அடிக்காதீங்க வாத்தியாரே

  • Categories: சமூகம், பகிர்வு, வாட்ஸ்ஆப் பகிர்வு

​யோவ்…… யார்யா நீயி…. இந்த தென்னமரத்தைப் போய் குச்சியால அடிச்சிக்கிட்ருக்க………

பின்ன என்ன சார்…..  போனவருசம் 60 தேங்கா கொடுத்துகிட்ருந்துச்சு.. இப்போ என்னடான்ன 30 கூட தரமாட்டீங்குது… என்ன நெனச்சக்கிட்ருக்கு…..

நீங்க என்ன லூசா சார்….. தென்ன மரம் காய் குறைவா தருதுன்னா..  அதுக்கு என்ன குறைன்னு பாருங்க.. உரம் கம்மியா இருக்கா…. இல்ல வேர்ல எதாவது சேதாரம் இருக்கா…. இல்ல தண்ணி சரியா பாய்ச்சலியா…. இல்ல எதாவது பூச்சி அரிச்சிருக்கான்னு பாருங்க… அதவிட்டுப்பட்டு அத அடிச்சா… பைத்தியக்காரத்தனமால்ல  இருக்கு…… 
இது பைத்தியக்காரத்தனம்னா.. உங்ககிட்ட படிக்கிற மாணவர்களை சரியா படிக்கலைன்னு பிரம்பால அடிக்கிறீங்களே..அது மட்டும் தப்பில்லையா… ஒரு மாணவன் சரியா படிக்கலைன்னா… அதற்கான சூழல் தப்பா இருக்கலாம்… அது அவங்க பேரண்ட்ஸா… இல்ல கூடப்படிக்கிற நண்பர்களா…. இல்ல அவன் கத்துக் கொள்ற முறையா… 

இத ஆராய்ந்து அதுக்கேத்தமாதிரி ட்ரீட் பண்ணுங்க… கண்டிப்பா பலன் இருக்கும்… அத விட்டுப்புட்டு மனரீதியாக பக்குவமில்லாத பசங்கள அடிச்சாமட்டும் படிச்சிருவாங்களா… நீங்களே சொல்லுங்க சார்…….. 
ஆமா சார்… நீங்க சொல்றது உண்மை தான்…. இதுவரைக்கும் நான் வாத்தியார் கிடையாது சார்…. இனிமே தான் சார் நான் சரியான வாத்தியாரா நடந்துக்கப் போறேன்….  என்னைய வாத்தியாரா ஆக்குன வாத்தியார் நீங்க தான் சார்…