செய்திகள்

உலக தமிழ் மாநாடுகளால் என்ன பயன்? சென்னை ஐகோர்ட் வேதனை

சென்னை:’மொழிக்கு எந்த பயனும் இல்லாமல், கோடிக்கணக்கில் செலவு செய்து, உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி என்ன பிரயோஜனம்; தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லாமல், செம்மொழி எனக் கூறுவதால் என்ன பயன்?’ என, சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.  மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், 50 ரூபாய், 200 ரூபாய் கட்டணத்தில், பிற மொழியினருக்கு, இந்தி சான்றிதழ் மற்றும் டிப்ளமோ வகுப்புகளை நடத்துவது போல, தமிழர் அல்லாதவர்களுக்கும், தமிழ் தெரியாத வெளிநாட்டு தமிழர்களுக்கும், தமிழ் மொழியை கற்றுக் கொடுக்க, குறைந்த கட்டணத்தில் அஞ்சல் வழிக் கல்வியை துவங்க உத்தரவிடக் கோரி, லட்சுமி நாராயணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராமசுப்பிரமணியன், நீதிபதி கிருபாகரன் அடங்கிய, ‘டிவிஷன் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு: மொழிக்கு எந்த பயனும் இல்லாமல், உலக தமிழ் மாநாடுகளை நடத்தி என்ன பிரயோஜனம்; தமிழை அடுத்த தலைமுறைக்கு ... Read more

எது சிறந்த பள்ளி?

2 வருஷம், 14 மணி நேரம் ஸ்கூல் 1100+ வாங்குற தனியார் பள்ளிகளை விட,  1 வருஷம் 8 மணி நேரம் ஸ்கூல் 1100+ வாங்குற அரசு பள்ளிகள் பல மடங்கு மேல்தான் மதிப்பெண் மட்டுமே இலக்காக வைத்து பிராய்லர் கோழிகளை நாம் உருவாக்கவில்லை நமது அரசுப்பள்ளியில் படித்த செல்வங்கள் எல்லாம் தனக்கான வாழ்வை தன்னியல்பாக  அமைத்துக் கொள்வார்கள் பூக்கடைக்கு விளம்பரம் எதுக்கு? வாட்ஸ்ஆப் வழி இதனை படிக்கும் போது நிச்சயம் உண்மை எனவே பட்டது. அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்

+2 மாணவர்களின் வெற்றி சதவீதம்

1. கன்னியாகுமரி – 95.7 சதவீதம் 2. திருநெல்வேலி – 94.76 சதவீதம் 3. தூத்துக்குடி – 95.47 சதவீதம் 4. ராமநாதபுரம் – 95.04 சதவீதம் 5. சிவகங்கை – 95.07 சதவீதம் 6. விருதுநகர் – 95.73 சதவீதம் 7. தேனி – 95.11 சதவீதம் 8. மதுரை – 93.19 சதவீதம் 9. திண்டுக்கல் – 90.48 சதவீதம் 10. ஊட்டி – 91.29 சதவீதம் 11. திருப்பூர் – 95.2 சதவீதம் 12. கோவை – 94.15 சதவீதம் 13. ஈரோடு – 96.92 சதவீதம் 14. சேலம் – 90.90 சதவீதம் 15. நாமக்கல் – 94.37 சதவீதம் 16. கிருஷ்ணகிரி – 85.99 சதவீதம் 17. தர்மபுரி – 90.42 சதவீதம் 18. புதுக்கோட்டை – 93.01 சதவீதம் 19. கரூர் – 93.52 சதவீதம் 20. அரியலூர் – 90.53 சதவீதம் ... Read more

விகடனை போட்டு தள்ளும் நெட்டிசன்கள்

ஐந்தாண்டுகளாக அதிமுக சார்பு நிலையில் இருந்து விட்டு இப்போது சமீப காலமாக விகடன் லேசாக திமுக சார்ந்து கட்டுரைகளை வெளியிடுகிறது, ஒரு பக்கம் நடிகரின் ரசிகர்கள் பிறந்த நாள் என்ற பெயரில் ரகளை என சொல்லும் விகடன் இன்னொரு பக்கம் அதே நடிகரின் பிறந்தநாள் பற்றி வண்ணப்படங்களுடன் கட்டுரை போடுகிறது. வேறு எதுவும் டாபிக் கிடைக்கததால் விகடனை கொறிக்க தொடங்கி அது இப்போது உலக அளவில் ட்விட்டர் ட்ரெண்டு ஆகி விட்டது.   #விகடன்ஒருசில்றப்பய Tweets

என்ன இனிமே தான் கத்திரி வெயிலா?

அக்னி நட்சத்திரம் என்றழைக்கப்படும் கத்திரி வெயில் வியாழக்கிழமை (மே 5) தொடங்கவுள்ளது. இதனால், வெப்பத்தின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. மேற்கு திசையில் இருந்து காற்று வீசியதாலும் கடல் காற்று உருவாக தாமதித்ததாலும் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் கடந்த வாரத்தில் அதிகரித்தது. அதிகபட்சமாக வேலூரில் 111 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் வரை பதிவானது. இதையடுத்து, தெற்கு, தென்கிழக்கு பகுதியில் இருந்து ஈரப்பதமான காற்று வீசத் தொடங்கியதையடுத்து வெப்பத்தின் தாக்கம் சற்று குறையத் தொடங்கியது. இருப்பினும் கோடை காலத்துக்கான இயல்பான வெப்பநிலை சராசரியாக 98 முதல் 100 டிகிரி வரை பதிவாகி வருகிறது. கத்திரி வெயில்: கத்திரி வெயில் மே 5-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதன் காரணமாக சராசரி வெப்பத்தின் அளவு தமிழகமெங்கும் சராசரியாக 104 முதல் 106 வரை பதிவாக உள்ளது. கத்திரி வெயிலின் தாக்கம் மே மாத இறுதி வரை நீடிக்கும். இது தொடர்பாக வானிலை ஆய்வு ... Read more

யாருக்கு வாக்களிக்க வேண்டும் – சகாயம் பேச்சு

எல்லா அரசியலுக்கு அப்பாற்பட்ட தலைவர்களும் என்ன சொவர்களோ அதைத்தான் சகாயமும் சொல்லி இருக்கிறார். கட்டாயம் வாக்களியுங்கள், சிந்தித்து வாக்களியுங்கள். மாற்றத்தை அரசியலில் தேட வேண்டாம், சமூகத்தில் தான் அதை ஏற்படுத்த வேண்டும் என அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் உ.சகாயம் தெரிவித்தார். மன்னார்குடியில் ‘மன்னையின் மைந்தர்கள்’ அமைப்பு சார்பில் ‘நமது வாக்கு நமது உரிமை’ என்ற தலைப்பில் நேற்று முன்தினம் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்குக்கு அமைப்பின் தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். மருத்துவர் பாரதிச்செல் வன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்புரையாற்றிய உ.சகாயம் பேசும்போது, “மே 16-ம் தேதி நம்முடைய பங்களிப்பு சமூகத்தின் மாற்றத்துக்கான பங் களிப்பாக இருக்க வேண்டும். அதற்கு அனைத்து வாக்காளர் களும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். உலகிலேயே மிகவும் அபாயகரமானவர்கள் சமூக பொறுப்பற்றவர்கள் தான். தேர்தலில் யார் வாக்களிக்காமல் இருக்கிறார்கள் என்றால் அதிகம் படித்தவர்கள் தான். இவர்களே அநீதிக்கு காரணம். இவர்களை தான் நாம் மாற்ற ... Read more

விஜய் மல்லையா பேட்டி – சிரிக்காமல், கோபப்படாமல் படிக்கவும்

இப்போதைக்கு இந்தியாவுக்குத் திரும்பி வர மாட்டேன் என்று தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். இந்தியாவில் வாங்கிய வங்கிக் கடன் ரூ.9,400 கோடியை திருப்பிச் செலுத்தாதது உள்பட பல்வேறு நிதி முறைகேடு வழக்குகளில் சிக்கியுள்ள மல்லையா இப்போது இங்கிலாந்தில் உள்ளார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அவரது கடவுச்சீட்டு முடக்கப்பட்டது. மேலும், மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்புமாறு பிரிட்டன் அரசிடம், வெளியுறவு அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், லண்டனில் இருந்து வெளியாகும் “ஃபைனான்ஷியல் டைம்ஸ்’ நாளிதழிற்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில் மல்லையா கூறியிருப்பதாவது: வங்கிக் கடன் பிரச்னைக்கு நியாயமான தீர்வைக் காண வேண்டும் என்றே நினைக்கிறேன். ஆனால் எனது பாஸ்போர்டை  முடக்குவதன் மூலமாகவோ, என்னைக் கைது செய்வதாலேயோ பணத்தைப் பெற முடியாது. நான் கட்டாய நாடு கடத்தல் நிலைக்கு உள்ளானேன். இந்தியாவுக்குத் திரும்ப வேண்டும் என்று ஆசைப் படுகிறேன். ஆனால், இப்போதைக்கு நாடு திரும்பும் எண்ணம் ஏதும் ... Read more

10 இடங்களில் சதம் – கொளுத்தும் வெயில்..

தமிழகத்தில் முன் எப்போதும் அளவுக்கு வெயில் இம்முறை சுட்டெரித்து வருகிறது. ஒரே நாளில் தமிழகத்தின் பாத்து இடங்களில் நூறு டிகிரிக்கும் அதிகமாக வெயிலின் அளவு பதிவு செய்யப்பட்டு உள்ளது. முன்பெல்லாம் கடுமையான வெயிர் காலங்களில் வேலூரில் மட்டும் தான் தமிழ்நாட்டில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தும். இப்போது எல்லா இடங்களிலும் வெயிலின் கொடுமை அதிகரித்துள்ளது. வெயில் நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: தெற்கு, தென்கிழக்கு பகுதியில் இருந்து காற்று வீசுவதால் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. எனினும், கோடை காலத்துக்கான வெப்பம் நீடிக்கிறது. தமிழகத்தைப் பொருத்தவரை பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு இதே வெப்ப நிலை நீடிக்கும். வெப்பத்தின் அளவு சராசரியாக 98 முதல் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருக்கும். சில இடங்களில் வெப்ப சலனத்தினால் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றனர். வெள்ளிக்கிழமை பதிவான வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்): கரூர் பரமத்திவேலூர், தருமபுரி, திருப்பத்தூர், ... Read more

வெயில் அதிகமா இருக்கு கொஞ்சம் பார்த்து பண்ணுங்க – தேர்தல் ஆணையம்

அரசியல் கட்சிகள் கடும் வெப்பம் நிலவும்போது பொதுக்கூட்டம் நடத்துவதை தவிர்க்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால் குடிநீர், மருத்துவ வசதி, கூரை அமைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்த லுக்கான பிரச்சாரத்தில் ஆளும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் பெரும் பாலான மாவட்டங்களில் அதிக வெப்பம் நிலவி வந்தாலும், அதை பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதாவை பொறுத்தவரை, கடந்த 9-ம் தேதி சென்னையில் பிரச்சார பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து 11-ம் தேதி விருதாச்சலத்திலும், 20-ம் தேதி சேலத்திலும் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார். இந்த இரு கூட்டங்களிலும் பங்கேற்ற 4 பேர் உயிரிழந்தனர். அதிமுக சார்பில், உடல்நலக் குறைவால் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால், கடும் வெயில் மற்றும் குடிநீர் கிடைக்காததால் இறந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இது தொடர்பாக, சமூக அமைப்புகள் மற்றும் திமுக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்கு ... Read more

வாட்ஸ் அப் -க்கு போட்டியாக ஆப் உருவாக்கிய சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை

வாட்ஸ்அப் பாணியில் தான், உருவாக்கிய, சோஷியல் மீடியா ஆப், சரிவர பிரபலம் ஆகாத மன வருத்தத்தால், ஹைதராபாத்தை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் நைட்ரஜன் வாயுவை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஹைதராபாத் நகரிலுள்ள அமீர்பேட் பகுதியை சேர்ந்தவர் லக்கி குப்தா அகர்வால் (33). நகரிலுள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். திருமணமாகாத லக்கி குப்தா தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவரின் சகோதரர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று லக்கி குப்தா அவரது அறைக்கதவை மாலை வரை திறக்கவேயில்லையாம். இதனால் சந்தேகமடைந்த அவரின் தந்தை, அறை கதவை பல முறை தட்டி, மகனை கூப்பிட்டுள்ளார். அறைக்குள் இருந்து பதில் வராததால் பதற்றமடைந்த லக்கி குப்தா பெற்றோர், அந்த கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது. அறைக்குள் இருந்த படுக்கையில், லக்கி குப்தா மல்லாந்து படுத்த நிலையில் அசைவற்று ... Read more