மருத்துவம்

இஞ்சியினால் பெரும் நன்மைகள்

இஞ்சியை பற்றிய சில குறிப்புகள்; # இஞ்சி பூ பூக்கும் தாவர வகையை சேர்ந்தது,இஞ்சி நிறைய மருத்துவ குணங்கள் உடைய ஒரு உணவுப் பொருள். # இஞ்சியை பல கோணங்களில் பொடி,எண்ணெய்,சாறு,சுக்கு,இஞ்சி போன்ற வடிவில் உபயோகித்து வருகிறோம். # இதில் உள்ள  ஜிஞ்சரால் இஞ்சிக்கு நறுமணத்தையும் ,சுவையையும் தருகிறது. # இஞ்சி உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இஞ்சியின் பயன்கள்  # இஞ்சிக்கு மிக நீண்ட வரலாறு உண்டு.இஞ்சி ஜீரண கோளாறுகளை நீக்கி,ஜீரண உறுப்புகளை உறுதியாக்கி,செரிமானத்திற்கு உதவி புரிகிறது. # மேலும் சளி,காய்ச்சல்,வாந்தி போன்றவற்றிற்கு மருந்தாகிறது. # கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி,குடல் உபாதைகள்,புற்றுநோய் உள்ளவர்களுக்கு ஏற்படும் வாந்தி,போன்றவற்றிலிருந்து இஞ்சி தடுக்கிறது. # தினமும் காலையில் இஞ்சி சாருடன் தேன் கலந்து சாப்பிடுவது மிகவும் நல்லது. # இஞ்சியை பற்றிய ஒரு ஆய்வில் இஞ்சி தினமும் 2 கிராம் எடுத்துகொண்டால்,படிப்படியாக உடல்வலி குறையும் என்கிறார்கள்.இஞ்சி உடல் வலிக்கு மட்டும் உடனடி ... Read more

தினமும் புற்றுநோயால் 50 குழந்தைகள் இந்தியாவில் இறக்கின்றனர் ;ஆய்வின் முடிவு

0-14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் போதிய சிகிச்சை இல்லாததால் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறக்கின்றனர் என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. குளோபல் ஆன்காலஜி இதழில் வெளியான ஆய்வு முடிவின் படி,குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள அதாவது இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குழைந்தை பருவத்திலே புற்றுநோயை தடுக்க முயற்சிகள் பொது சுகாதார நிகழ்ச்சியின் மூலமாக மேற்கொள்ள வேண்டுமென்றும்,அல்லது தரமான சிகிச்சையின் மூலம் நோயை குணப்படுத்தலாம் என்கிறது. வளர்ந்துவிட்ட நாடுகளில் 80%-க்கும் மேற்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தரமான சிகிச்சையின் மூலம் குணப்படுத்தப்படுகிறார்கள் என தெரிய வந்துள்ளது.

ஆரஞ்சு பழத்தில் இவ்வளவு நன்மையா?

ஆரஞ்சு மரங்கள் பெரும்பாலும் வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டலங்களில் வளர்கிறது.பதபடுத்தாமல் அப்படியே உண்ணக்கூடிய ஒரு வகையான புத்துணர்ச்சி ஊட்டக்கூடிய பழம் ஆரஞ்சு.இனிப்பு மற்றும் புளிப்பு வகை ஆரஞ்சுகளில் இருந்து 70 சதவீத சிட்ரஸ் தயாரிக்கபடுகிறது. ஆரஞ்சு எனும் பெயர் சமஸ்கிருதத்திலிருந்து வரையறுக்கப்பட்டது.ஆனால் சிலர் திராவிட மொழியிலிருந்து வந்தது எனவும் கூறுகின்றனர். மற்ற சிட்ரஸ் பழங்களைக்காட்டிலும் ஆரஞ்சு பழத்தில் அதிகளவு வைட்டமின்-C உள்ளது,ஆரஞ்சு பழத்தில் 64 சதவீத தினசரி வைட்டமின்கள் கிடைக்கிறது. அசிடிட்டி, சிட்ரஸ் பழங்களில் ஆரஞ்சு அசிடிக் தன்மையுடையது.இதன் PH மதிப்பு 2.9 லிருந்து 4.0 வரை, வரலாறு ஆரஞ்சு முதலில் சீனாவின் வடபகுதியிலும்,இந்தியாவின் தென்கிழக்கு பகுதியிலும்,ஆசியாவின் வடகிழக்கு பகுதியிலும் பயிரிடப்பட்டது. 2500 வருடங்களுக்கு முன்னரே இது சீனாவில் கண்டெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆரங்சு பழத்தில் உள்ள அசிடிட்டி தன்மையால் இது விரைவில் கெடாது.இதில் உள்ள வைட்டமின் C ஸ்கர்வி நோயிலிருந்து தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி ஆரஞ்சில் உள்ள வைட்டமின் C ... Read more

தாய்ப்பால் மற்றும் குழந்தையின் நலன்

தாய்ப்பாலானது குழந்தையின் உடல் நலத்தை அதிகரிப்பதுடன், வேறு நோய்கள் ஏற்படாமல் பாதுகாப்பதுடன், உடல் நலம் உணவுக்கான மேலதிக செலவுகளையும் குறைக்கிறது.குழந்தைகளுக்கு வழங்கப்படக் கூடிய உணவுகளிலேயே மிகவும் உடல்நலம் பேணக்கூடிய உணவு தாய்ப்பாலேயாகும். உலக சுகாதார அமைப்பும்,அமெரிக்க குழந்தை நல மருத்துவ அகாடமியும் (American Academy of Pediatrics AAP) குழந்தை பிறந்து 6 மாதங்களுக்கு தனித் தாய்ப்பாலூட்டல் சிறந்தது என்பதை வலியுறுத்துவதுடன், அதன் பின்னர் கடைசி ஒரு ஆண்டுக்கு, முடிந்தால் 2 ஆண்டுகள் வரை (அல்லது அதிகமாகவோ) மேலதிகமாக செயற்கை உணவூட்டலுடன் சேர்த்து தாய்ப்பாலூட்டலையும் செய்வதற்கு அறிவுறுத்துகின்றன[. பிறந்த குழந்தை தாயின் உடலிலிருந்து வெளியேறி, பாதுகாப்பற்ற வெளிச்சூழலை எதிர்கொள்ளும் வேளையில், சூழலில் இருந்து குழந்தையைப் பாதுகாக்க, தாய்ப்பாலில் இருந்து பெறப்படும் பிறபொருளெதிரி உதவும். இந்த பிறபொருளெதிரிகள் பல நுண்ணுயிர்களைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டிருப்பதனால், பல தொற்றுநோய்களிலிருந்து குழந்தைக்கு பாதுகாப்பளிக்கும். தாய்ப்பாலானது அமீபா நுண்ணுயிர் தாக்கத்திலிருந்து பாதுகாப்பளிக்கக் கூடிய பித்த உப்பு ... Read more

உடலை குளுமையாக வைத்துக்கொள்ள

அதிகமாக தண்ணீர் குடியுங்கள் உடல் அதிகமான உஷ்ணத்தை பெறும் நேரத்தில், நன்றாக தண்ணீர் அருந்த வேண்டும். அதனால் வெளியேறும் வியர்வை உள்ளே செல்லும் தண்ணீர் என இணைந்து, நமது உடலின் உஷ்ண நிலையை சீராக வைத்துக்கொள்ள  மிகவும் உதவுகிறது. கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்ளும் நண்பர்கள் மிகவும் முக்கியமாக 2 முதல் 4  டம்ளர்கள் மிதமான குளிர்ந்த நீரை ஒரு மணிக்கு ஒரு தடவையாவது குடித்துக்கொண்டே இருப்பது அவசியம். தர்பூசணி கோடை பழமாக கருதப்படும் தர்பூசணி பழம் புத்துணர்ச்சியை மட்டும் தரக்கூடிய பழம் அல்ல. வெயில் காலத்தில், உடலுக்கு தேவையான குளிர்ச்சியை தரக்கூடிய சிறந்த பழமாக இது கருதப்படுகிறது. தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் உடலின் வெப்பத்தையும் ரத்த அழுத்தத்தையும் சரி செய்து கொள்ள முடியும். கட்டி, ஆஸ்துமா, பெருந்தமனி வீக்கம், நீரிழிவு, பெருங்குடல் புற்று நோய் மற்றும் கீல் வாதம் போன்றவற்றை தர்பூசணி மூலம் குணப்படுத்த முடியும். வெள்ளரிக்காய் வெள்ளரிக்காயை வட்டமாகத் துண்டுகள் ... Read more

பெண்களுக்கு முதுகு வலி வரக்காரணம்

பெண்களில் 30 வயதைக் கடந்த பலரும் முதுகு, இடுப்பு மற்றும் கழுத்து வலியால் அடிக்கடி சிரமப்படுவார்கள். வீட்டு வேலைகளை முடித்ததும் சில பெண்களுக்கு விரல்கள் மரத்துவிடும். கழுத்தைத் திருப்பவே முடியாத அளவுக்கு வலி இருக்கும். அந்த வலி மற்ற பாகங்களுக்கும் பரவும். இந்த வலிக்கான முக்கியமான காரணம்… சமையல் அறைகளில் நாம் செய்யும் சின்னச் சின்னத் தவறுகள்தான். இதுபோன்ற தவறுகளைத் தவிர்க்கவும், ” ‘கிச்சன் எர்கனாமிக்ஸ்’ எனப்படும் சமையல் அறைப் பணிச் சூழல் சரியான முறையில் இருந்தாலே போதும் பிரச்னைகள் ஓடோடிவிடும். ஏற்கெனவே தவறாக அமைக்கப்பட்டுவிட்டாலும் எளிதாக அதைச் சரிசெய்துகொள்ளலாம்” எனச் சொல்லும் கவிதா விரிவாக விளக்கினார். சமைக்கும் முறை சமையல் மேடை அருகே நின்று நாம் சமைக்கும்போது, சமையல் மேடையின் உயரம் நமது உயரத்துக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். மேடை உயரமாக இருந்தால் கைகளை ஊன்றிக்கொண்டோ அல்லது சமையல் பாத்திரத்தை எக்கிப்பார்த்தோ சமைப்பதுபோல இருக்கக் கூடாது. இப்படிச் சமைத்தால், அடுப்பில் இருக்கும் ... Read more

உங்களுக்கு அசிடிட்டி உள்ளதா? – தெரிந்து கொள்ள அறிகுறிகள்

உங்களுக்கு அசிடிட்டி உள்ளது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்! ஒருவருக்கு அசிடிட்டி வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அசிடிட்டி பிரச்சனைக்கு, கண்மூடித்தனமாக மருந்து மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக, அதன் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே தெரிந்து கொண்டால், அதனை எளிமையான முறையில் சரிசெய்ய முடியும். மும்பையைச் சேர்ந்த பொது மருத்துவரான டாக்டர். ஆர்த்தி உலால் அசிடிட்டி பிரச்சனைக்கான அறிகுறிகளைக் பட்டியலிட்டுள்ளார். அந்த அறிகுறிகள் என்னவென்று தெரிந்து கொண்டு, உங்கள் அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபடுங்கள். நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்து, உங்களுக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டால், அதனை சாதாரணமாக விட்டுவிடுவோம். ஆனால் உண்மையில் அது அசிடிட்டி பிரச்சனைக்கான அறிகுறிகளுள் ஒன்று. அசிடிட்டி பிரச்சனை இருப்பின், அடிக்கடி கடுமைமான நெஞ்சு வலியை சந்திக்க வேண்டியிருக்கும். அதிலும் வலது பக்க மார்பக வலியுடன், கடுமையான அடிவயிற்று வலியை சந்தித்தால், அது அசிடிட்டிக்கான அறிகுறியாகும். இரைப்பையில் அமிலமானது ஒவ்வொரு 2-3 மணிநேரத்திற்கும் சுரக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ... Read more