விளையாட்டு

தோனி அவ்வளவுதானா.. தொடர் தோல்வியில் ஐபிஎல் 2016

ஐபிஎல் டி20 தொடரில் நேற்று விசாகபட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி 4 ரன் வித்தியாசத்தில் புனவை வீழ்த்தி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது.தவான் அதிகபட்சமாக 27 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த யுவராஜ் சிங் 21 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 23 ரன்கள் எடுத்து ஸம்பா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஸம்பாவின் அடுத்த ஓவரில் வில்லியம்ஸன் வீழ்ந்தார். அவர் 37 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்திருந்தார். மற்ற வீரர்கள் ரன் எடுக்க தவறினர். இதனால் ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. புனே அணி சார்பில் அசத்தலாக பந்து வீசிய ஆடம் ஸம்பா 19 ரன்களை மட்டுமே விட்டுக் ... Read more

நட்சத்திர கிரிக்கெட் பார்க்க வந்த கூட்டம் குறைவுதான் ,ஆனாலும்

நடிகர் சங்க கட்டடம் கட்ட நட்சத்திர கிரிக்கெட் நடத்தப் போகிறோம் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்தே, அந்த நிகழ்ச்சிக்கு எதிராக சிலர் வரிந்து கட்டிக் கொண்டு வேலைப் பார்க்க ஆரம்பித்துவிட்டன. சமூக வலைத் தளங்களில் நட்சத்திரக் கிரிக்கெட்டைப் புறக்கணிப்போம் என வெகுஜனங்களே வேண்டுகோள் வைக்கும் நிலை. போதாக்குறைக்கு அஜீத்தின் புறக்கணிப்பு செய்தி மீடியாவில் அதிக முக்கியத்துவம் பெற்றது இதன் விளைவை மைதானத்தில் பார்க்க முடிந்தது. காலையில் மேட்ச் ஆரம்பித்தபோது, கேலரிப் பக்கம் தலைகளே இல்லை. பெரும்பாலும் டோனர் பாஸ் எனப்படும் ‘ஓசி’ டிக்கெட்டில் பார்க்க வந்தவர்கள்தான் அதிகம். இவர்களைத் தவிர, மீதி நட்சத்திரங்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள். நாட்டுப் புறக் கலைஞர்களும் கணிசமாக வரவழைக்கப்பட்டிருந்தனர். பிற்பகல் வரைதான் இந்த நிலை. மாலை நெருங்க நெருங்க, ஓரளவு பார்வையாளர்கள் திரண்டுவிட்டனர். இறுதிப் போட்டியில் சூர்யாவின் அணியும் ஜீவாவின் அணியும் விளையாடியபோது, கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் அரங்கிலிருந்ததாக நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது கூட்டம் குறைவாக ... Read more

நட்சத்திர கிரிக்கெட் எதிர்த்து முற்றுகை

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் மைதானத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட நிதி திரட்டும் வகையில் தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று காலை துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. 8 அணிகள், அணிக்கு 6 வீரர்கள் என விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். திரையுலக நட்சத்திரங்கள் அனைவரும் ஒன்று கூடி விளையாடும்போதிலும் அதை காண மக்கள் கூட்டத்தை ஸ்டேடியத்தில் காண முடியவில்லை. நடிகர் சங்க கட்டிடம் கட்ட நடிகர்களிடம் பணமா இல்லை, நாங்கள் எதற்காக கொடுக்க வேண்டும் என மக்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்துள்ளனர். இந்நிலையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டியை கண்டித்து தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் 50 பேர் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். சமூக வலைதளங்களிலும் பலர் ... Read more

தோனியை ஜெயிப்பாரா ரெய்னா?

நடப்பு 9-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில், மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ என்ற இறுதிப்போட்டிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும். இந்த நிலையில் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று (வியாழக்கிழமை) அரங்கேறும் 6-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணியும் மல்லுகட்டுகின்றன. 2008-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை தொடர்ந்து 8 ஆண்டுகளாக வீறுநடை போட்ட டோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அசைக்க முடியாத வீரராக சுரேஷ் ரெய்னா திகழ்ந்தார். சென்னை அணியின் ஒரு ஆட்டத்தை கூட ரெய்னா தவறவிட்டது கிடையாது. இதே போல் எல்லா சீசனிலும் சென்னை அணியை அடுத்த சுற்றுக்கு ... Read more

மும்பை முதல் வெற்றி

9-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற 5 வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணிகளும் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன் படி முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்களை சேர்த்தது. கொல்கத்தா அணியில் கேப்டன் கவுதம் கம்பீர் அதிகபட்சமாக 52 பந்துகளில் 64 ரன்களை சேர்த்தார். இதையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  மும்பை இந்தியன்ஸ் அணி பேட் செய்தது. மும்பை அணிக்கு ரோகித் சர்மாவும், பார்த்தீவ் பட்டேலும் சிறப்பான தொடக்கம் தந்தனர். 4.5 ஓவர்களில் அந்த அணி 50 ரன்களை எட்டியது. 5.5 ஓவர்களில் 53 ரன்கள் எடுத்திருந்த போது பார்த்தீ பட்டேல் ரன் ... Read more

ஐபிஎல் – முதல் போட்டியில் புனே வெற்றி

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் 9வது சீசன் போட்டிகள் இன்று தொடங்கின. இரவு 8 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில், டோணி தலைமையிலான புனே மற்றும் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை அணிகள் மோதின. இதில் மும்பையை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புனே வெற்றி பெற்றது. 2008ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது ஐபிஎல். ரசிகர்கள் வரவேற்பை தொடர்ந்து இதுவரை 8 போட்டித் தொடர்களை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் (2010 மற்றும் 2011), கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (2012 மற்றும் 2014), மும்பை இந்தியன்ஸ் (2013 மற்றும் 2015) ஆகிய அணிகள் தலா 2 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் (2008), டெக்கான் சார்ஜர்ஸ் (2009), அணிகள் தலா 1 தடவையும் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளன. இந்நிலையில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் டாசில் வென்ற மும்பை அணி முதலில் பேட் செய்தது. அந்த அணிக்கு ... Read more

ஹர்ஷா போக்லே – கல்தா கொடுத்த பிசிசிஐ

ஹர்ஷா போக்லே இந்த பெயரை கிரிக்கெட் தெரிஞ்ச 90% பேருக்கு தெரியும். மிக நீண்ட காலமாக கிரிக்கெட் வர்ணனையில் இருக்கும் இவரை வெளிப்படை காரணம் ஏதும் இன்றி பிசிசிஐ ஐபிஎல் 9 இல் இருந்து தூக்கி உள்ளது. ஹர்ஷா போகலே IIM இல் படித்து கிரிக்கெட் மீது கொண்ட ஆர்வத்தால் தனது ஆங்கில திறமை மூலம் கிரிக்கெட் வர்ணனையாளர் ஆனவர். ரவி சாஸ்திரி மற்றும் ஹர்ஷா போகலே இவர்கள் இருவர் தான் முதன்மையான இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர்களாக இருந்தனர். இந்திய – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஆன T20 போட்டியின் பொது விதர்பா கிரிக்கெட் அசோசியேசன் மூத்த அதிகாரி ஒருவர்க்கும் இவர்க்கும் இடையே சூடான விவாதம் நடந்ததாம். அது கூட காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். இது மட்டுமின்றி இந்திய – வங்கதேசம் இந்தியே நடந்த போட்டிக்கு பின் நடிகர் அமிதாப் பச்சன் “இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர்கள் இந்திய வீரகளை பற்றியும் பேசினால் நல்லது” ... Read more

‘ஹாட்ரிக்’ சாம்பியன் ஆனார் ஜோகோவிச்

மயாமி ஓபனில் அசத்திய செர்பியாவின் நோவக் ஜோகோவிச் தொடர்ந்து 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பைனலில் ஜப்பானின் கெய் நிஷிகோரியை தோற்கடித்தார். அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில், மயாமி ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் ‘நம்பர்-1’ வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 6வது இடத்தில் உள்ள ஜப்பானின் கெய் நிஷிகோரி மோதினர். இதில் அபாரமாக ஆடிய ‘நடப்பு சாம்பியன்’ ஜோகோவிச் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் இத்தொடரின் ஒற்றையர் பிரிவில் ‘ஹாட்ரிக்’ கோப்பை வென்ற 2வது வீரர் என்ற பெருமை பெற்றார் ஜோகோவிச். இதற்கு முன் அமெரிக்காவின் ஆன்ட்ரி அகாசி (2001-03) இம்மைல்கல்லை எட்டினார். தவிர இது இத்தொடரில் ஜோகோவிச் கைப்பற்றிய 6வது (2007, 2011-12, 2014-16) பட்டம். இதன்மூலம் அதிக முறை (6) கோப்பை வென்ற வீரர்கள் வரிசையில் முதலிடத்தை அகாசியுடன் பகிர்ந்து ... Read more

வார்னேவுக்கு சமர்ப்பணம் – சாமுவேல்ஸ் கலாய்

ஆஸ்திரேலிய ‘சுழல்’ ஜாம்பவான் ஷேன் வார்ன், வெஸ்ட் இண்டீசின் சாமுவேல்ஸ் இருவருக்கிடையே கடந்த 2013ல் நடந்த ‘பிக் பாஷ்’ தொடரின் போது மோதல் வெடித்தது. இது, சமீபத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரிலும் நீடித்தது. இந்தியாவுக்கு எதிரான அரையிறுதியில் வர்ணனையாளராக இருந்த வார்ன், சாமுவேல்ஸ் ‘அவுட்’ குறித்து விமர்சனம் செய்தார். இங்கிலாந்துக்கு எதிரான பைனலில் பேட்டிங்கில் அசத்திய சாமுவேல்ஸ் 85 ரன்கள் குவித்து ஆட்டநாயகனாக ஜொலித்தார். அப்போது அவருக்கு வழங்கப்பட்ட விருதை, வார்னுக்கு சமர்ப்பிக்கிறேன் எனக் கூறினார். இதுகுறித்து சாமுவேல்ஸ் கூறுகையில், ”பைனல் போட்டியன்று காலை எழுந்த போது என் மனதில் ஒரு விஷயம் அடிக்கடி வந்து சென்றது. ஷேன் வார்ன் தொடர்ச்சியாக ஏன் விமர்சனம் செய்கிறார். அவருக்கு என் மீது என்ன கோபம் எனத் தெரியவில்லை. நான் ஒருபோதும் அவரை அவமரியாதை செய்ததில்லை. அவர் மனதில் உள்ள விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டும். இப்படி தொடர்ச்சியாக விமர்சனம் செய்வதை ... Read more

புனே சென்னை ஆகுமா?

புனே: பிரிமியர் தொடரில் தோனி-பிளமிங் கூட்டணி மீண்டும் அசத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆறாவது பிரிமியர் தொடரில் நடந்த சூதாட்டம் காரணமாக சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தலா 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டன. இதற்குப் பதில் வரும் 9ம் தேதி துவங்கும் 9வது பிரிமியர் தொடரில் புனே, குஜராத் என, இரு அணிகள் புதிதாக களம் காணுகின்றன. இதில் புனே அணிக்கு கேப்டனாக தோனி, பயிற்சியாளராக பிளமிங் இருப்பதால், பார்ப்பதற்கு சென்னை அணி போல உள்ளது. சென்னை அணிக்கு 2010, 2011ல் பிரிமியர் கோப்பை, 2010, 2014ல் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை தோனி-பிளமிங் கூட்டணி பெற்று தந்தது. இவர்கள் இருப்பதால் புனே அணி மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு கேப்டன்: தவிர, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலிய ‘டுவென்டி-20’ அணிகளின் கேப்டன்கள் டுபிளசி, ஸ்டீவ் ஸ்மித், ரகானே, நட்சத்திர வீரர் பீட்டர்சன் என, பெரும் பட்டாளமே இந்த அணியில் உள்ளது. மூன்று ‘சுழல்’: ... Read more