ராகுல் காந்தி — ஃப்ளாப் ஷோ @ உத்தர பிரதேசம்

ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியின் அடையாளமாக மாற்ற மத்தியில் ஆளும் தரப்பு முயற்சி செய்து அதில் ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறது.
ஆனால் ராகுல் , காங்கிரஸில் தனக்கு கிடைக்கும் முக்கியத்துவம் மக்களிடம் காங்கிரஸிற்கு கிடைக்கும் என தப்புக்கணக்கு போடுவது தோற்பது  இது முதல் தடவை அல்ல.

ஏற்கனவே கடந்த சில மாநில தேர்தல்களில் காங்கிரஸ் வலுவாக இருந்த இடங்களில் கூட ராகுலின் திட்டங்கள் எதுவும் எடுபடாமல் போன நிலையில் உத்தர பிரதேசத்தில்

மாயாவதி vs ராகுல் காந்தி

அகிலேஷ்  vs ராகுல் காந்தி

என்று வட இந்திய மீடியாக்கள் ராகுலை இஷ்டதிற்கும் தூக்கி விட்டன.
அவரும்  மாயாவதியை அரக்கி போல சித்தரித்தார்; யானி சிலைகளுக்கு முழு ஆடை போர்த்த செய்தார். அகிலேஷை நடைமுறை தெரியாதவர் என சாடினார். ஆனால் மக்கள் தங்களுக்கு யானையும் தேவை இல்லை அதை மூடும் கையும் தேவை இல்லை என தீர்மானித்து விட்டனர்.

எந்த அளவுக்கு ராகுல் காந்தியின் முகம் தொலைக்காட்சிகளில் இடைவிடாமல் தெரிந்ததோ அந்தளவு மக்களின் தீர்க்கமான முடிவு இப்போது தெரிந்து இருக்கிறது.

உத்தரபிரதேச சட்டசபை
தேர்தலில், இதுவரை முடிவு அறிவிக்கப்பட்டவைகளில் சமாஜ்வாடி கட்சி 66
இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 27 இடங்களிலும், பா.ஜ. 11 மற்றும்
காங்கிரஸ்7 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்ட
தொகுதிகளில் முலாயம் சிங் கட்சி முன்னிலை பெற்றுள்ளதால் நிச்சயம் முலாயம்
முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மக்களோடு மக்களாக பழகுவது போல பாசாங்கு காட்டியதெல்லாம் அந்த காலத்தில் எடுபட்டு இருக்கலாம்.
தொலைத்தொடர்புத் துறை வளர்ந்து விட்ட இக்காலத்தில் அரசியல் தூய்மைகள் யாவும் உடனுக்குடன் அரங்கேறுவதை பார்க்கத் தானே செய்கிறோம்.

நமது  மாணவர்கள் வகுப்பறையில் தூங்கினால் ஆசிரியரிடம் படும் பாட்டை அவர்கள் நாடாளுமன்றத்திலோ சட்டசபையிலோ பெறுவதில்லை, மேன்மைமிகு சட்டமியற்றும் அவையில் காணொளி கண்டு களிப்பவரும் நொண்டி சாக்குகள் சொல்லி தப்பிக்கிறார்.

ஆனால் இவை எதுவுமே அவ்வளவு சீக்கிரம் மக்கள் கண்ணில் இருந்து விலகி விடாது.

புதிதாக தெரிந்தெடுக்கப்பட்ட அரசுகளும் அரசாள்பவர்களும் மக்களுக்கு நலம் புரிய வேண்டுமென யான் நினைந்தாலும்

என் செய்வேன் இந்த இளையோன்?