தமிழா இந்தா பிடி உன் துரோகத்துக்கு விலை..!
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
கொஞ்சமோ பிரிவினைகள் – ஒரு
கோடியென் றாலது பெரிதாமோ ?
இப்படி வெறும் இரண்டு நாடுகளுக்குள் குறுங்கி இருந்த நம்மை இப்போது கிட்டத்தட்ட ஒரே நாட்டுக்குள் அடக்கி விட்டார்கள். ஆட்சியில் பங்கு கேட்கிறான் என்று அடக்கி ஆள நினைத்த சிங்களனுக்கு எதிராக தமிழர் கூட்டம் திரும்பியது, எப்படி இந்திய சுதந்திர போராட்டத்தில் எத்தனையோ குழுக்கள் இருந்தாலும் அவை எல்லாம் காந்தியின் கீழ் வந்ததோ அதே போல் (நான் வெறும் குழுவைத்தான் சொல்கிறேன் போராட்ட முறையை அல்ல), பிரபாகரன் என்னும் ஒரு புலியின் கீழாக ஒரு பெருங்கூட்டமே சேர்ந்தது. தமிழர்களுக்கு சொந்த நாட்டிலேயே அடைப்பட்டுக் கிடக்கும் அடிமைத்தனம் பிடிக்காமல் சுதந்திரம் நோக்கி பயணிக்கும் உத்வேகம் வந்தது.
இதற்கெல்லாம் அவன் உதவி என்று யாரிடமும் போய் கை கட்டி நின்று விடவில்லை, ஆனாலும் அவனுக்கு உதவ வேண்டியது நம் கடமை அன்றோ? உயிர் பிரிய கிடக்கும் உன் சகோதரனையோ சகோதரியையோ பார்த்து விட்டும் உன்னால் சும்மா இருக்க முடியுமா?
இல்லை உதவி ஏதும் கேட்கவில்லை என்று மரணத்திடம் தான் அவர்களை உன்னால் தாரை வார்த்து கொடுக்க முடியுமா? நிச்சயமாய் முடியும் ஏனென்றால் நீ தான் ஆயிரக்கணக்கான ஏன் லட்சக்கணக்கான உன் சகோதர சகோதரிகள் கொல்லப்பட்ட போதும் வாயைக் கூட திறவாமல் இருந்தவனாயிற்றே?
பிரபாகரன் என்னும் அச்சத்தை வென்ற தலைவனின் கீழ் ஒரு அரசாங்கமே நடந்தது. உலகின் எந்த புரட்சியாளர்களும்,விடுதலை போராளிகளும் தனி அரசாங்கம் நடத்துமளவுக்கு திறன் பெற்றிருக்கவில்லை ஆனால் தமிழன் பெற்றிருந்தான். உலகின் எந்த மொழிக்காரனும் தன் இனத்தவன் கொல்லப்படும் போது சும்மா இருந்ததில்லை ஆனால் அதுவும் தமிழனால் தான் முடிந்தது.
நாட்டை சுத்தப்படுத்துகிறோம், தீவிரவாதிகளை ஒடுக்குகிறோம் என்று தமிழ் மக்களை எமது சகோதர இனத்தவரை சாரை சாரையாக கொன்று குவித்தானே சிங்களவன், அவனை நீ என்ன செய்தாய்? ஐநா சபையிலே இலங்கைக்கு எதிராக தீர்மானம் போட்ட போது(மனிதாபிமானம் இருக்கும் வேறு நாட்டில் இருந்து) அதை வன்மையாக எதிர்த்து இலங்கைக்கு வக்காலத்து வாங்கியது இந்தியா.
இந்தியாவின் ஏகபோக உதவியால் இலங்கை எந்த வித பிரச்னையுமின்றி தமிழர்களை தீர்த்து கட்டியது. தான் ஆட்சியில் இருக்கும் போது எதுவும் செய்யாமால் அப்போது இலங்கை தமிழக்கு நான் முழு ஆதரவு என்று ஒருவர் கூற, இலங்கை தமிழர் உட்பட உலகத் தமிழ்களின் தலைவன் தான் தான் எனத் தம்பட்டம் அடித்து கொண்டவரோ அவ்வப்போது ஏதோ சளி பிடித்தவனை விசாரிக்க எழுதும் கடிதம் கணக்காய் தந்தி அடித்து கொண்டிருந்தார்.
இடை இடையே உண்ணாவிரத நாடகம் வேறு, இவர் உண்ணாவிரதம் ஆரம்பிப்பாராம் ஒரு மணி நேரத்திற்கெல்லாம் பிரதமர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரச்னைகள் சுமுகமாக பேசி தீர்க்கப்பட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிப்பாராம். இதில் உச்சகட்ட மோசடி என்னவெனில் அப்போது தான் கொல்விகிதம் (கொலைகளின் எண்ணிக்கை) மிக அதிகமாகி கொண்டிருக்கும்.
சரி இவர்களை விட்டால், வேறு கதியே இல்லை என்றால் வைகோ,சீமான் போன்றவர்கள் இருக்கிறார்கள். இருந்தென்ன பயன் வெறுமனே பேசுவதால் இதில் எதுவும் நிற்க போவதில்லை, பேச்சைக் கேட்டு நம் தமிழன் உணர்ச்சி பொங்க சிங்களவனை கேட்கப் போவதும் இல்லை எனும் அசட்டு தைரியம் தானே இன்று இலங்கையை செந்தூய்மை(RED WASH) படுத்தியிருக்கிறது.
இப்போது அதெல்லாம் பழைய கதையாகி விட்டது, நமக்கென்ன எவனோ சாகிறான் என்று இருந்தோம் அல்லவா? நம் பங்காளிகளை அழித்த சிங்களவன் இதோ வருகிறான் நம் வீட்டிற்குள்ளும், ஆம் நம் வீட்டின் குளக்கரையை தொட்டு விட்டான். மீனவனை கொல்லத் தொடக்கி விட்டான். எப்போதே தொடங்கினான் ஆனாலும் இப்போது தான் வேகம் கொடுத்திருக்கிறான். தமிழா,இத்தனை நாளும் யாருக்கோ ஆபத்து என்று ஒதுங்கி இருந்தாயா இன்று உன் அடிமடியில் கை வைத்து விட்டான். இப்போதும் நீ மீனவன் தானே என ஒதுங்கி நின்றால், அடுத்த குறி நீயாக இருக்கமாட்டாய் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
இப்போது தான் நினைவுக்கு வருகிறது, ஒரு அம்மையார் தேர்தல் பிரச்சாரத்துக்கு சில நாட்களுக்கு முன் வந்தார், சொன்னார், இனி ஒரு தமிழனுடைய உயிரும் பிரியாது என்று. அவரின் பேச்சுக்கு எவ்வளவு மரியாதை, உடனே கேட்டு விட்டார்களே?
“உயிரை மட்டும் இன்றி,உடலையும் அல்லவா பிரித்து விட்டார்கள் துண்டு துண்டாக..!”
பாகிஸ்தான் நமக்கு எதிரி தான், ஆனாலும் எல்லை கடந்த மீனவரை (22 பேர்) கைது மட்டும் தான் செய்து இருக்கிறார்கள். ஆனால் வெறி பிடித்த இந்த மிருகங்கள் நம் எல்லையில் இருக்கும் மீனவரை கடத்தி சென்று அவர்கள் எல்லையில் இருந்ததாய் சாடுவது ஒரு பக்கம் என்றால், இப்படி பல வேளைகளில் கொன்று குவிப்பது எவ்வகை நியாயம்?
என்ன நியாயமா,அப்படி ஒரு வார்த்தையே சிங்கள மொழியில் கிடையாதே?
ஆனாலும் இந்த பிரச்னைக்கெல்லாம் சிங்களவன்தான் காரணம் என்று மட்டும் கூற முடியாது நீயும் தான் காரணம் தமிழா, இந்தா பிடி நீ செய்த துரோகத்திற்கான விலை.. என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
புதுக்கோட்டையில் இறந்து கரை ஒதுங்கியிருக்கும் நம் சகோதரனுக்கு அஞ்சலி செலுத்தும் அதே வேளையில்,
குறித்துக்கொள் சிங்களனே, இது நாள் வரையிலும் எல்லை தாண்டிய பிரச்னை, ராஜீவை கொலை செய்தவர்கள் என்று உனக்கு உதவியாய் இருந்தவரும் உனக்கு எதிராக திரும்பிடுவர். இன்னொரு பங்களாதேஷ் வெகு சீக்கிரம் அமைய போகிறது, பார்..!
பலரும் படித்திட ஓட்டு போடுங்கள் நண்பரே..!