ஏன் சிவராத்திரி ? அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய உள்ளர்த்தங்கள்

0
197
சிவராத்திரி என்பது விழா அல்ல! அது,மனதைக் கட்டுப்படுத்தும் மகாவிரதம்.

 

அதனால், இதைக் கொண்டாடுகிறோம் என்று சொல்வதை விட, அனுஷ்டிக்கிறோம் என்று சொல்வதே சரி. சிவராத்திரி என்றால் பட்டினி
கிடப்பது, கண்விழிப்பது, கோவிலுக்குப் போவதுடன் நின்று விடாமல்,
இதன் தத்துவம் உணர்ந்து இவ்விரதத்தை
அனுஷ்டித்தால், வாழ்க்கை என்றால் என்ன என்பதைப்
புரிந்து கொள்ளலாம்.
நம் மனம் சந்திரனின் இயக்கத்தைப்
பொறுத்து செயல்படுகிறது. சந்திரன் வளரும் நாட்கள் 15; தேயும் நாட்கள் 15. இதில் தேய்பிறையின், 14வது நாள், அதாவது, அமாவாசைக்கு
முந்தைய நாள், சந்திரன் ஏறத்தாழ மறைந்து
விடும்.
நம் மனமும் இப்படித்தான்… ஒருநாள்,
ஒன்றை அடைந்தே தீர வேண்டும் என்ற ஆசை பொங்கும். அடுத்த நாளே, ‘அது எதற்கு,
அதனால் என்ன பயன்…’ என எண்ணி, அந்த எண்ணம் தேய்ந்து
போகும். மறுநாளே,’விட்டேனா பார்…’ என்று, அதே ஆசையின் மீது லயிக்க
ஆரம்பித்து விடும்; இப்படி நிலையில்லாமல் இருப்பது மனம்.
சிவராத்திரியை ஏன் தேய்பிறையின்,
14ஆம் நாள் அனுஷ்டிக்கின்றனர் தெரியுமா?  மனித மனம், ஒரு நிலைப் பட தியானம் அவசியம். அலைபாயும் மனதை, சிவத்தின் மீது வைத்து, எங்கும் போகாமல் கட்டிப் போட
வேண்டும். அப்படி கட்டிப் போட்டாலும்,
அமாவாசைக்கு முந்தைய நாள், சந்திரனின்
சிறு கீற்றுப் போல, மனதின் ஏதோ ஒரு மூலையில் முந்தைய ஆசை எண்ணங்களின் சிறு வடிவம் புதைந்து தான் இருக்கும்.
அதையும் ஒழித்தால் தான், நாம் பிறவியிலிருந்து விடுபட்டு சிவனை அடைய
முடியும். அதற்காக சிவனை வழிபடும் நாளே சிவராத்திரி.
இந்த தத்துவத்தை உணர்த்தத்தான்,
சிவனை லிங்க வடிவில் படைத்தனர் நம் முன்னோர்.  லிங்கத்தின் பாணம் ஏறத்தாழ முட்டையின் வடிவில்
இருக்கும். ஒரு முட்டை படம் வரையுங்கள். அதற்கு முதலும் இல்லை,
முடிவும் இல்லை. சுற்றிச் சுற்றி
போய்க் கொண்டே இருக்கும். அதே போன்றுதான் சிவனும்,
முதலும், முடிவும் இல்லாதவர்.
மனிதர்களோ அப்படி இல்லை. நமக்கு
பிறப்பு என்னும் முதலும், மரணம் என்னும் முடிவும் இருக்கிறது. இது, நாம் செய்யும் பாவ,
புண்ணியத்திற்கேற்ப பல பிறவிகளைத் தருகின்றன.
சிலர் ஏழு பிறவி என்று மனிதர்களுக்கு கணக்குச் சொல்வர். ‘எழுபிறவி’ என்பதே சரி!
நம் பாவக்கணக்கு கரையும் வரை, மீண்டும் மீண்டும் பூமியில் எழுந்து கொண்டே இருப்போம்.
பிறவிச் சூழலில் இருந்து விடுபட ஏதாவது வழியிருக்கிறதா என்றால், இருக்கிறது…
அதற்கு ஒரு மந்திர வார்த்தையைச் சொல்லியிருக்கின்றனர் முன்னோர்… அதுதான், ‘அன்பே சிவம்!’ பிற உயிர்களையும் தம்மை போல கருதி அன்பு செலுத்த வேண்டும்.
ப்ரதோஷத்தின் அடுத்தநாள்
சிவராத்திரியைக் கொண்டாடுவதன் சூட்சுமம் என்ன ? புராணம் சொல்லியிருப்பதை முதலில் பார்ப்போம்.
என்றும் அழிவே இல்லாமல் அமிர்தம்
கடையப்படுகிறது. கடைபவர்கள் தேவர்களும்
அசுரர்களும். மந்தார மலை மத்து,
கடையும்
போது முதலில் ஆலம், காலம் என்கிற
இரண்டுவிதமான விஷம் வருகிறது. உலக
மக்களை இரட்சிக்கும் பொருட்டு சிவன்
அதை
பருகுகிறார். உமையாகிய சக்தி அதைக்
கண்டத்தில் நிறுத்தி வைக்கிறார். எனவே
சிவன்
திரு நீல கண்டர் என்று
போற்றப்படுகிறார்.
ஆனால் இதற்குப் பின்னால் தெளிவான யோக
விஷயங்கள் மறைந்துள்ளன. முதலில்
நந்தியின் கொம்பின் நடுவில் நின்று
தாண்டவமாடுவது குறித்துப் பார்ப்போம்.
திருமந்திரத்தில்
‘ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே”
இந்த
பாடலை படிக்கும் போது ஒரு சந்தேகம்
வரக்கூடும். வினாயகர் சிவனின் மகன்தானே
?
நந்தி மகன் என்று போடப்பட்டிருக்கிறதே
என்று. சிவபெருமானே நந்தி தேவனாக
குருவாக வந்தார் என்றும் சொல்வார்கள்.
அப்படி என்றால் வாகனமாகக் காட்டுவது
எதனால் ? இதில் உள்ள சூட்சுமத்தை
நந்தனாரின் பாடலில் ஒரு வரியில்
கேட்கலாம்.
அதாவது அவரைக் கோவிலுக்குள் அனுமதிக்க
மாட்டார்கள். ஏனென்றால் அவர் ஜாதியில்
குறைந்தவர். ஆனால் பக்தியில் அவருக்கு
ஈடு
சொல்ல அன்று யாருமே இல்லை. சரி
வாசலில் நின்று எட்டிப் பார்க்கலாம்
என்றால்,
இந்த நந்தி மறைக்கிறது. அதை அவர் ”
நான்
செய்த பாவங்களல்லவா இப்படி நந்தியாக
வந்து குறுக்கே நிற்கிறது ” என்பார். ஆக சிவ
பெருமானை நாம் அடையத் தடையாக உள்ள
வினைகள் எங்கே இருக்கும் ? நம் உயிர்
சக்தியில் பதிந்திருக்கும். அந்த உயிர்
சக்தியே
நமக்குள் இருக்கும் நெருப்பாகிய
குண்டலினி
ஆகும். அதாவது நம் தீ என்பதே நந்தி
என்றழைக்கப்படுகிறது. அசையாமல்
இருக்கும்
பேராற்றல் சிவம் அவரே இயக்கும்
வல்லமையுள்ள சக்தியாகி நம் உடலில்
உயிராக விளங்குகிறார். இதையே குண்டலினி
சக்தியாகிய நந்தியின் மேலேறி
அமர்ந்திருப்பது
போல் காட்டப்படுகிறது. வினாயகர்
பார்வதியின் பிள்ளைதான் என்று
சொல்வார்கள்.
சிவத்தின் சக்தி அம்சமே குண்டலினியாகி
நம்
மூலாதாரத்தில் உறைகிறது. எனவேதான்
மூலாதாரத்தின் தேவதையாக கணபதியைக்
குறிப்பிடுவார்கள். வினாயகரின் உருவமே
யோகத்தை உணர்த்துவது என்பதை வினாயகர்
அகவல் மூலம் ஔவை நமக்கு
தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.
குண்டலினியானவளை உச்சிக்கு ஏற்றி
சிவத்தோடு கலக்கும் போது அமிர்தம்
உண்ணலாம். குண்டலினி உச்சியில்
இருக்கும்
போது உச்சியில் சிவதாண்டவம் காணலாம்.
எல்லாமே யோக விஷயங்களின்
குறிகாட்டிகளாகவே திகழ்கின்றன.
பாற்கடல்
நம் உடல், நம் முதுகுத் தண்டே மந்தாரமலை,
வாசி எனப்படும் சுவாசமே வாசுகி,
இடகலை,
பிங்கலை என்பது தேவர்கள், அசுரர்கள். வாசி
யோகத்தின் மூலம் தவம் செய்யும் போது
குண்டலினியானவள் மேலேரும் போது
முதலில் நமது பாவ வினைகள்தான்
மேலேறும். அது அனாகதம் வரும் போதே
அதாவது ஆத்ம லிங்க தரிசனம் காணும் போதே
இறையாற்றலோடு கலக்கும், அவ்வாறு
கலந்தால் எல்லா தவப் பலனும்
வீணாகிவிடும்
என்று குண்டலினி தேவியானவள் அதை
விசுத்திக்கு மேலேறாமல் தடுத்து
விடுவாள்.
விசுத்திக்கு மேலே பாவம் நீங்கிய சுத்த
சக்தியே சிவத்தோடு ஒன்று சேர்ந்து
சாதகனுக்கு அமிர்தம் கிடைக்கச்
செய்யும்.
பிரதோஷம் என்றால் பகல் முடிந்து
சூரியன்
அஷ்தமிக்கும் காலம் என்பார்கள். அதற்கு
இன்னொரு பொருளும் உண்டு. அதாவது
ஒடுங்கும் நேரம். எல்லா புலன்களும்
ஒடுங்கி
மகாசக்தி மேலேறும் நேரம்.
ஶ்ரீவித்யை மார்க்கத்தில் தோள்கண்டம்,
நீள்
கண்டம் என்று சொல்வார்கள்.
அண்டத்தையும்
, பிண்டத்தையும் இணைக்கும் கண்டமாகிய
தொண்டைப்பகுதியைக் குறித்து
சொல்வார்கள். பக்தர்களை இரட்சிக்கும்
படிக்கு
அவர்களது பாவமாகிய விஷத்தை சிவன்
ஏற்றுக் கொள்வார். ஆனால், மகா சக்தியானவள்
அது மேலேறினால் எல்லாம் கெடும் என்று
அதை கண்டத்தில் நிறுத்திவிடுவாள். ஆக
பிரதோஷ வேளையில் (ஒடுங்கும்
நேரத்தில்)நமது பாவங்களை சிவன் ஏற்றுக்
கொள்வார் என்றுதான் பிரதோஷமும். இதற்கு
முன்னால் ஒடுங்கியவர்களின்(நம்
முன்னோர்களின்) பாவத்தை ஏற்றுக்
கொண்டதற்கு நன்றி தெரிவிக்கும்
விதமாகவும். பூமியில் உள்ளவர்கள்
காலத்தை
அறிந்து கொள்ளும் பொருட்டு சந்திரனைத்
தேய்து வளரச் செய்து அருளியதற்காகவும்,
அவ்வாறு தேயும் போது அமாவாசையை
ஒட்டிய காலங்களில் ஏற்படும் பலவீனத்தை
சரி செய்வதற்காகவும், சிவராத்திரி பூஜை
எற்படுத்தப்பட்டது. நீங்கள் மேல்
நாடுகளில்
உள்ளவர்களைக் கேளுங்கள் பதிமூன்றாம்
நாள்,
அல்லது எண்ணைக் கண்டு பயப்படுவார்கள்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், நம்
முன்னோர்களுக்கும் அந்த நம்பிக்கை
இருந்தது. பதி மூன்றாவது நாளான(திதி)
அன்று பிரதோஷ வேளையில் பூமிக்கு
வானில் இருந்து விஷத்தன்மையும்,
தீயசக்திகளும் வருவதாக நம்பிக்கை
இருக்கிறது. அந்த வேளையில் பூஜை செய்து
உலகை காக்க வேண்டுவதே பிரதோஷபூஜை
என்றும். அந்த நேரத்தில் முறைப்படி
அதாவது
ஆகமவிதிப்படி கட்டப்பட்ட கோவிலில்
இருந்தால் அந்த விஷத்தன்மை உள்ள
தீயசக்தியின் பாதிப்பு ஏற்படாது என்ற
கருத்தும் நிலவுகிறது. எது எப்படியோ
எல்லா பாதைகளும் ரோமாபுரிக்கே
என்பதைப்போல வழிபாடுகளோ, யோகமோ
எதுவாயினும் பலன் இறைவனை அடைவதே.
என்ன சற்று முன் பின்னாக அமையும்.
சிவ இராத்திரி எதனால் என்று புராணக்
கதைகள் கேட்டிருக்கிறோம். ஒரு வேடன்
புலிக்கு பயந்து மரத்துக்கு மேலே ஏறி
அமர்ந்திருந்ததும், அது வில்வமரம் என்பதும்,
தூக்கம் வராமல் இருக்க ஒவ்வொரு
இலையாகப் பறித்து கீழே போட்டுக்
கொண்டிருக்க, அது கீழே இருக்கும் சிவ
லிங்கத்தில் விழுந்ததனால், அவனுக்கு சிவ
தரிசனம் கிடைத்தது, அதுவே சிவராத்திரி
எனக் கொண்டாடப்படுகிறது என்று கேள்விப்
பட்டிருக்கிறோம். நான் அந்தக் கதை
நடந்ததாகச் சொல்லப்பட்டுள்ள
கோவிலுக்குப்
போய் சிவராத்திரி அன்று தரிசனம்
செய்திருக்கிறேன். மற்றொரு புராணமும்
உண்டு. நான்கு முகம் கொண்ட அயனும்,
திருமாலும் தங்களுக்குள்
சொற்போரிட்டுத்
தன்னை தேடின பொழுது, சிவ பெருமான்
திருவுளம் கொண்டு மாசித் திங்கள்
பதினான்காம் நாள் திங்கட்கிழமை திரு
வோணம் கூடிய நல்லநாள் இராத்திரி
பதினான்கு நாழிகையில் மகேஷ்வர
மூர்த்தமாக அடியும் முடியும் காட்டாமல்
அவ்விருவருக்கும் காட்சி அளித்து,
விசாரிக்கும் போது, பிரம்ம தேவன் சிவனாரின்
திருமுடியைக் கண்டதாகப் பொய்யும்,
திருமாலானவர் திருஅடியைக் காணவில்லை
என்று மெய்யும் விளம்பினபடியால்,
நான்முகனுக்கு கோவிலே இல்லாமல் போவது
என்ற சாபமும், திருமாலுக்கு காத்தற்
சிறப்புரிமை உண்டாகக் கடவது என்று
வாழ்த்தும் அருளினதன்றி, அக்காட்சி ஒரு
மூன்றேமுக்கால் நாழிகை அளவு விளங்கி
மற்ற தேவர்கள் எல்லோரும்
கண்டுள்ளமையால், லிங்கோற்பவ காலமோந
முகூர்த்தம் என்றும், இராத்திரியில் பரமசிவன்
மகேஷ்வர மூர்த்தமாகத் தோன்றினபடியால்
சிவராத்திரி என்றும் பெயர் பெற்றது.
வேடனானவன் இதே நாளில் வில்வத்தால்
சிவபெருமானை அர்ச்சித்ததால் சிவ
தரிசனம்
பெற்றான் என்பதே உண்மையாகும். ஆனால்,
இதற்குப் பின்னால் விஞ்ஞான ரீதியான
காரணம்
உள்ளது என்பது பலருக்குத் தெரியாது.
பொதுவாக ஒவ்வொரு அமாவாசை,பௌர்ணமி
அதற்கு முன் பின் தினங்களில் பூமியில்
சந்திரனுடைய காந்த சக்தியில் மாற்றம்
ஏற்பட்டு சகல விதமான ஜீவராசிகளும்
மனநிலைத் தடுமாற்றத்திற்கு ஆளாகி,
அந்த
நேரத்தில் உதிக்கும் எண்ணங்களினால்
செயல்படும் செயல்களின் விளைவாகத்
துன்பங்களை அனுபவிக்கின்றனர். இது
அவர்களை அறியாமலேயே ஒவ்வொரு
மாதமும் நடந்து கொண்டிருக்கிறது.
காரணம்
என்ன வென்றால் சந்திரன் மனோகாரகன்.
மனதையும் அதன் எண்ணங்களையும்
ஆள்பவன். மனநோயாளிகள் அமாவாசையை
ஒட்டிய நாட்களில் அதிகத் துன்பத்திற்கு
ஆளாவதும் இதனால்தான். மேற்படி
நாட்களில்
வியாதியின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
இது
அனுபவத்தில் நாம் எல்லோருக்கும்
தெரிந்த
விஷயம். சாதாரணமானவர்களுக்கு மேற்படி
நாட்களில் ஞாபகமறதி, அலர்ஜி, டென்சன்(மன
அழுத்தம்), ஜீரண சக்திக் குறைபாடு
போன்றவைகளால், சோர்வு, தூக்கமின்மை,
அதிக உஷணம் போன்ற துன்பங்கள் ஏற்படும்.
இன்றைய நடைமுறை வாழ்க்கைச் சூழலில்
இதை உணராமல் நாம் வாழந்து பழகிக்
கொண்டோம். நம் முன்னோர்கள் இதைப்
புரிந்து கொண்டதால், அமாவாசை மற்றும்
பௌர்ணமியை ஒட்டிய நாட்களில் மன
வலிமையையும், அறிவின் விழிப்பாற்றலைத்
தூண்டவும் மன ஒருமை மற்றும் உடல்
இயக்கங்களில் நிதானத்தைக் கொண்டு
வரவும்
விரதம் மற்றும், பூஜைகள், தியானம்
போன்றவற்றைக் கடை பிடித்தார்கள்.
மாதாந்திர
வளர்பிறை, தேய்பிறை இரண்டிலும் வருகின்ற
ஏகாதேசி திதிகளில் குறைவான உணவுப்
பழக்கத்தை கை கொள்வார்கள். துவாதேசித்
திதிகளில் கிழங்கு உணவு வகைகளைத்
தவிர்த்து, உப்பைக் குறைத்து, கீரை
வகைகளை அதிகமாகச் சேர்ப்பார்கள்.
திரியோதிசி நாட்களில் உணவில் எண்ணெயை
நீக்கி, இனிப்பை சொஞ்சம் சேர்த்து மதியம்
1.30 மணிக்குள் உண்பார்கள். சதுர்தசி
திதிகளில்(மாத சிவராத்திரி) மதிய உணவு
அரை வயிறும் இரவு பால் பழம் உணவாகக்
கொள்வார்கள். சிலர் சிவ சிந்தனையில்
இருந்து பூஜை, அபிஷேக ஆராதனைகளைச்
செய்வார்கள், யோக சாதகர்கள் தியானம் மேற்
கொள்வார்கள். மாத சிவராத்திரியில்
நடுச்சாமம்(இரவு 12.00 மணி) வரை
விழித்திருந்து ஈசனை நினைத்து பூஜைகளோ,
தியானமோ மேற்கொள்வார்கள். அதற்குப்
பிறகு
ஓய்வு எடுப்பார்கள். இவ்வாறாக
சிவராத்திரி
பூஜையினை மாமாங்க வழிமுறையாகச்
செய்து வந்து 12 வது மாதம் வருகிற மஹா
சிவராத்திரி(சூரியன் சந்திரனின்
வீட்டுக்கு
எட்டாவது வீட்டில் சஞ்சரிக்கும் காலம்)
அன்று
இரவு முழுவதும் கண்விழித்து ஈசனை
மனதில் நிறுத்தி சிவ பூஜையினைச் செய்து
மாமாங்க பூஜையினை நிறைவு செய்வார்கள்.
அதாவது சரியை வழியில் உள்ளவர்கள்
பூஜைகள் விரதங்கள். கிரியை வழியில்
உள்ளவர்கள் இரவில் தூங்கிவிடும்
அறிவைத்
தூங்காமல் விழிப்பு நிலையில் இருக்கச்
செய்வது(தியானம்). இதைக்
கடைபிடிப்பதால்
உடல்நலமும், மனவளமும் காக்கப்படும். சைவ
சமய ஆகமங்களில் சிவராத்திரி ஆகம
வழிமுறைகள், கால வரையறை, பூஜைமுறை
என்று விரிவான விளக்கங்கள்
கூறப்பட்டுள்ளன. பக்தியும், பூஜைகளும்,
விரதங்களும், தியான யோகங்களும் எல்லாமே
ஈசனை அடைவதற்குத்தான். அதற்கு உடல்
நலமும், மனவளமும் அவசியம் என்பதைக்
கருத்தில் கொண்டே இத்தகைய நுட்பமான
விரத முறைகள் நம் முன்னோர்களால்
தரப்பட்டிருக்கிறது. அதை அவர்கள்
இந்தப்
பிபஞ்ச சக்தியின் இயக்கத்தை ஒட்டியே
வடிவமைத்துத் தந்திருக்கிறார்கள்
என்பதை
யோசித்துப் பார்க்கும் போது அவர்களின்
விஞ்ஞான அறிவு குறித்து ஆச்சரியம்
தோன்றுகிறது. மேலும் மெய்ஞானத்தின் ஒரு
சிறு பகுதியே விஞ்ஞானம் என்பதுவும்
புலனாகிறது.
அதற்காக நம்மைத் தயார்படுத்திக்
கொள்ளும்
நாளே சிவராத்திரி. இந்த விரதத்தை
பொருள்
உணர்ந்து அனுஷ்டித்து சிவன் அருள்
பெறுவோம்!

 

நன்றி : வாட்ஸ்ஆப் குழு

உங்கள் கருத்தை தெரிவிக்க