ஜிம்பாப்வே ஆதிக்கம் தொடருமா..?

0
17

3 நாடுகள் கிரிக்கெட் போட்டி ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடந்த கடைசி “லீக்” ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

3 நாடுகள் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று (9-ந்தேதி) நடக்கிறது. இதில் இலங்கை- ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டித் தொடரில் ஜிம்பாப்வே அணி மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. அந்த அணி “லீக்” ஆட்டத்தில் இந்தியாவை 2 முறையும், இலங்கையை ஒரு முறையும் தோற்கடித்தது. இதனால் கோப்பையை வெல்வதற்கான முனைப்பில் ஜிம்பாப்வே அணி விளையாடும்.

இலங்கை அணி 4 ஆட்டத்தில் இரண்டில் வெற்றி பெற்றது. 2 போட்டியில் தோற்றது. ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாளைய இறுதிப் போட்டியில் இலங்கை அணி விளையாடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

ரெய்னா தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வேயிடம் 2 முறை தோற்றது இலங்கையிடம் ஒரு முறை வென்று மற்றொரு முறை தோற்று இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்து
முந்தைய செய்திஉலக நினைவுச் சின்னங்கள் பதிவேட்டில் தமிழ் மருத்துவ ஓலைச் சுவடிகள்
அடுத்த செய்திதமிழ்ச் செம்மொழி மாநாடு
வலை எழுத்தில் கொண்ட பற்றால், முழு நேர வங்கிப் பணியை மூட்டை கட்டியவன்.