என்று பதிவிடத் தொடங்கினேன். ஆனால் வெறும் ஏழு பதிவுகளுடன் அது நின்று போய் விட்டது.
சச்சின் நூறாவது சதத்தை அடிக்காமல் இருப்பதற்கும் இந்த தொடர் பதிவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது நூறு சதவிகிதம் தெரிந்து இருந்தாலும் ஏதோ ஒன்று மனதை வருடுவதால் கிடப்பில் போட்ட அந்த தொடரை பெயர் மாற்றத்துடன் தொடரப் போகிறேன்.
இந்த பதிவு முதல் தலைப்பு
100 நாட் அவுட்.!
சதம் #9
ரன்கள் : 115
எதிரணி : நியூசிலாந்து
இடம் : பரோடா, இந்தியா
நாள் : அக்டோபர் 28, 1994
ஆட்ட முடிவு : வெற்றி
ஆட்ட நாயகன் : ஆம்
சிறிய பரோடா மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாகவே எப்போதும் இருந்து இருக்கிறது.
முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியில் இரண்டே பேர் மட்டுமே அணியின் மொத்த ஸ்கோர் வர காரணமாய் இருந்தனர்.
ஸ்ரீநாத், பிரபாகரின் வீச்சில் தொடக்கக் ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்ப திணறிய நியூசிலாந்து அணியில் ருதர்போர்ட் சதமடிக்க பரோரே பவுண்டரிகளே இல்லாமல் 96 ரன்கள் எடுத்தார். இந்தியாவின் வெற்றி இலக்கு 270 ரன்கள்.
தொடக்கம் முதலே சச்சினும் பிரபாகரும் அடித்து ஆடினார்கள்.
முதல் விக்கெட்டுக்கு 144 ரன் சேர்த்த பின் பிரபாகர் (74) ஆட்டம் இழந்தார்.
சச்சின் தொடர்ந்து அதிரடியாக விளையாடி சதத்தை எட்டினார்.இதில் 9 பவுண்டரிகளும் 3 சிக்சர்களும் அடங்கும்.
அசாருதீன் அடித்த பந்து பவுலர் கையில் பட்டு ஸ்டம்பில் அடிக்க எதிர்ப்பக்கம் இருந்த சச்சின் ரன் அவுட் ஆனார். ஆனால் அதற்கு முன்பே வெற்றி கிட்டத்தட்ட நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
ஆட்ட நாயகனாக சச்சின் தெரிவானார்.
சச்சினின் ஆட்டத் தொகுப்பு காணொளி கீழே…