இஞ்சியினால் பெரும் நன்மைகள்

இஞ்சியை பற்றிய சில குறிப்புகள்;

# இஞ்சி பூ பூக்கும் தாவர வகையை சேர்ந்தது,இஞ்சி நிறைய மருத்துவ குணங்கள் உடைய ஒரு உணவுப் பொருள்.

# இஞ்சியை பல கோணங்களில் பொடி,எண்ணெய்,சாறு,சுக்கு,இஞ்சி போன்ற வடிவில் உபயோகித்து வருகிறோம்.

# இதில் உள்ள  ஜிஞ்சரால் இஞ்சிக்கு நறுமணத்தையும் ,சுவையையும் தருகிறது.

# இஞ்சி உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.

இஞ்சியின் பயன்கள் 

# இஞ்சிக்கு மிக நீண்ட வரலாறு உண்டு.இஞ்சி ஜீரண கோளாறுகளை நீக்கி,ஜீரண உறுப்புகளை உறுதியாக்கி,செரிமானத்திற்கு உதவி புரிகிறது.

# மேலும் சளி,காய்ச்சல்,வாந்தி போன்றவற்றிற்கு மருந்தாகிறது.

# கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி,குடல் உபாதைகள்,புற்றுநோய் உள்ளவர்களுக்கு ஏற்படும் வாந்தி,போன்றவற்றிலிருந்து இஞ்சி தடுக்கிறது.

# தினமும் காலையில் இஞ்சி சாருடன் தேன் கலந்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

# இஞ்சியை பற்றிய ஒரு ஆய்வில் இஞ்சி தினமும் 2 கிராம் எடுத்துகொண்டால்,படிப்படியாக உடல்வலி குறையும் என்கிறார்கள்.இஞ்சி உடல் வலிக்கு மட்டும் உடனடி தீர்வு கொடுப்பதில்லை.

# இது காயங்களில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியையும் குறைக்கிறது.

# சர்க்கரை நோயாளிகள் இஞ்சி தினமும் 2 கிராம் பொடியாக எடுத்துக்கொண்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் இதய நோயிலிருந்து இஞ்சி பாதுகாக்கிறது.

#நீண்ட நாளாக இருக்கும் வயிற்று வலிக்கு இஞ்சி ஒரு அறிய மருந்து. இஞ்சி சாறு குடித்த 15 நிமிடத்திற்குள் வயிறு சுத்தமாகி நன்றாக பசி எடுக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

# பெண்களுக்கு மாதவிடாயின் போது வரும் வயிறு வலிக்கு இஞ்சி மருந்தாக பயன்படுகிரது.

#இரத்ததில் உள்ள கொழுப்பின் அளவை இஞ்சி குறைப்பதாகவும்,இதனால் இரத்ததில் உள்ள LDL lipoprotein அதாவது மாரடைப்பை ஏற்ப்படுத்தக்கூடிய கெட்ட கொழுப்பை இஞ்சி நீக்குவதாகவும் ஒரு ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.

# இஞ்சி மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது.இதனால் மூளையில் ஏற்படக்கூடிய அல்சீமர் நோயிலிருந்து மூளையை பாதுகாத்து மூளைக்கு சுறுசுறுப்பை அளிக்கிறது.

# புற்றுநோயிலிருந்து தடுக்கிறது.

# சுற்று சூழலினால் ஏற்படக்கூடிய தொற்றுகளிளிருந்து உடலை பாதுகாத்து ஒரு கவசம் போல் செயல்படுகிறது இஞ்சி.