எந்திரன் – முதல் தகவல் அறிக்கை

0
59

எந்திரன் – முதல் தகவல் அறிக்கை

(முழு பதிவு விரைவில்…)

ஒரு அதீத பயத்துடன் அரங்கில் நுழைந்தேன்..

ஏனெனில் சமீபத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்த சில படங்கள் படுத்து விட்டதால் தான்

( ராவணன் , கந்தசாமி , தலதளபதி  படங்கள்)

காத்திருந்தன் பலன் வீண் போகவில்லை ஒரு Mega mass hit ready…

முதல் நாள் முதல் காட்சி அதுவும் ரஜினி படத்திற்கு பார்த்தாகி விட்டது.

180 கோடி படத்தை 180 வார்த்தைகளில் விமர்சிக்க மனம் வரவில்லை. எனினும் என் மனதிற் பட்டதை கிறுக்கி விட வேண்டும் போல் இருந்த்தால் பதிக்கிறேன்..

எந்த ரஜினி படத்திலும் இல்லாத அமைதியான அறிமுகமே படு அமர்க்களம் பின் பாதியில் தான் என அறிவிக்கிறது.

கதை முழுக்க ரஜினி மற்றும் ஐஷ்வர்யாவே தெரிந்தாலும் ரசிக்க வைத்து இருப்பது ஷங்கரின் கேமிராவண்ணம்.

உணர்ச்சிகள் இல்லாத ரோபோ மனதை ஈர்த்த அளவிற்கு உணர்வுள்ள ரோபோ இல்லை.

படத்தில் என்னை கவர்ந்தது

ரஜினியின் ஸ்டைலோ

ஷங்கரின் பிரமாண்டமோ

ஐஷ்வர்யாவின் அழகோ இல்லை.

நம்மை விட்டு மறைந்த சுஜாதாவின் வசனங்கள்..

உ.ம்.

போலீஸ் கான்ஸ்டப்ள் காட்சி,

துரோகம்-தியாகம் explanation,

upgraded version 2.0,

சிட்டியின் முதல் பாதி வசனங்கள்

( I hope the technical terms handled in Endhiran have been brought out by him only cause he is a Powerhouse in General Science knowledge)

ஆனாலும் பல இடங்களில் சுஜாதாவிற்கு பதில் ஷங்கரின் எழுத்துக்கள் நலிவு தான்.

ரஹ்மானின் இசை பாடல்கள் அளவிற்கு நிச்சயமாய் பிண்ணனியில் இல்லை.

கடைசி அரை மணி நேரம் Overdose of Graphical Climax..

கதை:

திரைக்கதையை சொல்லப்போனால் தனக்கு சொல்லப்படும், ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ள வேலைகளை பிரமாதமாக செய்து முடிக்கும் ரோபோ.. இதற்கு உணர்வுகள் ப்ரோக்ராம் செய்யப்படவில்லை.. சுயமாக சிந்திக்காது.. இந்த ரோபோவை அங்கீகாரப்படுத்துவதற்காக ரோபோ அங்கீகாரம் வழங்கும் அமைப்பிடம் தன் ரோபோவை அறிமுகப்படுத்துகிறார் வசீகரன் என்கிற ரஜினி. அங்கீகாரம் வழங்கும் சபையில் முக்கிய உறுப்பினராகவும் நாச வேலைகளுக்காக ரோபோக்களை உருவாக்கும் விஞ்ஞானியாகவும் வில்லன் பாத்திரமாக டானி தேங்க்சாங்ப. இவர் ரோபோ சிட்டிக்கு உணர்ச்சிகள் இல்லை ஆகவே தவறாக பயன்படுத்திவிடலாம் எனவே அங்கீகாரம் வழங்க முடியாது… என தட்டிக்கழிக்கிறார். இதனால் வசீகரன் தனது படைப்புக்கு உணர்வுகளை ப்ரோக்ராம் செய்கிறார்.. முழுமையாக மனிதனாக அவதாரம் எடுக்கும் ரோபோ சிட்டி மனித உணர்வுகள், காதல் என ஆசைகளுக்குள் அகப்பட்டு எப்படி வில்லன் வேடமேடுக்கிரான் என்ன என்ன வித்தைகள் காட்டுகிறான்.. அவன் பிடியில் இருந்து நாட்டை எப்படி வசீ என்கிற ரஜினி காப்பாதுறார் என்பதை ஹாலிவூட் ஸ்டைலில் கிராபிக்ஸ்கள் தொழில் நுட்பங்கள் பறக்க சொல்லியிருக்கிறது திரைக்கதை…

படத்தில் பாராட்டப்படவேண்டிய ரசிக்கப்படவேண்டிய ஆச்சரியப்பட வேண்டிய விடயங்கள் ஏராளம்..
*** திரைப்பட கரு சிறிதாக இருந்தாலும்.. திரைக்கதையில் வர்ணமேற்றி தொழில் நுட்பங்களை கையாண்டு விஞ்ஞானம் பிழையாது காரணங்களோடு சொல்லியிருக்கும் அற்புதமான கற்பனை.. அதற்கு முதல் சலுயூட் சங்கர் மற்றும் சுஜாதாக்கு..

***ரோபோவாக வாழ்ந்து விஞ்ஞானியாக உழைத்திருக்கும் சூப்பர்ஸ்டாருக்கு பெரிய சலுயூட். நகைச்சுவையில் கலக்கியிருக்கும் சிட்டி ரோபோக்கு இன்னொரு பெரிய சல்யூட். அதுவும் அப்பாவியா விஞ்ஞானி ரஜினிய சிட்டி போய் கேக்கும் “மனுஷங்களுக்கு இருக்குற ஒண்டு எனக்கு இல்லையாமே? அது என்ன?” முடியல அந்த இடத்துல.

***பாடல்களை அற்புதமாக படமாக்கி, திரைக்கதையின் ஓட்டத்துக்கேற்ப வெவ்வேறு லைற்றிங், கோணங்களில் நம்ம ஊரு திரைப்படம் பிளஸ் ஹாலிவூட் பாணியில் காட்சிகளை பதிவு செய்திருக்கும் ஒளிப்பதிவாளர் ஆர்.ரத்னவேலுக்கு அடுத்த சலுயூட். கிளிமஞ்சாரோ பாடல் காட்சி மற்றும் நடனம் எத்தன தடவ வேணும்னாலும் பார்க்கலாம்.

***கிராபிக்ஸில் பின்னி பிசிரெடுத்திருக்கும் கிராபிக்ஸ் கலைஞர்கள் மற்றும் கிராபிக்ஸில் சண்டைக்காட்சிகளை டைரக்ட் செய்த ஷங்கர். இவர்களுக்கு அடுத்த சலுயூட்..

***அடுத்து இப்படியான திரைப்படங்களில் முக்கிய பங்கு வகிப்பது இரண்டு விடயம். அரங்க அமைப்பு மற்றும் எடிட்டிங் . அதை வழமை போலவே பக்காவா நடத்தி ஆய்வுக்கூடங்கள் ரோபோக்கள், அப்படியே மனதில் பதிய செய்திருப்பார்கள் கலை இயக்குனர் சாபு சிரில் மற்றும் எடிட்டர் அன்டணி. இவர்களுக்கு அடுத்த சல்யூட்.

***அடுத்து படத்தில் நன்றாக அமையப்பெர்ரிருப்பது பின்னணி இசை அதில் ஆஸ்கார் நாயகன் கலக்கி இருப்பார். அத்தோடு பாடல்களுக்காக ரஹ்மான் மற்றும் வைரமுத்துக்கு பலமுறை சல்யூட் அடிச்சாச்சு..

***எல்லாத்தையும் விட பெரிய பெரிய சல்யூட் ஸ்டன்ட் கலைஞர்கள், நடன இயக்குனர்கள் மற்றும் முக்கியமாக மேக்கப் கலைஞர்கள்.

படத்துல நல்லவிசயங்களா சொன்னா ஏமாந்ததுகளையும் சொல்லத்தானே வேணும்..
***வழமையான ரஜினியின் ஸ்டைல் எண்டது மிஸ் ஆச்சு.. ரஜினி ரசிகர்களுக்கு இது ஏமாற்றம்.

*** சந்தானம் மற்றும் கருணாஸ் வீணாக்கப்பட்டிருக்கிரார்கள்.

***லாஜிக்க்கலா அங்க அங்க சின்ன பிசிரல்கள் . இருந்தாலும் கற்பனைக்கதை எண்டதால ரசிக்கலாம்.

***பிற்பாதியில் வரும் சிட்டி ரோபோக்கு கொடுக்கப்பட்ட தோற்றம் , மேக்கப் ஒவ்வாமையா இருந்துச்சு.. அதே போல் அரிமா அரிமா பாடல் கிராபிக்ஸ்ல நூற்றுக்கும் மேற்பட்ட ரஜனி நடனமாடுவதா இருந்துச்சு. அதில் ஆடைவடிவமைப்பு , நடனம் பாடலின் மெருகை கொஞ்சம் குறைத்தேவிட்டது..

***எல்லாத்தையும் விட பெரிய ஏமாற்றம் எகிறிப்போன டிக்கெட் விலைகள்.

மொத்தத்தில் இந்த எந்திரன் மனிதனாக வாழ்ந்து தான் அழாமல் எம்மை அழவும் சிரிக்காமல் எம்மை சிரிக்கவும் வைத்துள்ளான். பொக்கிசங்களில் சேர்க்கலாம்.

எந்திரன் எம் Marks

1st half  74/100

2nd half  48/100

Dialogues 90/100 (Sujatha)

35/100 (Shankar & Karkki )

Music       80/100 (Songs)

57/100 (BGM)

Camera    80/100

Comedy    70/100 ( All credits to Chitti not for Santhanam or Karunas)

overall

******* Endhiran  71/100 *******

பகிர்ந்து
முந்தைய செய்திஉலகத் தமிழச் செம்மொழி மாநாடு
அடுத்த செய்திநானும் நகரமும்
வலை எழுத்தில் கொண்ட பற்றால், முழு நேர வங்கிப் பணியை மூட்டை கட்டியவன்.

உங்கள் கருத்தை தெரிவிக்க