இது நிஜ உண்ணாவிரதம் : ஊழல் ஒழிய சட்டம்?
தமிழ்நாட்டில் உண்ணாவிரதம் என்றால் என்னவென்றால் காலை உணவை முடித்து மதியம் சாப்பிடுவதற்கு முன்பு வரை தனது ஆதரவாளர்களை திரட்டி ஒன்றாக சேர்ந்து கொஞ்ச நேரம் பந்தலிட்டு செலவிடுவது. இதனை பல முறை தமிழகத்தின் மூத்த தலைவர் செயல்படுத்தி காட்டி உள்ளார். இலங்கை தமிழர் பிரச்னை, காவேரி பிரச்னை அனா பலவற்றையும் எவ்வளவு சுமுகமாக இதன் மூலம் நம்மவர்கள் முடித்து இருக்கிறார்கள் தெரியுமா?
இவர் உண்ணாவிரதம் இருப்பார் , சிறிது நேரத்தில் போன் வரும், பிரச்னை தீர்க்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என உரிஹி அளித்து இருப்பதால் இத்துடன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக அறிவிப்பு வெளியாகும். இவ்வளவு தான் இதுநாள் வரை நமக்கு தெரிந்த உண்ணாவிரதம்.
ஆனால் இப்போது தான் நிஜமான உண்ணாவிரதம் என்றால் என்ன என்று ஒரு பெரியவர் மூலம் தெரிந்து கொள்கிறோம். இதனை நம்மவர்கள் சட்டை செய்ய மாட்டார்கள் ஏனென்றால் அவர்களுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்யவே நேரம் போதவில்லை.
ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா கோரி சமூக சேவகர்.அண்ணா ஹசாரே தொடர்ந்து மூன்றாவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
உண்ணாவிரதம் குறித்துப் பேசிய அவர், தன்னால் நிச்சயம் ஒருவாரம் நலமுடன் இருக்க முடியும் என்பதால் தனது உடல்நிலை குறித்து மக்கள் கவலைப்பட வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
சிறிதளவு மட்டுமே பலவீனமாக உணர்கிறேன். 1.5 கிலோ எடை குறைந்துவிட்டது. கடவுள் என்னுடன் இருக்கிறார். அவர் காப்பாற்றுவார் என ஹசாரே குறிப்பிட்டார்.
மிரட்டல்கள் இருந்தாலும் உண்மையை ஒருபோதும் கைவிடக்கூடாது. 12 நீதிமன்ற வழக்குகளை நான் சந்தித்திருக்கிறேன், எனக்காக பணம் வாங்காமல் வாதாடும் வழக்கறிஞர்கள் உள்ளனர். உண்மையை ஒருபோதும் நாம் கைவிடக்கூடாது என ஹசாரே கூறினார்.
ஹசாரேயின் உண்ணாவிரதம் தவறான பாதை என காங்கிரஸ் கூறியுள்ளது குறித்து கருத்து தெரிவித்த ஹசாரே, நேற்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஒருவர் உண்ணாவிரதம் மேற்கொள்வது ஒரு தவறான பாதை எனக் கூறியுள்ளார். மகாத்மா காந்தி உண்ணாவிரதம் இருந்தபோது அவர் பிறந்திருப்பார் என நான் நினைக்கவில்லை. உண்ணாவிரதப் போராட்டம் கடைசி போக்கிடமாக பயன்படுத்தப்படுகிறது எனத் தெரிவித்தார்.
மற்றவர்களை போல தன்னோடு சேரும் எல்லோரையும் சேர்த்து கொள்ளாமல் அரசியல்வாதிகளுக்கு “NO” சொல்லி சபாஷ் வங்கி இருக்கும் ஹசாரே தன் பின்னால் மெல்ல ஒரு கூட்டத்தை உருவாக்குகிறார்.
நிச்சயம் இவையெல்லாம் சேர்ந்து ஒரு மறுதலை உண்டாக்கும் என என் மனம் விழைந்தாலும் நான் என் செய்வேன்?