உடலை குளுமையாக வைத்துக்கொள்ள

0
215

அதிகமாக தண்ணீர் குடியுங்கள் உடல் அதிகமான உஷ்ணத்தை பெறும் நேரத்தில், நன்றாக தண்ணீர் அருந்த வேண்டும். அதனால் வெளியேறும் வியர்வை உள்ளே செல்லும் தண்ணீர் என இணைந்து, நமது உடலின் உஷ்ண நிலையை சீராக வைத்துக்கொள்ள  மிகவும் உதவுகிறது. கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்ளும் நண்பர்கள் மிகவும் முக்கியமாக 2 முதல் 4  டம்ளர்கள் மிதமான குளிர்ந்த நீரை ஒரு மணிக்கு ஒரு தடவையாவது குடித்துக்கொண்டே இருப்பது அவசியம்.

தர்பூசணி

கோடை பழமாக கருதப்படும் தர்பூசணி பழம் புத்துணர்ச்சியை மட்டும் தரக்கூடிய பழம் அல்ல. வெயில் காலத்தில், உடலுக்கு தேவையான குளிர்ச்சியை தரக்கூடிய சிறந்த பழமாக இது கருதப்படுகிறது. தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் உடலின் வெப்பத்தையும் ரத்த அழுத்தத்தையும் சரி செய்து கொள்ள முடியும். கட்டி, ஆஸ்துமா, பெருந்தமனி வீக்கம், நீரிழிவு, பெருங்குடல் புற்று நோய் மற்றும் கீல் வாதம் போன்றவற்றை தர்பூசணி மூலம் குணப்படுத்த முடியும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை வட்டமாகத் துண்டுகள் செய்து, கண் மேலே வைத்துச் சிறிது நேரம்  படுத்தால் கண்களுக்குக் குளிர்ச்சி கிடைக்கும். கண்களுக்கு அடியிலுள்ள கரு வளையமும் நீங்கும்.

 

வெண்டைக்காய்

உடலின் நீர்ச்சத்தை நிலைநிறுத்தி வைக்கும் பலகாய்கள் ருசியாக இல்லாததால் அவற்றை தவிர்த்துவிடுகிறோம். ஆனால், நீர்ச்சத்து நிரம்பிய காய்களில் நார்ச்சத்தும் அதிகம் காணப்படுவது அறிவியல் பூர்வமான உண்மை.
இதனால் இருவிதமான பலன்கள் கிடைக்கின்றன. முதலாவதாக உடலின் திரவ சமநிலை நிலைப்படுத்தப் படுவதுடன் நார்ச்சத்துள்ள உணவுகளினால், குடல் மற்றும் மலவாய்ப் பகுதிகள் சுத்தமடைகின்றன. மலச்சிக்கல் மற்றும் மலக்கட்டு நீங்குகின்றன. நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த, ருசியான காய்களில் முதலிடத்தை வகிப்பது வெண்டைக்காய். வெண்டைக்காயில் அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து உடலை குளுமையாக வைக்கிறது. அவற்றிலுள்ள நார்ச்சத்து இறுகலான மலத்தை இளக்கி மலம் கழித்தலை எளிதாக்குகிறது.

பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தும் தன்மை, பிஞ்சு வெண்டைக்காய்க்கு உண்டுஎன நிரூபிக்கப்பட்டுள்ளது. முற்றிய வெண்டைக்காயை அதிகம் உட் கொண்டால் மலம் மிகவும் இளக்கமாகி, கழிச்சல் உண்டாகும். ஆகவே நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் வெண்டைக்காயில் முற்றாத பிஞ்சுக்காயே சமையலுக்கும் மருந்துக்கும் உகந்ததாகும். பிஞ்சு வெண்டைக் காயை நன்கு கழுவி, நுனி மற்றும் காம்பை நீக்கி, சிறு சிறு துண்டுகளாக வெட்டி, நாட்டுச்சர்க்கரை 2 பங்கு சேர்த்து, பிசைந்து ஒரு மணி நேரம் வைத்திருந்து தினமும் 6 முறை சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சியடையும்.

ஆரஞ்சு பழம்

ஆரஞ்சு பழத்திற்கு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும் சக்தி உள்ளது. எனவே தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தையோ அல்லது ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸோ குடித்து வந்தால், இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் மற்றும் உடலை குளுமையாக வைத்துக்கொள்ளும்.

இளநீர்

இயற்கை தந்துள்ள வரப்பிரசாதமான இளநீர், ஒரு முழுமையான சத்துள்ள நீராகும். தேங்காய் என்பது பழமெனவும் கருதப்படுகிறது. பழங்களில் நடுவே உள்ள ‘எண்டோஸ்பெர்ம்’ என்ற பகுதியே, பழம் பெரிதாகி சதைப் பற்றுடன் உருவாகக் காரணம். இந்த ‘எண்டோஸ் பெர்ம்’ தேங்காயில் திரவ வடிவில் உள்ளது.உடல் உஷ்ணத்தை பெரிதளவில் தணிக்கும் இளநீர், ஜீரண உறுப்புகள் சரியாக இயங்கத் தேவையான சூட்டை மட்டும் உடலில் தங்க வைக்கிறது. இதனால் கோடைக்காலத்தில் உடல் சூடு அதிகமாவதால் ஏற்படும் வயிற்றுக் கோளாறுகளை இளநீர் பருகுவதால் தடுக்கலாம்.
வளரும் குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் இளநீர் சிறந்த டானிக். இது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. வயதானவர்களுக்கு ஏற்படும் சோர்வை இளநீரில் உள்ள இனிப்புத் தன்மை நீக்குகிறது.

மோர்

தண்ணீர் கலந்த மோரில் ஒரு இரண்டு வெள்ளரிப்பிஞ்சு, கருவேப்பில்லை, கொத்தமல்லி இதேல்லாம் கலந்தும் குடிக்கலாம். இவ்வாறு குடிக்கும் போமு மோரின் சுவை இன்னும் அதிகரிக்கும்,உடலை குளிர்ச்சியடையச்செய்யும்.                                                    மோர் குடித்தால் உடனே பசி எடுக்கும். வெயிலால் உடம்பு சூடாகி சிறுநீர் பாதையில் எரிச்சல் உண்டானால் அதற்கும் மருந்து இதுதான். ரத்தசோகைக்கும் மோர் நல்லது! நம்மை அறியாமல் சாப்பிடும் மோசமான உணவுப் பொருட்கள் மூலம் உடலில் சேரும் விஷத்தை அகற்றும் வல்லமைகூட மோருக்கு உண்டு!.
ஆனால், சளி தொந்தரவு, தொண்டை எரிச்சல், இருமல் போன்ற உபாதைகள் இருக்கும்போது மோர் சாப்பிடக்கூடாது. மோர் சாதமும் கூடாது!
சரும‌த்‌தி‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட பகு‌தியை மோ‌ரி‌ல் நனை‌த்த து‌ணியை‌க் க‌ட்டு‌ப் போ‌ட்டு வருவத‌ன் மூல‌ம் சரும பா‌தி‌ப்பு ‌விரை‌வி‌ல் குணமடைவதை‌க் காணலா‌ம்.

உங்கள் கருத்தை தெரிவிக்க