பிளாக்கர் சிதைக்கப்பட்டதா?

3
182
பதிவர்கள் அனைவரும் இன்று பிளாக்கர் தளம் மீது கடுப்பாகி இருப்பார்கள்.
இருக்காதா பின்ன? சும்மா எதைப் பற்றியாவது பதிவு எழுதும் நமக்கு, தமிழின துரோகிகள் அடைந்த தோல்வி குறித்து மணிக்கொருமுறை பதிவு எழுதலாம் என்று ப்ளாக்கரை திறந்தாள், தற்காலிகமாக பிளாக்கர் செயல்படாது என்று வருகின்றதே ஒழிய, டாஷ்போர்டை காணவில்லை.

அப்படி என்ன நடந்தது பிளாக்கருக்கு ?
மே 9 ந் தேதி முதலே அடிக்கடி இந்த பிரச்னை உருவெடுத்து இருக்கிறது.
சமீப காலங்களில் கொஞ்சம் பெரிய இணையதளங்களை மிதப் படித்த மென்பொருள் வல்லுநர் கூட்டம், சிதைத்து(Hacking) வேடிக்கை பார்த்து வருகிறது. அப்படி ஒரு சூழலில் பிளாக்கர் மாட்டி இருப்பதற்கான தடயங்கள் அதிகமாகவே தெரிகின்றன.

கூகிள் ஒன்றும் இந்த மாதிரியான சிதைவுகளை பற்றி அறியாதவர்கள் அல்ல, அதனால் அவர்கள் எப்போதுமே (~ இரு தினங்களுக்கு ஒருமுறை) தங்கள் தளங்களை வன்தட்டுகளில்  பிரதி எடுத்து வைப்பார்கள்.

ஒரு வேளை, சிதைவாளர்கள் தங்கள் கைவரிசையை பிளாக்கர் தளத்தின் மீது காட்டி இருந்தால்,
எவ்வளவு விரைவாக பிளாக்கர் அதனை கான்கிறதோ அப்போதே தங்களது அந்த வன்தட்டுகளை இணைய ஏற்றம் செய்து பிரச்னையை ஓரளவு சமாளிக்கும்.

அது தான் இப்போதும்நடந்துள்ளது. அதாவது, பிளாக்கர் சிதைக்கப்பட்டதும் நாம் புதிதாக பதிவிட்டவை காணாமல் போய் இருக்கும், இதற்கான காரணம் இதுவன்றி வேறு எதுவும் இருக்கவும் கூடுமோ?

எதற்கும் நீங்கள் உங்கள் வலைப்பூவை உங்கள் கணினியில் ஒரு பிரதி எடுத்துக் கொள்ளுங்கள்,
பின்னாளில் பெரிய பிரச்னைகள் உருவெடுத்தாலும்  கூகிள் பார்த்துக் கொள்ளும், இருந்தாலும் எதற்கும் இருக்கட்டுமே.
 பின்வரும் முகவரியில் உங்கள் ப்ளாக் ஐடி யைப் போட்டு பதிவிறக்கம் செய்திடுங்கள்..

http://www.blogger.com/feeds/BOLGID/archive

டாஷ்போர்டை திறந்தால் பின்வரும் இணைப்புகளில் ப்ளாக் ஐடி தெரியும்..
Edit Posts – Comments – Settings – Design – Monetise – Stats

இதனை பதிவிறக்கம் செய்வது  மூலம் நீங்கள் இந்தக் கோப்பைக் கொண்டு உங்களின் இந்த வலைப்பூவை வோர்ட்பிரஸ் அல்லது வேறு வழங்கிகள் மூலம் புதுப்பிக்க முடியும்.

பகிர்ந்து
முந்தைய செய்தி11/5 – ஒரு நாள் ஒரு ஃபோல்டர் : கே.ஜே.ஏசுதாஸ்
அடுத்த செய்திதேர்தல் முடிவுகளும் சந்தானமும்..!
வலை எழுத்தில் கொண்ட பற்றால், முழு நேர வங்கிப் பணியை மூட்டை கட்டியவன்.

3 கருத்துக்கள்

  1. சேமித்து விட்டேன்.
    நன்றி நண்பரே

    பதிலளிக்க
  2. Thanks friend

    பதிலளிக்க
  3. ஒருவேளை மொத்தமாக பிளாக்கர் முடங்கிப் போனால்?
    ஐயோ, நினைக்கவே பயமாக இருக்கிறது.
    நாம் கஷ்டப்பட்டு (???) தமிழ் தாய்க்கு சேர்த்த அணிகலன்கள் (???) வீணாகி விடும் அன்றோ?

    ஹி..ஹி..

    பதிலளிக்க

உங்கள் கருத்தை தெரிவிக்க