சரோ

எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம், அதனால் வ௫ம் பலன்கள்.

  • Categories: பகிர்வு, வரலாறு, வாட்ஸ்ஆப் பகிர்வு
*விபூதி* எந்தெந்த விரல்களால் *விபூதியை* தொடலாம்? எந்தெந்த விரல்களால் விபூதியை தொடக்கூடாது? கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும்போது, அங்கே அர்ச்ச‍கர் நமக்கு விபூதியும் குங்கும்மும் அளிப்பார். அப்ப‍டி அளிக்க‍ப் படும் விபூதியை வாங்கி நெற்றியில் இடும்போது, நாம் அதை எப்ப‍டி, எந்தெந்த‌ விரல்களால் எடுத்து நெற்றியில் இடுகி றோம் என்பதை நம்மில் பலருக்கு தெரிவதில்லை. விபூதியை எடுக்க‍ சில‌ விரல்களை பயன் படுத்தும் போதும் தீமையும், சில விரல்க ளை பயன்படுத்தும்போது அதீத நன்மைக ளும் ஏற்படும். ஆகவே விபூதியை எடுக்கும்போது, கீழே குறிப்பி ட்டுள்ள‍ வரிகளில் உள்ள‍ முறைகளை பயன்படுத்தி, மிகவும் கவனமாக எடுத்து அணியவேண்டும். *கட்டை விரல்* கட்டை விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் தீராத வியாதி வரும். *ஆள் காட்டி விரல்* ஆள் காட்டி விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் – பொருட் கள் நாசம். *நடுவிரல்* நடுவிரலால் விபூதியை தொட்டு இட்டுக்கொண்டால் அணிந்தா ல் நிம்மதியின்மை. ... Read more

இஞ்சியினால் பெரும் நன்மைகள்

இஞ்சியை பற்றிய சில குறிப்புகள்; # இஞ்சி பூ பூக்கும் தாவர வகையை சேர்ந்தது,இஞ்சி நிறைய மருத்துவ குணங்கள் உடைய ஒரு உணவுப் பொருள். # இஞ்சியை பல கோணங்களில் பொடி,எண்ணெய்,சாறு,சுக்கு,இஞ்சி போன்ற வடிவில் உபயோகித்து வருகிறோம். # இதில் உள்ள  ஜிஞ்சரால் இஞ்சிக்கு நறுமணத்தையும் ,சுவையையும் தருகிறது. # இஞ்சி உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இஞ்சியின் பயன்கள்  # இஞ்சிக்கு மிக நீண்ட வரலாறு உண்டு.இஞ்சி ஜீரண கோளாறுகளை நீக்கி,ஜீரண உறுப்புகளை உறுதியாக்கி,செரிமானத்திற்கு உதவி புரிகிறது. # மேலும் சளி,காய்ச்சல்,வாந்தி போன்றவற்றிற்கு மருந்தாகிறது. # கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி,குடல் உபாதைகள்,புற்றுநோய் உள்ளவர்களுக்கு ஏற்படும் வாந்தி,போன்றவற்றிலிருந்து இஞ்சி தடுக்கிறது. # தினமும் காலையில் இஞ்சி சாருடன் தேன் கலந்து சாப்பிடுவது மிகவும் நல்லது. # இஞ்சியை பற்றிய ஒரு ஆய்வில் இஞ்சி தினமும் 2 கிராம் எடுத்துகொண்டால்,படிப்படியாக உடல்வலி குறையும் என்கிறார்கள்.இஞ்சி உடல் வலிக்கு மட்டும் உடனடி ... Read more

முடி உதிர்வதற்கான சிகிச்சை

ஒரு நாளைக்கு சாதரணமாக 80-100 முடி உதிர்வது வழக்கமே.ஆனால் அதற்கும் மேலாக முடி உதிர்ந்தால் அது கவலைக்குரியது,மற்றும் கவனிக்க வேண்டிய விஷயம். முடி உதிரக் காரணம் என்னவாக இருக்கும் பார்ப்போமா ? இரத்த சோகை,சரியாக உணவு உட்கொள்ளாதிருத்தல்,ஊட்டச்சத்து குறைபாடு,ஹேர் கலரிங்,ஷாம்பூ மாற்றி மாற்றி உபயோகித்தல்,தலைக்கு எண்ணெய் தடவாமலிருப்பது,தைராய்டு,புரோட்டீன் குறைபாடு,மெனோபாஸ்,குறிப்பிட்ட மருந்து வகைகள்,சுற்றுப்புற சூழல்,இன்னும் பல காரணங்கள் உள்ளன. முடி உதிர்வதற்க்கான தீர்வுகள்; கற்றாழை கற்றாழை முடி வளர்ச்சியை அதிகரிப்பதோடு , தேவையான ஊட்டச்சத்தையும் முடிக்கு அளிக்கிறது.கற்றாழையில் உள்ள என்சைமேஸ் மற்றும் ஆல்கலின் முடி வளர ஊக்கமளிக்கிறது. *கற்றாழையின் சாறு மற்றும்ஜெல் இரண்டுமே தலைக்கு குளிர்ச்சியை தருகிறது.பொடுகு,தலையில் கட்டி,புண்,எரிச்சல்,போன்றவற்றை நீக்கி முடிக்கு ஊட்டமளித்து முடிவளரச்செய்கிறது. *கற்றாழை சாற்றை தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்து,சில மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.இவ்வாறு வாரம் மூன்று முறை குளித்தால் முடி உதிர்வது குறையும். *நன்றாக முடி வளர கற்றாழை சாற்றை ஒரு ... Read more

குழந்தைகளுக்கான முளைகட்டிய தானிய சூப்

தானிய சூப் மிகவும் ருசியான சத்துள்ள சூப்,இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது. *குழந்தைகள் மட்டுமல்லாமல்,அனைவரும் குடிக்கலாம்.இது குடிப்பதன் மூலம் நன்றாக பசி எடுக்க தூண்டும்.சாப்பிடுவதற்கு 15 நிமிடத்திற்கு முன் குழந்தைகளுக்கு கொடுத்தால் நன்றாக சாப்பிடுவார்கள். *புரோட்டின் அதிகம் கொண்டுள்ள சூப். தேவையான பொருட்கள்; இஞ்சி பூண்டு பேஸ்ட்-1/4 தேக்கரண்டி முளைகட்டிய தானியங்கள் கலவை (அல்லது)ஏதாவது ஒரு தானியம் -1 கப் பீன்ஸ்,உருளைக் கிழங்கு,கேரட் -1/4 கப் நெய்-2 தேக்கரண்டி கொத்தமல்லி-சிறிதளவு வெங்காயம்-1/4 கப் லவங்கம்-4 உப்பு-தேவையான அளவு நீர் -3 டம்ளர் தயாரிக்கும் நேரம்;25நிமிடம் செய்முறை; *ஒரு குக்கரில் நெய் ஊற்றி ,நெய் உருகியவுடன் லவங்கம் மற்றும் வெங்காயத்தை சேர்க்க வேண்டும். *வெங்காயம் சிவந்ததும் நறுக்கி வைத்துள்ள காய்களை கொட்டி இரண்டு,மூன்று முறை கிளற வேண்டும். *பின் முளைகட்டிய தானியத்தை சேர்த்து ஒரு முறை கிளறி,தண்ணீர் ஊற்ற வேண்டும். *தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி வைக்க வேண்டும். *4 ... Read more

அச்சச்சோ கருவளையமா,இத படிங்க

கண்ணை சுற்றி கருவளையம் வர காரணம் என்னவாக இருக்கும்? தூக்கமின்மை ,ஊட்டச்சத்து குறைபாடு,சிகிரெட்,குடிப்பழக்கம்,வயது முதிர்ச்சி, மன உலைச்சல் ,மாதவிடாய் தொடர்ச்சியின்மை,நாள் முழுக்க லைட் வெளிச்சத்தில் இருந்தாலும் கண்ணைச் சுற்றி கருவளையம் வரும். கருவளையம் போக்க வழிமுறைகள்: Close up of woman’s eyes *புதினா சாறு எடுத்து கண்ணைச் சுற்றி தடவி 5 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கருவளையம் மறையும். *பன்னீரில் சிறிது பஞ்சு எடுத்து நனைத்து அதை கண்ணை சுற்றி மென்மையாக ஒற்றி எடுக்க வேண்டும்.இப்படி வாரம் மூன்று முறை செய்தால் கருவளையம் மறையும். *படுக்க போகும்முன் பாதாம் எண்ணெயை கருவளையத்தின் மீது தடவிக்கொண்டு படுக்க வேண்டும்.ஒரு வாரம் தொடர்ந்து செய்தால் கருவளையம் தன்னால் மறையும். *ஆலிவ் ஆயில் மற்றும் பேபி ஆயிலை கொண்டு மசாஜ் செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும். *உருளைக்கிழங்கு சாறு எடுத்து கண்ணில் தடவி ... Read more

மஞ்சள் தூளின் மகத்துவம்

மஞ்சள் தூள் ஒரு சிறந்த கிருமி நாசினியாகவும்,நோய் தொற்று ஏற்படாமலும் சருமத்தை பாதுகாக்க வல்லது.இது சருமத்தை சுத்தமானதாகவும்,வலுவுள்ளதாகவும் ஆக்குகிறது. மஞ்சள் தூளை உணவில் பயன்படுத்துவதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து,சளி,டான்சில்ஸ் மற்றும் சுற்றுப்புற சூழலால் ஏற்படக்கூடிய தொற்றிலிருந்தும் பாதுகாக்கிறது. மஞ்சள் தூளின் சில அழகு குறிப்புகளை இங்கே காணலாம்; *சிறிதளவு வெண்ணையுடன்,மஞ்சள் தூள் சேர்த்து குளிக்க போகும்முன் முகம்,மற்றும் கை,கால்களில் முழுவதும் பூசி 20 நிமிடம் கழித்து குளித்தால் சருமம் பொலிவுடன் காணப்படும். (அல்லது) *பாலுடன்,மஞ்சள் சேர்த்து உடலில் பூசி குளித்தால் சருமம் பளபளப்பாக இருக்கும். *மோருடன் ,மஞ்சள் தூளை சேர்த்து முகம் மற்றும் கழுத்தில் பூசி குளிர்ந்த நீரால் கழுவ முகத்தில் உள்ள சுருக்கங்கள் குறையும். *மஞ்சள்,எலுமிச்சை சாறு,வெள்ளரி சாறு சேர்த்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் பூசி குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும். *கற்றாழை சாருடன்,மஞ்சள் தூள் ... Read more

கோடையில் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்

கோடையில் கவனத்துடன் சருமத்தை பராமரித்தாலே போதும் அழகான சருமத்தை பெறலாம். எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் நிறத்தை மெருகேற்ற இயற்கை முறை பெரிதும் உதவியாக இருக்கும். சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும் சருமத்தில் ஈரப்பதம் குறைந்தால் சருமம் வறண்டும்,முகத்தில் சுருக்கங்களும் காணப்படும்.உங்களின் சருமம் எண்ணெய் பசையுள்ளதாக இருந்தால்,எண்ணெய் பசையற்ற மாயிஸ்ச்சரைசர் பயன்படுத்துங்கள்.மேலும் மாயிஸ்ச்சரைசர் வைட்டமின் E உள்ளதாகவும்,இயற்கை எண்ணைகளை கொண்டதாகவும் இருக்க வேண்டும்,இது நிறத்தை அழகாகவும் நிறத்தை வெண்மையுடனும் தோன்ற செய்யும். நீர்ச்சத்துக்கள் குறிப்பிட்ட காய்கறி,மற்றும் பழங்கள் உங்கள் சருமத்தில் உள்ள செல்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கின்றன.காரம் மற்றும் எண்ணெய் பலகாரங்களை தவிர்க்க வேண்டும். அதிகப்படியான நீர் நிறைந்த காய்கறிகள் எடுத்துக்காட்டாக தர்பூசணி,ஆரஞ்சு,வெள்ளரிக்காய்,வெங்காயம்,கீரை வகைகள்,இவையனைத்தும் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை அளிப்பதுடன் சருமம் வறண்டு போகாமலும் பாதுகாக்கிறது. வீட்டிலிருந்தபடியே அழகான சருமம் பெறலாம் *வெள்ளரிக்காய் இயற்கையாகவே பிளீச்சிங் தன்மையை கொண்டது,வெள்ளரி சாறு சருமத்தில் பூசி 20 நிமிடம் கழித்து கழுவினால்,சருமம் மென்மையாக ... Read more

தினமும் புற்றுநோயால் 50 குழந்தைகள் இந்தியாவில் இறக்கின்றனர் ;ஆய்வின் முடிவு

0-14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் போதிய சிகிச்சை இல்லாததால் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறக்கின்றனர் என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. குளோபல் ஆன்காலஜி இதழில் வெளியான ஆய்வு முடிவின் படி,குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள அதாவது இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குழைந்தை பருவத்திலே புற்றுநோயை தடுக்க முயற்சிகள் பொது சுகாதார நிகழ்ச்சியின் மூலமாக மேற்கொள்ள வேண்டுமென்றும்,அல்லது தரமான சிகிச்சையின் மூலம் நோயை குணப்படுத்தலாம் என்கிறது. வளர்ந்துவிட்ட நாடுகளில் 80%-க்கும் மேற்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தரமான சிகிச்சையின் மூலம் குணப்படுத்தப்படுகிறார்கள் என தெரிய வந்துள்ளது.

தெறி-ஒரு மில்லியனுக்கும் மேல் வசூலில் சாதனை

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த திரைப்படம் தெறி.வெளியான ஆறே நாட்களில் 100 கோடியை வசூலித்தது. நடிகர் விஜயின் ட்விட்டர் பக்கத்தில் …விஜயின் துப்பாக்கி மற்றும் கத்தி படம் வெளிநாடுகளில் 100 கோடி வசூலித்தது,தெறி இந்த வரிசையில் மூன்றாவது படம் எனவும்,இயக்குனர் அட்லி ,ஜி.வி.பிரகாஷ் மற்றும் விஜயின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு சுவரொட்டி பகிர்வு செய்யப்பட்டுள்ளது , அதில் தெறி திரைப்படம் வட அமெரிக்கா மற்றும் கனடாவிலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமாக வசூலில் சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. விஜய் ரசிகர்களுக்கு மற்றுமோர் இன்பச்செய்தி; விஜயா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பரதன் இயக்கத்தில் மே 2-ம் தேதி விஜயின் புதிய படம் தொடங்குகிறது.இதில் கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்திலும்,ஜகபத் பாபு,டேனியல் பாலாஜி,சதீஷ் போன்றோர் நடிக்க வுள்ளனர்.இன்னும் படத்திற்கு பெயர் வைக்கப்படவில்லை.

வெற்றிவேல் -திரை விமர்சனம்

ஒரு தயாரிப்பாளராக சசிகுமார் பார்முலாவை பின்பற்றுகிறாரோ இல்லையோ,ஒரு நடிகனாக தன்னுடைய கதாபாத்திரத்தில் அவர் எப்போதும் குறை வைத்ததில்லை. கிராமத்து கதைக்களத்துடன் ,பாசம்,காதல்,குடும்பம்,என கிராமத்து மண்வாசனையையும் இணைத்திருக்கிறார்,இயக்குனர் வசந்தமணி.விவசாயத்துறை அதிகாரியாக வரும் மியா ஜார்ஜுக்கும்,உரக்கடை நடத்தி வரும் சசிகுமாருக்கும் காதல் மலர்கிறது. ஊர் பஞ்சாயத்து தலைவரான பிரபுவின் மகளை சசிகுமார் தம்பி காதலிக்க,தம்பியின் காதலுக்கு உதவ,பெண்ணை கடத்த ஒரு திட்டத்துடன் நாடோடிகள் கும்பலை கதை களத்தில் இறக்குகிறார்கள்.அனால் கடத்தவேண்டிய பெண் மாறிப்போய்,சசிகுமார் அந்த பெண்ணை திருமணம் செய்ய நேர்கிறது.இதனையடுத்து மியா ஜார்ஜுக்கும் சசிகுமருக்கும் இடையேயான காதல் என்னானது என்பதுதான் கதை. பிரபுவின் நடிப்பு படத்திற்கு சிறப்பு,தம்பி ராமையா காமெடியில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்.சசிகுமாருக்கு அவருக்கே உரித்தான வசனங்கள் இடம்பெற்று படத்திற்கு உயிரூட்டியுள்ளது.நாயகி மியா ஜார்ஜ் நடிப்பிலும்,அழகிலும் அசத்தியிருக்கிறார். வசனங்கள் படத்தின் கூடுதல் பலம்.குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய திரைப்படம்,வெற்றிவேல் ….,வெற்றிகரமான வேல்.