இலங்கை

இலங்கை சிறையில் இருந்து மீனவர்கள் விடுவிப்பு

இலங்கை சிறையில் வாடிய 44 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராமசாதபுரம், நாகை மாவட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கச்த்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது மேற்கண்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கடந்த 1 மாதத்திற்கு மேலாக தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் வாடினர். இந்நிலையில் தற்போது அவர்கள் விடுவிக்கப்பட்டிருப்பது அவர்களின் உறவினர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை விடுத்தது அமெரிக்கா

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு வொசிங்டன் டிசியில் உள்ள அமெரிக்க சமஷ்டி நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது. ஹேக் உடன்பாட்டின் கீழ் வொசிங்டன் டிசி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று குடியியல் வழக்குகள் தொடர்பாகவே, சிறிலங்கா அதிபருக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பாக நட்டஈடு கோரி சித்திரவதைகளினால் பாதிக்கப்படுவோரைப் பாதுகாக்கும் அமெரிக்கச் சட்டத்தின் கீழ் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சித்திரவதைகளினால் பாதிக்கப்படுவோரைப் பாதுகாக்கும் அமெரிக்கச் சட்டம் மீறப்பட்டுள்ளது தொடர்பான சிறிலங்கா அதிபர் மகிந்த மகிந்த ராஜபக்ச மீது ஆறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்தக் குற்றச்செயல்களுக்காக, மூன்று வெவ்வேறு சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் சிறிலங்கா அதிபரிடம் 30 மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டஈடு கோரி, இந்த வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர். ஹேக் உடன்பாட்டில் அமெரிக்காவும் சிறிலங்காவும் கையெழுத்திட்டுள்ள நிலையில், இந்த உடன்பாட்டுக்கு அமைய, மகிந்த ராஜபக்சவுக்கான அழைப்பாணை சிறிலங்கா நீதியமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாணவர் ரஜிஹர் மனோகரன், பிரேமாஸ் ஆனந்தராஜா, ... Read more

ஈழ தமிழருக்காக இளைஞர் தற்கொலை..!

தற்கொலை செய்து கொள்வது எந்த நிலையிலும் பிரச்னைக்கு ஒரு முடிவு ஆகாது. ஏற்கனவே சில பேர் இலங்கை தமிழருக்காக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அப்போதெல்லாம் என்ன நடந்ததோ அதே தான் இப்போதும் நடக்கப் போகிறது. இருந்தாலும் தன் இனத்தவன் படும் இன்னலுக்கு தன்னை தீக்கு இறை ஆக்கிய கிருஷ்ணமூர்த்தியின் ஆத்மா அமைதி அடைய வேண்டுமாயின் அவர் எண்ணியது நடக்க வேண்டும். இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து மனவேதனை அடைந்திருந்ததாகக் கூறப்படும் தமிழக இளைஞர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள சீகம்பட்டி கிராமத்தை சொந்த ஊராகக் கொண்ட 25 வயது பொறியியலாளர் கிருஷ்ணமூர்த்தி தன் மீது பெற்றோல் ஊற்றி தீவைத்துக்கொண்டார். தீக்காயங்களுடன் மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இலங்கைத் தமிழர்கள் அனுபவித்த துன்பங்களால் விரக்தி அடைந்தே தான் தற்கொலை செய்துகொள்வதாக அவர் தனது கைப்பட எழுதிய கடிதம் உறவினர்களிடம் கிடைத்துள்ளது. மரணத் தருவாயில் கிருஷ்ணமூர்த்தி ... Read more

மீண்டும் வருவோம்,மீண்டு வருவோம்..!

தலைவனை இழந்து தவித்து தன் உரிமைக்கு போராடியவனை தினம் பல உயிராய் குடித்தாய்..! வாழ வழி கேட்டவனுக்கு வளியுங் கூட கொடாது வலிகளை கொடுத்தாய்…! தகுந்த நேரம் பார்த்து துரோகிகள் கரங் கோர்த்து விரோதியென வீழ்த்தி விட்டாய்..! உடல் என்னும் எண்ணெய்யில் தமிழப் பற்று என்னும் திரிக்கு உயிர் என்னும் தீ வைத்திட்டாய்..! அன்று அனுமன் கொளுத்திய இலங்கைக்கு இன்று அதர்மம் கொழுக்கும் இலங்கைக்கு என்றேனும் இல்லை வென்றேனும் வருவோம் அந்த இலங்கைக்கு விரைவாக..!

தமிழா இந்தா பிடி உன் துரோகத்துக்கு விலை..!

நெஞ்சு பொறுக்குதில்லையே – இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் கொஞ்சமோ பிரிவினைகள் – ஒரு கோடியென் றாலது பெரிதாமோ ? எனும் பாரதியின் வரிகளை விட இந்த பதிவிற்கு பொருத்தமான தொடக்கம் வேறு எதுவும் படவில்லை.  உலகில் தமிழை தாய்மொழியாக கொண்டு மக்கள் வாழும் நாடுகள் வெறும் இரண்டு தான். இந்தியா,இலங்கை. என்ன தான் அமெரிக்கா,சவூதி,சிங்கப்பூர்,இங்கிலாந்து,அரபு,கனடா என்று உலகம் முழுவதும் தமிழர்கள் நிறைந்து இருந்தாலும், அவர்களெல்லாம் தமிழகத்தில் இருந்தோ இலங்கையில் இருந்தோ குடி பெயர்ந்தவர்களாகத் தான் இருப்பார்கள். இப்படி வெறும் இரண்டு நாடுகளுக்குள் குறுங்கி இருந்த நம்மை இப்போது கிட்டத்தட்ட ஒரே நாட்டுக்குள் அடக்கி விட்டார்கள். ஆட்சியில் பங்கு கேட்கிறான் என்று அடக்கி ஆள நினைத்த சிங்களனுக்கு எதிராக தமிழர் கூட்டம் திரும்பியது, எப்படி இந்திய சுதந்திர போராட்டத்தில்  எத்தனையோ குழுக்கள் இருந்தாலும் அவை எல்லாம் காந்தியின் கீழ் வந்ததோ அதே போல் (நான் வெறும் குழுவைத்தான் சொல்கிறேன் போராட்ட முறையை ... Read more