வணிகம்

விஜய் மல்லையா பேட்டி – சிரிக்காமல், கோபப்படாமல் படிக்கவும்

இப்போதைக்கு இந்தியாவுக்குத் திரும்பி வர மாட்டேன் என்று தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். இந்தியாவில் வாங்கிய வங்கிக் கடன் ரூ.9,400 கோடியை திருப்பிச் செலுத்தாதது உள்பட பல்வேறு நிதி முறைகேடு வழக்குகளில் சிக்கியுள்ள மல்லையா இப்போது இங்கிலாந்தில் உள்ளார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அவரது கடவுச்சீட்டு முடக்கப்பட்டது. மேலும், மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்புமாறு பிரிட்டன் அரசிடம், வெளியுறவு அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், லண்டனில் இருந்து வெளியாகும் “ஃபைனான்ஷியல் டைம்ஸ்’ நாளிதழிற்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில் மல்லையா கூறியிருப்பதாவது: வங்கிக் கடன் பிரச்னைக்கு நியாயமான தீர்வைக் காண வேண்டும் என்றே நினைக்கிறேன். ஆனால் எனது பாஸ்போர்டை  முடக்குவதன் மூலமாகவோ, என்னைக் கைது செய்வதாலேயோ பணத்தைப் பெற முடியாது. நான் கட்டாய நாடு கடத்தல் நிலைக்கு உள்ளானேன். இந்தியாவுக்குத் திரும்ப வேண்டும் என்று ஆசைப் படுகிறேன். ஆனால், இப்போதைக்கு நாடு திரும்பும் எண்ணம் ஏதும் ... Read more

ஐஸ்லாந்து பிரதமரை காலி பண்ணிய பனாமா ஆவணங்கள்

பல மில்லியன் டாலர் பணத்தை வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதாகக் கூறும் ஆவணங்கள் வெளியானதையடுத்து ஐஸ்லாந்து நாட்டின் பிரதமர் சிக்முந்தூர் குன்க்ளோஸன் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். பனாமா நாட்டைச் சேர்ந்த சட்ட நிறுவனமான மொஸாக் ஃபொன்ஸெகவிலிருந்து கோடிக்கணக்கான ஆவணங்கள் சமீபத்தில் வெளியாகின. இந்த ஆவணங்களின்படி, வின்ட்ரின் என்ற நிறுவனத்தின் உரிமையாளர்களாக ஐஸ்லாந்து நாட்டின் பிரதமரும் அவரது மனைவியும் இருப்பது தெரியவந்தது. பல கோடி டாலர் பணத்தை அவர் பதுக்கியிருந்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து திங்கட்கிழமையன்று ஐஸ்லாந்து நாட்டின் நாடாளுமன்றத்தின் முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்நாட்டின் புதிய பிரதமராக விவசாயத் துறை அமைச்சர் பதவியேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, அந்நாட்டு குடியரசுத் தலைவரைச் சந்தித்த குன்க்ளோஸன், நாடாளுமன்றத்தைக் கலைக்கும்படி பரிந்துரைத்தார். ஆனால், அதற்கு குடியரசுத் தலைவர் மறுத்துவிட்டார். நம்ம ஊர் பிரபலங்கள் பெயர்களும் இதில் இருக்கு, ஆனா இங்கே இதுவரை எந்த பாதிப்பும் இல்லை.

விடாது தொடரும் பில் கேட்ஸ் : உலகின் நெ.1 பணக்காரர்

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை ஆண்டு தோறும் உலக அளவில் மிகப்பெரும் பணக்காரர்கள் யார் என்பதை வெளியிடும். இந்த ஆண்டும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் $ 75 பில்லியன் சொத்து மதிப்புடன், உலகின் பெரும் பணக்காரராக தொடர்கிறார். [post_ad]  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 2016 இல் இந்திய அளவில் முதலிடம் வகிக்கிறார். மொத்தம் 84 இந்தியர்கள் இந்த பட்டியலில் இடம் பிடித்து உள்ளனர். யாரெல்லாம் இந்த வரிசையில் இடம் பிடிப்பர்? அமெரிக்க டாலர் மதிப்பில் குறைந்தபட்சம் ஒரு பில்லியன் ( நம்மூர் கணக்குப்படி சுமார் 6700 கோடி ரூபாய்) வைத்திருப்போர் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிடும்.  ஃபோர்ப்ஸ் ‘2016 பட்டியலில் உலகின் பில்லியனர்கள் எண்ணிக்கை சென்ற ஆண்டின் 1,826 இல் இருந்து இப்போது 1810 ஆக குறைந்து விட்டது. கேட்ஸ் ஒரு வருடம் முன்பு இருந்ததை விட 4.2 பில்லியன் டாலர்  ஏழை ஆன போதிலும் $ 75 ... Read more