பாமக இந்த தேர்தலில் சின்னய்யா அன்புமணி அவர்களை முதல்வர் வேட்பாளராக்கி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி இடுவது அனைவரும் அறிந்ததே.
வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு சனிக்கிழமை அன்று அதன் மீதான மீளாய்வும் முடிந்து உள்ளது. 9ஆம் வகுப்பு வரை படித்த வசந்த் என்னும் இளைஞர் சட்டமன்ற உறுப்பினர் ஆகி மக்கள் சேவை புரிய விழைந்துள்ளார். பாமகவும் அவரை திருச்சி துறையூர் தொகுதியை ஒதுக்கியது.
மீளாய்வில் இவர் 23 வயது நிரம்பியவர் என தெரியவர குறைந்தபட்ச வயது பூர்த்தி ஆகாததால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதில் என்ன கொடுமை என்றால் இவருக்கு டம்மி ஆக பாமக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தவர் வயது 22, ஆகா அவர் மனுவும் தள்ளுபடி ஆகி விட்டது.
25 வயது நிரம்பினால் தான் சட்டமன்ற தேர்தலில் நிற்க முடியும் என்பது வேட்பாளருக்கும் தெரியவில்லை, கட்சியும் கவனிக்கவில்லை. விளைவு பாமக இப்போது 233 தொகுதிகளில் போட்டியிட போகிறதா அல்லது அத்தொகுதியில் உள்ள சுயேச்சை வேட்பாளர் யாரையாவது தன பக்கம் ஈர்த்து 234 தொகுதிகளிலும் போட்டியிட போகிறதா ? பொறுத்திருந்து பார்ப்போம்.