அச்சச்சோ கருவளையமா,இத படிங்க

0
165

கண்ணை சுற்றி கருவளையம் வர காரணம் என்னவாக இருக்கும்?

தூக்கமின்மை ,ஊட்டச்சத்து குறைபாடு,சிகிரெட்,குடிப்பழக்கம்,வயது முதிர்ச்சி, மன உலைச்சல் ,மாதவிடாய் தொடர்ச்சியின்மை,நாள் முழுக்க லைட் வெளிச்சத்தில் இருந்தாலும் கண்ணைச் சுற்றி கருவளையம் வரும்.

கருவளையம் போக்க வழிமுறைகள்:

Close up of woman’s eyes

*புதினா சாறு எடுத்து கண்ணைச் சுற்றி தடவி 5 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கருவளையம் மறையும்.

*பன்னீரில் சிறிது பஞ்சு எடுத்து நனைத்து அதை கண்ணை சுற்றி மென்மையாக ஒற்றி எடுக்க வேண்டும்.இப்படி வாரம் மூன்று முறை செய்தால் கருவளையம் மறையும்.

*படுக்க போகும்முன் பாதாம் எண்ணெயை கருவளையத்தின் மீது தடவிக்கொண்டு படுக்க வேண்டும்.ஒரு வாரம் தொடர்ந்து செய்தால் கருவளையம் தன்னால் மறையும்.

*ஆலிவ் ஆயில் மற்றும் பேபி ஆயிலை கொண்டு மசாஜ் செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

*உருளைக்கிழங்கு சாறு எடுத்து கண்ணில் தடவி சிறிது நேரம் கண் மூடி ஓய்வெடுத்தால் கண்ணுக்கு குளுமையாகவும்,தொடர்ந்து செய்தால் கருவளையம் மறையும்.

*தயிருடன், மஞ்சள் மற்றும் சந்தனம் சேர்த்து கலந்து கண்ணைச் சுற்றி பூசினால் கருவளையம் மறைவதுடன் கண் வசீகரமாக தோன்றும்.

உங்கள் கருத்தை தெரிவிக்க