாந்து நாட்டின் பிரதமர் சிக்முந்தூர் குன்க்ளோஸன் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். பனாமா நாட்டைச் சேர்ந்த சட்ட நிறுவனமான மொஸாக் ஃபொன்ஸெகவிலிருந்து கோடிக்கணக்கான ஆவணங்கள் சமீபத்தில் வெளியாகின. இந்த ஆவணங்களின்படி, வின்ட்ரின் என்ற நிறுவனத்தின் உரிமையாளர்களாக ஐஸ்லாந்து நாட்டின் பிரதமரும் அவரது மனைவியும் இருப்பது தெரியவந்தது. பல கோடி டாலர் பணத்தை அவர் பதுக்கியிருந்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து திங்கட்கிழமையன்று ஐஸ்லாந்து நாட்டின் நாடாளுமன்றத்தின் முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்நாட்டின் புதிய பிரதமராக விவசாயத் துறை அமைச்சர் பதவியேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, அந்நாட்டு குடியரசுத் தலைவரைச் சந்தித்த குன்க்ளோஸன், நாடாளுமன்றத்தைக் கலைக்கும்படி பரிந்துரைத்தார். ஆனால், அதற்கு குடியரசுத் தலைவர் மறுத்துவிட்டார். நம்ம ஊர் பிரபலங்கள் பெயர்களும் இதில் இருக்கு, ஆனா இங்கே இதுவரை எந்த பாதிப்பும் இல்லை.

பிரிட்டனின் அரண்மனைகள் மேம்படுத்தப்படுகின்றன

பிரிட்டிஷ் மகாராணியின் அதிகாரபூர்வ இல்லங்களான விண்ட்ஸர் கேசில், ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனைகளில் சுற்றுலாப் பயணிகள் பார்க்கக்கூடிய இடங்கள் சுமார் 370 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படவிருக்கின்றன. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக விண்ட்ஸர் கேசிலில் புதிதாக ஒரு சிறிய உணவகம் ஒன்று கட்டப்படவிருக்கிறது. எடின்பரோவில் உள்ள ஹோலிரூட் ஹவுசைச் சுற்றியுள்ள பகுதிகளும் மேம்படுத்தப்படவிருக்கின்றன. பிரிட்டின் மகாராணியின் அதிகாரபூர்வ இல்லங்களான இந்த இரண்டு அரண்மனைகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை அளிக்கும்பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விண்ட்ஸர் கேசில் அரண்மனையில் நுழைவுவாயிலை அடுத்து இருக்கும் அறை முன்பிருந்த வகையிலேயே மாற்றப்படும். தரைத்தளத்தில் இருக்கும் அரச குடும்பத்தினர் வசிக்கும் பகுதிகளைக் கூடுதலாக சுற்றுலாப் பயணிகள் பார்க்க முடியும். 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட விண்ட்ஸர் கேசில் அரண்மனையில், சில வருடங்களுக்கு முன்பாக பரீட்சார்த்த முறையில் சிறிய உணகவம் ஒன்று அமைக்கப்பட்டது. தற்போது, அந்த உணவகம், அதன் கீழ் தளத்தில் இந்த உணவகம் அமைக்கப்படும். முந்தைய காலகட்டங்களில் ... Read more

விடாது தொடரும் பில் கேட்ஸ் : உலகின் நெ.1 பணக்காரர்

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை ஆண்டு தோறும் உலக அளவில் மிகப்பெரும் பணக்காரர்கள் யார் என்பதை வெளியிடும். இந்த ஆண்டும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் $ 75 பில்லியன் சொத்து மதிப்புடன், உலகின் பெரும் பணக்காரராக தொடர்கிறார். [post_ad]  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 2016 இல் இந்திய அளவில் முதலிடம் வகிக்கிறார். மொத்தம் 84 இந்தியர்கள் இந்த பட்டியலில் இடம் பிடித்து உள்ளனர். யாரெல்லாம் இந்த வரிசையில் இடம் பிடிப்பர்? அமெரிக்க டாலர் மதிப்பில் குறைந்தபட்சம் ஒரு பில்லியன் ( நம்மூர் கணக்குப்படி சுமார் 6700 கோடி ரூபாய்) வைத்திருப்போர் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிடும்.  ஃபோர்ப்ஸ் ‘2016 பட்டியலில் உலகின் பில்லியனர்கள் எண்ணிக்கை சென்ற ஆண்டின் 1,826 இல் இருந்து இப்போது 1810 ஆக குறைந்து விட்டது. கேட்ஸ் ஒரு வருடம் முன்பு இருந்ததை விட 4.2 பில்லியன் டாலர்  ஏழை ஆன போதிலும் $ 75 ... Read more

பின் லேடன் மரணம் : அமெரிக்கா கொண்டாட்டம்

அமெரிக்காவிற்கு இருந்த ஒரே அச்சுறுத்தல் ஆன பின்லேடன் அந்நாட்டு ராணுவத்தால் பாகிஸ்தானில் வைத்து கொல்லப்பட்டார். இனி என்ன வழக்கம்போல அவர் நல்லவரா? கெட்டவரா? விவாதம் தயாராகி ஒரு வாரத்திற்கு மீடியாவிற்கு தீனி கிடைக்கும். அல்குவைதா பயங்கரவாத கும்பல் தலைவன் ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் அமெரிக்க படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அமெரிக்க அரசு தொலைக்காட்சியில் தோன்றி பேசிய ஒபாமா : ஒசாமா பின் லேடன் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நடந்த இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பிறகு தீவிரமாக தேடப்பட்டு வந்தததாகவும், அமெரிக்காவின் நீண்ட கால திட்டம் தற்போது நிறை‌வேறியுள்ளதாகவும் மகிழ்ச்சி பொங்க கூறினார். இந்த நாள் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். நீதி நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்றார். சுற்றிவளைப்பு :   ஒசாமா பாகிஸ்தானில் பதுங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த வாரம் அமெரிக்க படைகள் ஒசாமா இருப்பிடத்தை நெருங்கியது. ... Read more

ஃபுகுஷிமாவில் கதிர்வீச்சு அதிகரிப்பு

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானின் ஃபுகுஷிமா அணு ஆலையின் நிலை தொடர்பாக புதிய கவலைகள் தோன்றியுள்ளன. இந்த ஆலையில் இருக்கின்ற ஒரு உலை அருகே சோதனை செய்யப்பட்ட கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட நீரில் சாதாரணமாக இருப்பதை விட கிட்டதட்ட ஒரு கோடி மடங்கு அதிகளவு கதிர்வீச்சு காணப்பட்டுள்ளது. இரண்டாவது அணு உலையில் இருந்தே இந்த கதிர்வீச்சு கொண்ட நீர் கசிவதாக ஜப்பானின் தேசிய அணு பாதுகாப்பு அமைப்பு கூறுகின்றது. ஆனால் இப்போது இந்த எண்ணிக்கை தவறாக கணக்கிடப்பட்டு விட்டதாக இந்த ஆலையை நடத்தும் நிறுவனம் கூறியுள்ளது. அணு உலையை ஸ்திரப்படுத்துவதற்காக மின்சார வசதியை ஏற்படுத்த கடுமையாக போராடி வரும் பணியாளர்களுக்கு அடிக்கடி உலையில் காணப்படும் ஆபத்தான சமிஞ்சைகள் பெரும் சவாலாகவும், இடையூறாகவும் இருக்கின்றன. இதே நேரத்தில் ஃபுகுஷிமா அணு ஆலை இருக்கின்ற கடல் பகுதியிலும் கதிர்வீச்சின் வீரியம் அதிகரித்துள்ளது. ஆனால் கடலின் நீரோட்டம் இந்த கதிர்வீச்சின் தாக்கத்தை நீர்த்து போக செய்து விடும் என ... Read more