ஜெயலலிதா, கருணாநிதி – யார் பெரிய பணக்காரர்?
ஜெயலலிதாவுக்கு ரூ.118.58 கோடி சொத்தும், கருணாநிதிக்கு அசையா சொத்துக்கள் இல்லையெனவும், ஆனால் மனைவி, துனைவி ஆகியோர்
பெயரில் ரூ. 62.99 கோடி சொத்து உள்ளதாக, இருவரும் தங்களது வேட்புமனுவில் கூறியுள்ளனர்.அ.தி.மு.க., பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா ஆர்.கே. நகரில் போட்டியிடுகிறார். இதற்காக இன்று தனது வேட்புமனுவை தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பத்மஜா தேவியிடம் தாக்கல் செய்தார். தனது வேட்புமனுவுடன் தனது சொத்து பற்றிய விபரங்களை ஜெயலலிதா இணைத்துள்ளார்.
இதன்படி,
ஜெ.,வுக்கு ரூ118.58 கோடி சொத்து உள்ளது. ரூ.41.63 கோடி அளவுக்கு அசையும் சொத்துக்களும்,
ரூ.76.95 கோடி அளவுக்கு அசையா சொத்துக்கள் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தனக்கு ரூ.2.04 கோடி கடன் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
கருணாநிதிக்கு சொத்தே இல்லையாம்
தி.மு.க., தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். அதில்,
தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் அவரது மனைவி தயாளு, துணைவி ராசாத்தி ஆகியோர் பெயரில் ரூ.62.99 கோடி சொத்து உள்ளது
இதன்படி தயாளு, ராசாத்தி ஆகியோர் பெயர்களில் ரூ.58.77 கோடி அசையும் சொத்துக்கள் உள்ளதும், கருணாநிதிக்கு அசையா சொத்துக்கள் இல்லை எனவும், தயாளு மற்றும் ராசாத்தி பெயர்களில் ரூ. 4.63 கோடி அசையா சொத்துக்கள் உள்ளது. தவிர ராசாத்தி பெயரில் ரூ.11.94 கோடி வங்கிக்கடன் உள்ளதாகவும், கருணாநிதி பெயரில் கார், வேளாண், வங்கிக்கடன் ஏதும் இல்லை. இவ்வாறு கருணாநிதி தாக்கல் செய்த வேட்புமனுவில் கூறப்பட்டுள்ளது.