விடாது தொடரும் பில் கேட்ஸ் : உலகின் நெ.1 பணக்காரர்

1
147
ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை ஆண்டு தோறும் உலக அளவில் மிகப்பெரும் பணக்காரர்கள் யார் என்பதை வெளியிடும். இந்த ஆண்டும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் $ 75 பில்லியன் சொத்து மதிப்புடன், உலகின் பெரும் பணக்காரராக தொடர்கிறார்.
[post_ad]

 ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 2016 இல் இந்திய அளவில் முதலிடம் வகிக்கிறார். மொத்தம் 84 இந்தியர்கள் இந்த பட்டியலில் இடம் பிடித்து உள்ளனர்.

யாரெல்லாம் இந்த வரிசையில் இடம் பிடிப்பர்?

அமெரிக்க டாலர் மதிப்பில் குறைந்தபட்சம் ஒரு பில்லியன் ( நம்மூர் கணக்குப்படி சுமார் 6700 கோடி ரூபாய்) வைத்திருப்போர் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிடும்.

 ஃபோர்ப்ஸ் ‘2016 பட்டியலில் உலகின் பில்லியனர்கள் எண்ணிக்கை சென்ற ஆண்டின் 1,826 இல் இருந்து இப்போது 1810 ஆக குறைந்து விட்டது.

கேட்ஸ் ஒரு வருடம் முன்பு இருந்ததை விட 4.2 பில்லியன் டாலர்  ஏழை ஆன போதிலும் $ 75 பில்லியன் நிகர மதிப்புடன் உலகின் மிகப்பெரிய பணக்காரராக உள்ளார். அவர் இந்த வரிசையில் 3 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வருகிறார். 22 ஆண்டுகளாக வெளிவரும் பட்டியலில் 17 முறை  முதலிடம் பிடித்துள்ளார்.

அம்பானி $ 20.6 பில்லியன் நிகர மதிப்புடன் 36 வது இடத்தில் உள்ளார். 

பட்டியலில் இரண்டாவது இடத்தில்  ஸ்பெயினின் பில்லியனர் அமானிகோ ஒர்டேகாவும், மூன்றாவது இடத்திலே பெர்க்ஷையர் ஹாத்வே தலைமை நிர்வாக அதிகாரி வாரன் பஃபெட் இருக்கிறார்.

பட்டியலில் உள்ள பணக்கார இந்தியர்கள்

எச்.சி.எல் இணை நிறுவனர் ஷிவ் நாடார்
பார்மா அதிபர் திலீப் சங்வி
விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜி
லட்சுமி மிட்டல்
பாரதி ஏர்டெல் – சுனில் மிட்டல்
துறைமுகங்கள் மற்றும் சக்தி அதிபர்கள் கவுதம் அதானி ,  சாவித்ரி ஜிண்டால்
பஜாஜ் குழுமத்தின் ராகுல் பஜாஜ்
இன்போசிஸ் – என்.ஆர் நாராயண மூர்த்தி
மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா 

பகிர்ந்து
முந்தைய செய்திஒரு நாள் ஒரு கோப்புறை – கல்கி கிருஷ்ணமூர்த்தி
அடுத்த செய்திஎன்ன எல்லா நகை கடையையும் மூடிட்டாங்களா?
வலை எழுத்தில் கொண்ட பற்றால், முழு நேர வங்கிப் பணியை மூட்டை கட்டியவன்.

1 கருத்து

உங்கள் கருத்தை தெரிவிக்க